வயது மூத்த ஆண்களை திருமணம் செய்வதால் என்ன ஆகும் தெரியுமா?பெண்களின் பகீர் அனுபவங்கள்! இப்ப யோசிச்சு என்ன செய்ய!

First Published | Apr 7, 2023, 4:49 PM IST

ஒரு பெண் தன்னை விடவும் அதிகமான வயதுள்ள ஆணை திருமணம் செய்து கொள்வதால் என்னென்ன விஷயங்கள் நிகழ்கின்றன என்பதை சில அனுபவங்களின் மூலம் இங்கு விளக்கியுள்ளோம்.

வயது மூத்த ஆணுடன் திருமணம் செய்துகொள்வது இந்தியாவில் புதுமையான விஷயம் அல்ல. பெண்களுக்கு பெரும்பாலும் அவர்களைவிட மூத்த ஆண்களை தான் மணம் முடித்து வைக்கின்றனர். ஆனால் வயது வித்தியாசம் 5 ஆண்டுகள் அல்லது 10க்கும் மேலாக இருக்கும்போது சில முரண்கள் திருமண வாழ்க்கையில் வருவதாக பெண்கள் தங்களுடைய அனுபவத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அதை இங்கு காணலாம். 

அனுபவசாலி! 

வயது மூத்த ஆண்கள் அந்த விஷயத்தில் சிறந்தவர்கள் என பெண் ஒருவர் பகிர்ந்து கொண்டார். "நான் எப்போதும் ஒரு வயது மூத்த ஆணை திருமணம் செய்ய விரும்பினேன். ஏனென்றால் அவர்கள் அதிக அனுபவமுள்ளவர்கள். நான் இப்போது என் கணவரை சந்தித்தபோது தான் நான் அதிர்ஷ்டசாலியாக மாறினேன்! அவர் படுக்கையில் அற்புதமாக நடந்து கொள்வார். ஆச்சரியம் என்னவென்றால், அவர் எனக்கு அடிபணிந்து நடப்பார். என்னை எப்படி மகிழ்விக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும்! நான் விரும்பும் அனைத்தையும் எப்போதும் அவர் செய்கிறார், நீங்கள் திரைப்படங்களில் பார்த்த காதல் விஷயங்களை கூட என் கணவர் நிஜத்தில் எனக்கு செய்கிறார். எங்களுக்குள் நடக்கும் காதலும் காமமும் மனதைக் கவரும் வகையிலானவை. ஒவ்வொரு பெண்ணுக்கும் அவரைப் போன்ற ஒரு ஆண் கிடைக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்!" என முடித்துள்ளார். 


தலைமுறை இடைவெளி!  

பல ஆண்டுகள் வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் தலைமுறை இடைவெளி வரும். அதாவது ரசனையில் வேறுபாடு வரலாம். ஒரு பெண் இவ்வாறாக ஆரம்பித்தார்: "நாங்கள் திருமணம் செய்துகொண்டபோது தீவிரமாக சொல்லப்போனால், வெறித்தனமாக காதலித்தோம். ஆனால் அதன் பிறகு எங்களுக்குள் பல மாதங்களாக, ஒரு பெரிய தலைமுறை இடைவெளி இருப்பதை உணருகிறேன். இது என்னுள் நிறைய விரக்தியை ஏற்படுத்தியது. அவர் அமைதியாக இருக்கிறார். அவர் என்னை விட 12 வயது மூத்தவர். எனக்கு 30 வயது, அவருக்கு 42 வயது, எங்களுக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. நான் தான் இந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தேன், அதனால் நான் ஒவ்வொரு நாளும் அதில் உறுதியாக இருக்கிறேன். அவருடன் உடலுறவு ஆரம்பத்தில் நன்றாக இருந்தது, ஆனால் இப்போது அவர் தனது வலிகள் குறித்து தொடர்ந்து புகார் சொல்கிறார். ஒத்துழைப்பதில்லை. சில நேரம் இளம்தலைமுறைக்கு வெட்கமில்லை என்கிறார். அவருடைய ஆளுமையை மிகவும் விரும்பினேன். ஆனால் இப்போது அப்படியில்லை. நானே என்னை சமாதானம் செய்து கொள்ள வேண்டும் அல்லது விவாகரத்துக்குச் செல்ல வேண்டும். வேற வழியில்லை என்பது எனக்கு மிகவும் வருத்தமளிக்கிறது" என வேதனை தெரிவித்தார். 

