முதலிரவின் போது மனைவியிடம் சொல்லக்கூடாத 3 விஷயங்கள் !என்னென்ன தெரியுமா!

First Published | Apr 7, 2023, 7:40 AM IST

உடலுறுவில் ஈடுபடும் போது ஆண்கள் அவர்தம் மனைவியிடம் சொல்லக்கூடாத 3 வியஷங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஆயிரம் இரவுகள் வந்திருந்தாலும் முதலிரவு என்பதை எவரும் அப்படி எளிதில் கடந்து செல்ல முடியாது. திருமண தினத்தின் முதல் இரவே முதல் இரவாகும். தாம்பத்தியத்தின் அத்தியாயத்தை தொடங்கும் நிலையில் இருக்கும் மணப்பெண்ணிடம் கையில் பால் தந்து முதலிரவு அறைக்குள் அனுப்பி வைப்பது காலம் காலமாக இன்றும் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. பூக்கள்,பழங்கள்,பல்வேறு விதமான இனிப்புகள், நட்ஸ்கள்,சாக்லேட்கள் மற்றும் அலங்காரமான படுக்கை என்று முற்றிலும் புதுமையான தோற்றத்தில் அந்த அறை மாறிவிடும்.

இப்படியான இந்த கணவன் மனைவி உறவு முதலில் பாலில் இருந்து தொடங்கி பின் படிப்படியாக உடலுறவிற்கு செல்லும். அப்படி உடலுறுவில் ஈடுபடும் போது ஆண்கள் அவர்தம் மனைவியிடம் சொல்லக்கூடாத 3 வியஷங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

ஆணுறுப்பின் அளவு:

முதல் இரவில் செய்யப்படும் தாம்பத்தியத்தில் ஆண்கள் தங்கள் மனைவியிடம் ஆணுறுப்பு அளவு பற்றி பேசக்கூடாது.அதாவது ஆடைகளை களைத்த பின்னர் ஆண்கள் ஒருபோதும் ஆண்குறியின் அளவை பற்றி பேசவேக் கூடாது. நூற்றில் 80 % பேருக்கு தங்களின் ஆணுறுப்பு சிறிய அளவில் இருப்பது போல் எண்ணுவார்கள். ஆனால் இது முற்றிலும் தவறான எண்ணம் என்று பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர் . இருப்பினும், தங்கள் ஆடையை எடுத்த பின்னர் ஆணுறுப்பின் அளவு சிறிதாக இருக்கிறது, வலிந்து இருக்கிறது போன்ற விஷயங்களை என்றும் மனைவியிடம் சொல்லவேக் கூடாது. இது சமயத்தில் தேவையற்ற பிரச்சனையை உருவாக்கும் .


விறைப்பு தன்மை :

இரண்டாவதாக மனைவியிடம் ஆண்கள் விரைப்பு தன்மை பற்றி பேசவேக் கூடாது. விறைப்பு தன்மை குறைவாக உள்ளது அல்லது விறைப்பு தன்மை பிரச்சனை உள்ளது போன்றவற்றை மறந்தும் சொல்லிடக்கூடாது.

சைக்கலாஜிக்கல் படி பல காரணங்களால் இந்த விறைப்பு தன்மையில் மாற்றம் ஏற்படும், மிகுந்த சோர்வு அல்லது தூக்கமின்மை போன்றவற்றால் விறைப்பு தன்மையில் வேறுபாடு இருக்கும்.

ஆக திருமண நாளின் போது உடல் அசதியின் காரணமாக ஒரு சிலரால் தாம்பத்யத்தில் முழுமையாக ஈடுபட முடியாமல் போக வாய்ப்பு உள்ளது. அப்படியான சூழலில் விறைப்பு தன்மை குறை உள்ளது என்று நீங்களாகவே பொய்யான ஒரு வாக்கை சொல்லவே கூடாது. இப்படி சொல்லப்படும் ஒரு தவறினால் மனைவியிடம் அது பல்வேறு விதமான தேவையற்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

செக்ஸ் முன் அனுபவம்:

உடலுறவு ஆரம்பிக்கும் நேரத்தில் இப்படி செய்தால்,இந்த சுகம் கிடைக்கும். இப்படி செய்துள்ளேன், அந்த மாதிரி செய்துள்ளேன் என்று முன் அனுபவ கதையை ஒரு போதும் உளறக்கூடாது . இப்படியான முன் அனுபவத்தை நீங்கள் பகிர்ந்து கொள்வதற்கான நேரம் முதலிரவு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கான புரிதல் உண்டான பின் அதைப் பற்றி சொல்லிக் கொள்ளலாம்.முதல் இரவின் போது ஒரு போதும் உங்களுடைய பழைய அல்லது முன் அனுபவங்களை உங்கள் மனைவியிடம் சொல்லி உங்களது முத்தான முதலிரவை முறித்துக் கொள்ளாதீர்கள் .

இந்த 3 விஷயங்களை தவிர்ப்பதன் மூலம் தேவையற்ற திருமண பிரிவுகள், முறிவுகள் ஏற்படுவதை தடுக்கலாம்.

Weight Loss-உடல் எடையை குறைக்க இயற்கை தந்த குடம்புளியை ட்ரை செய்து பாருங்க! வெறும் 3 நாட்களில் சூப்பர் ரிசல்ட்

Latest Videos

click me!