கணவன், மனைவி உறவில் உடலும் உள்ளமும் இணைந்திருப்பது தான் நல்ல தாம்பத்தியமாகும். ஆனால் சில பெண்கள் குழந்தை பிறந்த பிறகு உடலுறவு கொள்ள விரும்புவதில்லை. சில தம்பதிகளுக்குள் நாளடைவில் தாம்பத்தியம் சரியாக இருப்பதில்லை. இதற்கு ஆண்கள் சொல்லும் காரணம், பெண்கள் வயதாகும் போது பாலுணர்வை இழக்கிறார்கள் என்பதுதான். ஆனால் தங்களுடைய கணவனுடன் உடலுறவில் திருப்தி கொள்ளாத பெண்களே உடலுறவை பெரும்பாலும் தவிர்க்கின்றனர்.