பெண்களை ஈர்க்கும் ஆண்கள் யார் தெரியுமா? நீங்க இப்படிப்பட்ட ஆளா இருந்தா உங்களத்தான் விரும்புவார்களாம்!!

First Published | Jun 6, 2023, 3:22 PM IST

பெண்களுக்கு 6 வகையான ஆண்கள் மீது மட்டுமே ஈர்ப்பு வருகிறது. மற்றவர்களை கடந்து போய்விடுகிறார்கள். 

ஆணோ பெண்ணோ யாருக்கு யார் மீது வேண்டுமானாலும் ஈர்ப்பு வரலாம். ஆனால் இந்த ஈர்ப்புக்கு சில காரணங்கள் இருக்கும். பணம் அல்லது நம்பிக்கை, அழகு போன்ற பல்வேறு காரணங்களால் ஆண்கள் மீது பெண்களுக்கு ஈர்ப்பு வருகிறது. சில ஆளுமை பண்புகளாலும் ஆண்கள் மீது பெண்கள் மையல் கொள்கிறார்கள். இங்கு பெண்கள் விரும்பும் 6வகையான ஆண்கள் குறித்து காணலாம். 

அறிவான ஆண்கள்: 

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்ளும் ஆண்கள் மீது பெண்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கிறது. இந்த ஆண்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தை பெண்களிடம் நயமாக வெளிப்படுத்தும் போது அவர்கள் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களுடைய நகைச்சுவையான பேச்சும், சுவாரசியமான உரையாடல்களும் பெண்களிடம் நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. 

Tap to resize

கலை ஆர்வம் கொண்ட ஆண்கள்: 

இலக்கியம், இசை, ஓவியம், சினிமா போன்ற கலைகளில் ஆர்வம் உள்ளே ஆண்களை பெண்கள் மிகவும் விரும்புகிறார்கள். இவர்கள் தன்னிச்சையாக இயங்குவார்கள். இவர்களின் கலை ரசனை பெண்களை வெகுவாக இருக்கிறது. படைப்பாற்றலை இவர்கள் வெளிப்படுத்தும் விதம் பெண்களை வியக்க வைக்கிறது.

நம்பிக்கையான ஆண்கள்: 

நம்பிக்கையுடன் காணப்படும் ஆண்கள் பாதுகாப்பானவர்கள். அவர்களுக்கு தங்கள் திறமை மீது அதிக நம்பிக்கை இருக்கும். தன்னம்பிக்கை கொண்ட ஆண்கள் பிறர் முன்னிலையில் தனித்துவமாக தெரிகிறார்கள். இவர்கள் மற்ற ஆண்களை பார்த்து பொறாமை கொள்வதில்லை. தன் காதலி மீதும் நம்பிக்கை வைக்கிறார்கள். அதனால் பெண்களுக்கு பிடிக்கிறது. 

அக்கறையான ஆண்கள்:

தங்களுடைய தேவைகள் என்ன? விருப்பங்கள் என்ன? என்பது குறித்து அக்கறை காட்டும் ஆண்களை பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஒரு ஆண் தன் மீது அக்கறை காட்டுகிறார் என்ற உணர்வை பெண் அதிகம் ரசிக்கிறாள். 

ரொமான்டிக்கான ஆண்கள்: 

இவர்கள் காதலை வெளிப்படுத்துவதில் தயக்கம் கொள்ளாத ஆண்கள். ரொமான்டிக்கான விஷயங்களை அடிக்கடி செய்வார்கள். காதலியின் மனம் கவரும் விஷயங்களுக்காக மெனக்கெடுவார்கள். பூக்கள், பரிசுகள் போன்றவற்றை கொடுத்து அவ்வப்போது காதலியை சிலிர்க்க வைப்பார்கள். 

இதையும் படிங்க: செக்ஸில் ஈடுபடும்போது தன்னம்பிக்கை இல்லாத ஆண்களையும் சூப்பர் ஹீரோவாக காட்டும் 5 செக்ஸ் பொசிஷன்கள்!!

சாகசம் விரும்பும் ஆண்கள்: 

இந்த வகை ஆண்கள் தங்கள் வாழ்க்கையை சாகசங்களுடன் வாழ விரும்புகின்றனர். எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து இவர்கள் அச்சப்படுவதில்லை. அந்தந்த கணங்களில் தங்களை மகிழ்ச்சியூட்டும் செயல்களில் ஈடுபடுகின்றனர். கால் போன போக்கில் வாழ்க்கைப் பயணத்தை செய்வார்கள். இந்த வகை ஆண்கள் பெண்களுடன் வாழும்போது பிரச்சனைகள் வரும் என்றாலும், சில பெண்களுக்கு இவர்களையே மிகவும் பிடிக்கும்.

இதையும் படிங்க: First Time Sex: முதல் முதலா செக்ஸ் வச்சிக்குறப்ப.. இப்படியெல்லாம் நடக்கும்னு சொல்வாங்க.. ஆனா நம்பிடாதீங்க!!!

Latest Videos

click me!