பாய்பிரெண்டின் குறட்டை சத்தத்தை வைத்து சம்பாதிக்கும் பெண்! என்னது குறட்டைக்கு இவ்ளோ காசா?

First Published | Apr 21, 2023, 4:52 PM IST

பாய்பிரெண்டின் குறட்டை சத்தத்தை வைத்து சம்பாதிக்க தொடங்கிய பிறகு, அதனை வெறுப்பதை நிறுத்திவிட்டதாக இளம்பெண் தெரிவித்துள்ளார். 

அனால் மால்ஃபேர் (26) என்பவர் லூயிஸ் (33) என்பவருடன் கடந்தாண்டு வாழ தொடங்கினார்.  இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தபோதும், இரவில் தூங்கும்போது அனால் சிரமப்பட்டு வந்திருக்கிறார். ஏனென்றால் லூயிஸுக்கு குறட்டை விடும் பழக்கம் இருந்துள்ளது. அந்த சத்தமான குறட்டையால் அனால் எரிச்சலடைந்துள்ளார். ஆனால் இப்போது அதை வைத்து சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டாராம், அதனால் கோவம் குறைந்துவிட்டது.  அது எப்படி? சம்பாதிக்க முடியும் என நினைக்கிறீர்களா? 

தொடக்கத்தில் தன் பாய்பிரெண்டின் குறட்டை சத்தம் தூக்கத்தை கெடுப்பதாக சின்ன சண்டைகள் செய்திருக்கிறார் அனால். தன்னுடைய குறட்டை அவ்வளவு மோசமாக இல்லை என்று லூயிஸ் தன் காதலி அனாலிடம் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். ஆனாலும் குறட்டையை சகித்து கொள்ள முடியாமல் தான் அனால் ஒரு காரியத்தை செய்திருக்கிறார். 

Tap to resize

அதாவது தன்னுடைய பாய்பிரெண்டின் 1 வருட குறட்டை ஒலிகளை தொடர்ந்து பதிவு செய்து வைக்கலாம் என நினைத்துள்ளார். தொடர்ந்து தன் முயற்சியில் பின்வாங்காமல் அப்படியே பதிவும் செய்திருக்கிறார். இதை வாய்ப்பு கிடைக்கும்போது பாய்பிரெண்டுக்கு போட்டு காட்டியிருக்கிறார். குறட்டை சத்தத்தில் என்ன இருக்கு? ஆனாலும் பதிவு செய்து கேட்டிருக்கிறார்கள். அவர்கள் கேட்டதோடு நிறுத்தவில்லை, அதை உலகமே கேட்க வேண்டும் என்று அனால் மால்ஃபேர் முடிவு செய்து, குறட்டை ஒலியில் இருந்து பாடல்களை உருவாக்க முயற்சித்திருக்கிறார். 

இதையும் படிங்க: பாராட்டுக்களுக்காக பெண்கள் இப்படியும் செய்வாங்களா? ஆண்களை ஈர்க்கும் போது தான் அப்படி! ஒரு பெண்ணின் வாக்குமூலம்

இசையமைப்பாளர்களான தனது நண்பர்கள் சிலரிடம், தான் பதிந்த குறட்டை ஒலிகளை கொடுத்து பாடல்களை உருவாக்கச் சொல்லியிருக்கிறார். கடந்த ஆண்டு ஸ்பாட்டிபை ( Spotify) இல் அந்த டிராக்குகளைப் பதிவேற்றினார். மேலும் அவை விரைவாக ட்ரெண்ட் ஆகியுள்ளது. இனிமையான குறட்டைகளைக் கேட்க விரும்பும் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. "snoring machine'' என்ற அந்த பதிவுகள் 16 ஆயிரத்து 800 மாதாந்திர கேட்போர்களிடம் பரவியுள்ளது. அதில் மிகவும் பிரபலமானது  "lite snore" என்ற பாடல் தான். இதன் மூலம் அவருக்கு 2627.22 ரூபாய் (32 டாலர்) கிடைக்கிறதாம். இது ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்படுகிறது. 

இதையும் படிங்க: உடலுறவின் போது ஆண்கள் இப்படி நடந்துகிட்டா பெண்கள் மயங்கிடுவாங்க!!

Latest Videos

click me!