காதல் கைகூடாத 4 ராசிக்காரர்கள் இவங்கதான்!! ஐயோ பாவமே.. உங்க ராசியும் இருக்கா பாருங்க!!

First Published | Jun 29, 2023, 5:04 PM IST

சிலருக்கு காதல் வசப்படமால் இருக்க அவர்களுடைய ராசிதான் காரணம். அது என்னென்ன ராசிகள் என்று இங்கு காணலாம். 

காதல் இல்லாத வாழ்க்கையை யாரும் விரும்புவதில்லை. எல்லோரும் அன்பு காட்டினாலும் காதல் இல்லாவிட்டால் மனம் உடையும் நபர்கள் இங்கு பலர்.  ஆனால் எவ்வளவு முயன்றாலும் சிலருக்கு காதல் செட் ஆவதில்லை. ஏனெனில் சிலர் காதலில் துரதிர்ஷ்டவசம் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட 4 ராசிகளை இங்கு காணலாம். 

கடகம் 

கடக ராசிக்காரர்கள் எல்லா வழிகளிலும் தங்களுடைய உணர்வுகளை வெளிக்காட்ட முயற்சி செய்வார்கள். மனதுக்குள்ளும் வெளியிலும் ஒரே மாதிரியாக இருப்பார்கள். இப்படி வெறும் அன்பையும், உணர்ச்சியையும் கொண்டுள்ள ஆன்மாவிற்கு காதல் சாத்தியமில்லாதது. இவர்களுக்கு காதல் உறவு வெற்றியடையாவிட்டால் மீண்டு வர நீண்ட நேரம் எடுக்கும். 

Tap to resize

கன்னி 

இந்த ராசிக்கு அதிர்ஷ்டத்தை விட துரதிர்ஷ்டம் அதிகம். ஒருவரை நேசிக்கும் போது, இவர்கள் அழகாக நேசிப்பார்கள். இவர்களுக்கு ஒருவரை பிரிந்த பின்னர் மற்றொருவரை நேசிப்பது கடினம். ஆனால் நம்பிக்கையானவர்கள்.  

மகரம் 

இவர்களை சனி ஆளுகிறார். இவர்கள் காதலில் துரதிர்ஷ்டவசமானவர்கள் என சொல்லிவிட முடியாது. ஆனால் எப்போதும் தவறான நேரத்தால் மாட்டிக் கொள்வார்கள். தவறான நேரத்தில் சரியான நபரை சந்திப்பார்கள். அதனாலே காதல் கைகூடுவதில்லை. 

மீனம் 

இவர்கள் ஒருவருடைய மோசமான விசயத்தை கண்டு கொள்வதில்லை அல்லது அதை தவிர்க்கும் பழக்கம் உடையவர்கள்.   தங்கள் சொந்த மகிழ்ச்சியை தியாகம் செய்ய துணிவார்கள். கடந்த காலத்தை கடந்து வர தெரியும் என்பது மட்டும் தான் ஒரே ஆறுதல். 

காதலில் அதிர்ஷ்டம் கொண்ட ராசிகள்: 

மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம் ஆகிய ராசிகள் காதலில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். 

குறிப்பு: அன்பான வாசகர்களே, இந்த கருத்துக்கள் அனைத்தும் ஜோதிட நம்பிக்கைகள் அடிப்படையில் எழுதப்பட்டவை. அறிவியல்பூர்வமானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

Latest Videos

click me!