ஆண்கள் 40 வயதை தாண்டும்போது அவர்களுடைய ஆணுறுப்பு சுருங்கும் என்ற எண்ணம் சிலருக்கு இருக்கிறது. சிலர் நாள்தோறும் உடலுறவு கொள்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் நாற்பது வயதுக்கு பின் விறைப்புத்தன்மை கோளாறுகள் ஏற்படுகிறது. இந்த உணர்வு வந்த பின்னர் உறவில் ஈடுபடுவதில் சிக்கல் வந்துவிடுகிறது. அடிக்கடி உடலுறவு கொண்டால் உறுப்பு சுருங்கும் என்ற ஐயமும் சிலருக்கு ஏற்படுகிறது. இந்த கேள்விகளுக்கான பதில் பின்வருமாறு:
ஆணுறுப்பின் அளவு அப்படி வயதுக்கு ஏற்படி சுருங்காது. நாள்தோறும் உடலுறவு வைத்துக் கொள்வதால் ஆணுறுப்பு அளவு மாறுவதில்லை. சிலருக்கு ஆணுறுப்பு விறைப்படையும் நேரம் மிகவும் குறைவாக இருக்கலாம். சிலருக்கு ஆணுறுப்பு ரொம்ப நேரம் சுருங்கிய நிலையில் காணப்படும். இதை கவனிக்கும் போது சில ஆண்கள் தங்களுடைய உறுப்பு சுருங்கி விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஒவ்வொரு ஆண்களுக்கும் அவர்களின் உறுப்பின் அளவு மாறுபடும்.
ஆண் உறுப்பின் பருமனை பொறுத்தவரை, 5 அங்குலம் வரை இருக்கலாம். விறைப்பாக இருந்தால் ஆணுறுப்பு 6.4 அங்குலம் வரை மாறும். ஆனால் ஒவ்வொருவருக்கும் அந்த அளவு மாற்றம் கொண்டிருக்கும். அளவில் வித்தியாசமிருந்தால் உடலுறவில் குறை வரும் என்பது கிடையாது. ஆண்களுடைய உடல் பருமனாக இருக்கும்பட்சத்தில், அவருடைய ஆணுறுப்பில் மாற்றம் காணப்படும். அதிக உடல் எடை கொண்டவர்களின் ஆணுறுப்பு வெளியே சரியாக தெரியாது. விறைப்புத்தன்மை, சுருக்கம் ஆகியவற்றை மட்டும் கவனித்து எந்த முடிவுக்கும் வராதீர்கள். மருத்துவரிடம் ஆலோசித்தால் அவர் விறைப்புத்தன்மையில் கோளாறு இருந்தால் சிகிச்சை அளிப்பார்.
இதையும் படிங்க: ஆண்களே!! நீங்க இந்த 1 விஷயத்தை நிறுத்தினால்.. உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது!!