இதையும் படிங்க: சாணக்கிய நீதிபடி, பெண்கள் எப்போதும் இந்த 4 விஷயங்களில் ஆண்களையே மிஞ்சிடுவாங்க! உண்மையா?

பிரபல ஆளுமைகள் வயது மூத்தவர்களை திருமணம் செய்வதை கண்டு பலரும், அதன் மீது ஆர்வம் கொள்வதை காணமுடிகிறது. அப்படியொரு பெண் பகிர்ந்த அனுபவம் இதோ! "என்னைவிட 10 வயது மூத்தவரை திருமணம் செய்ய நினைத்தேன். அதனால் என் பெற்றோரும் அப்படியே வரன் பார்த்தார்கள். எனக்காக வயது மூத்த அதே நேரம் அந்தஸ்துள்ள ஒரு பணக்காரரை பேசி முடித்தார்கள். ஆனால் அப்போது எனக்கு தெரியாது. நான் என்னுடைய சொந்த மகிழ்ச்சிக்கு சூனியம் வைத்து கொண்டேன் என்று. திருமணம் நடந்தது. அவர் என் மீது அன்பு வைத்தாலும், என்னை ஒரு குழந்தையைப் போல நடத்துகிறார். அவரது பாலுணர்வு நன்றாக இருக்கிறது, ஆனால் அவர் மிகவும் கடினமானவர், அதனால் எனக்கு மிஷனரி பொசிஷன் மட்டுமே நடக்கிறது. ரொமான்ஸ் இல்லை. என் பாட்டியின் வயதுடைய என் மாமியாரையும் நான் சமாளிக்க வேண்டும். ஆண் பெரியவராக இருந்தால் அவருடைய அம்மாவுக்கு வயதாகிவிடும் என்பதை நான் உணரவில்லை. என் மாமியாருக்கு 70 வயது ஆகிறது. இப்போது எங்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துவிட்டது. அவருடைய குடும்பம் மிகவும் செல்வந்தர்களாகவும் செல்வாக்கு மிக்கவர்களாகவும் இருப்பதாலும், எனது முடிவு என் பெற்றோருக்கு பிடிக்காததாலும் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்கவில்லை என என்னால் சொல்ல முடியவில்லை. எனக்கு இன்னும் குழப்பமாக உள்ளது" என குழப்பத்துடன் முடித்துள்ளார். 

வயது வித்தியாசம் என்பது 0 முதல் 3 ஆண்டுகள் மட்டுமே ஆணுக்கும் பெண்ணுக்கும் நல்லது. அதிகமாக 5 அல்லது 6 ஆண்டுகள் இருக்கலாம். ஆனால் 10 ஆண்டுகள் என்பது சரியான தேர்வில்லை என்றே ஆய்வு முடிவுகள் கூட சொல்கின்றன. உங்களுடைய திருமண பந்தம் காதலும் காமமும் பெருகி இருந்தால் மட்டுமே வயது, பணம் உள்ளிட்ட விஷயங்கள் பொருட்டாக இருக்காது. இல்லையென்றால் எல்லாமே குற்றமாக தான் இருக்கும். 

இதையும் படிங்க: Explained: சட்டப்படி, பாலியல் துன்புறுத்தலுக்கு தண்டனை என்ன?பெண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 2 சட்டங்கள்

Latest Videos

click me!