உடலுறவின் போது ஆண்கள் இப்படி நடந்துகிட்டா பெண்கள் மயங்கிடுவாங்க!!

First Published | Apr 21, 2023, 3:08 PM IST

ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் பெண்களை ஈர்க்கும். இதனால் அவர்களுக்குள்ளான பந்தம் ரொம்ப நாள்கள் நீடிக்கும். 

உடலுறவில் ஈடுபடுவதற்கு முன் பாலியல் விளையாட்டுகளில் ஈடுபடுங்கள். மெல்ல அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து உச்சமடைந்து மீண்டும் இருவருக்கும் விருப்பம் இருந்தால் தொடருங்கள். ஒரே மாதிரியாக உறவில் ஈடுபடாமல் அவ்வப்போது வெவ்வேறு பொசிஷன்களில் முயல வேண்டும். குறிப்பாக உங்கள் மனைவியின் தேகத்தை ரசித்து தொட்டு உணர்ச்சி நரம்புகளை மீட்டுங்கள். உடலுறவில் அது ரொம்ப முக்கியம். 

வீட்டு விவாகரங்களை எப்படி மனைவிடம் உரையாடுகிறீர்களோ அப்படிதான், படுக்கையிலும் சில உரையாடல்களை நிகழ்த்த வேண்டும். அப்போது தான் மனைவிக்கு உங்கள் மீது ஒரு அபிப்ராயம் வரும். நீங்கள் மட்டுமே பேசுவது, உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே படுக்கையில் சாதிப்பது உங்களுக்கிடையேயான இடைவெளியை அதிகமாக்கும். உங்கள் மனைவியின் பாலியல் விருப்பு வெறுப்புக்கு மதிப்பளிக்க கற்று கொள்ளுங்கள்.. அப்படி எந்த முயற்சியும் எடுக்காமல் எடுத்ததும், உடலுறவின் கிளைமாக்ஸுக்கு குதித்தோடும் வறட்டு கணவர்களை எந்த மனைவிக்கும் பிடிப்பதில்லை. 


இரவில் தான் உடலுறவு கொள்ள வேண்டும் என்பது கிடையாது. பகலிலும் நேரம் கிடைக்கும் போது உறவு வைத்துக் கொள்ளலாம். சிலருக்கு பகலில் உடலுறவு வைப்பது விருப்பம் இல்லாமல் இருக்கும். அது குறித்து தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். ஆனால் வெறுமனே இருட்டில் துழாவுவதை விட பகலில் கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து உடலுறவு ஈடுபடும் போது உங்களுக்குள்ளான நெருக்கம் அதிகமாகும். உழைத்து களைத்து வீடு திரும்பும் பல ஆண்களுக்கு இரவில் உடலுறவு கொள்ள நாட்டம் ஏற்படுவதில்லை. அவர்களுக்கு இந்த முறை உதவியாக இருக்கும். ஆண்களுக்கு காலை, மதியம் ஆகிய வேளைகளில் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பு அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் உறவு கொள்ளும் போது இன்னும் நன்றாக இயங்க முடியும். 

அவ்வப்போது உங்களுடைய மனைவிக்கு மசாஜ் செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இதனால் உடலளவில் அவரை இன்னும் அதிகமாக நெருங்க முடியும். அது மட்டுமின்றி அவருடைய களைப்பை நீக்கும் வண்ணம் மசாஜ் செய்யும் போது உங்களுடைய அன்பும் பெருகும். உடலுறவு கொள்ளும் போது வலிக்கிறது என உங்களுடைய துணை சொல்லும் போது அதற்கு செவிமடுங்கள். வெறிகொண்டு செயல்படாதீர்கள் இதனால் உடலுறவு மீதான விருப்பத்தை உங்களுடைய துணை இழக்கலாம். 

இதையும் படிங்க: ஆண்களே!! நீங்க இந்த 1 விஷயத்தை நிறுத்தினால்.. உங்கள் செக்ஸ் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராது!!

உடலுறவு முடிந்த பிறகு துணைக்கு முத்தம் கொடுப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அவ்வப்போது கட்டி அணைப்பதையும் மறந்து விடாதீர்கள். ஏனென்றால் இந்திய ஆண்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் தங்களுடைய மனைவிக்கு முத்தம் கொடுப்பது இல்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: வயதானால் ஆணுறுப்பு சுருங்கி போகுமா? என்னங்க சொல்றீங்க!! முதல்ல இத படிங்க!

Latest Videos

click me!