திருமணமான தம்பதிகள் இணைந்து வாழும்போது சின்னசின்ன காரணங்கள் கூட கள்ள உறவை ஏற்படுத்துகிறது. எல்லாமே சரியாக இருந்தாலும் சில பெண்கள் திருமணத்தை மீறிய உறவில் இருக்கின்றனர். முன்பெல்லாம் ஆண்கள் மீது மட்டுமே கள்ள உறவுக்கு பழி போடப்பட்டது. தற்போது பெண்களும் முண்டியடித்து அந்த வரிசைக்கு வந்துவிட்டனர். ஆண்களை மாதிரியே பெண்களும் ஏமாற்றுவதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. அவை ஒரே மாதிரியாகவும் உள்ளன.
அன்புக்கான ஏக்கம்:
தன்னுடைய துணை போதுமான அன்பையும் அரவணப்பை கொடுக்காவிட்டால் கள்ள உறவு வருகிறது. தன்னை கணவன் கவனிக்கவில்லை என நினைக்கும் பெண்கள் ஏமாற்றுகிறார்கள். அன்பு, புரிதலின்மை, கவனிப்பு குறைவாகும்போது, காதல் உறவில் இருந்து பெண் பின்வாங்குகிறாள். இதனை காரணமாக சொல்லிக் கொண்டு உடல்ரீதியாகவோ, உணர்வுகளின் அடிப்படையிலோ தொடர்பு ஏற்படுகிறது.
பாலியல் ஆசை:
தங்கள் துணையிடம் உடல்ரீதியான ஈர்ப்பு இல்லாவிட்டால் சில பெண்கள் ஏமாற்றுகிறார்கள். பெண்களின் செக்ஸ் கற்பனைகள், பாலியல் விருப்பங்களைப் புரிந்து கொள்ளாமல் நடக்கும்போதும், கணவனை ஏமாற்ற சில பெண்கள் துணிகின்றனர். தன்னுடைய உறவில் கிடைக்காத மகிழ்ச்சியை பாலியல் இன்பத்தை இன்னொருவருடன் பெற துடிக்கலாம்.
உணர்வு சிக்கல்:
சுதந்திரம் இல்லாத உறவு அதாவது கணவனின் கட்டுப்பாடுகளால் சிக்கியதாக உணரும் பெண்கள் அந்த உறவிலிருந்து தப்பிக்க நினைக்கிறார்கள். சொல்ல முடியாத ஆசை, விடுதலை அடையும் துடிப்பு ஆகியவை அவர்களை கள்ள உறவை நோக்கி நகர்த்துகிறது.
தகுதி:
தங்களை தகுதியில்லாதவர்களாக நினைக்க வைக்கும் துணையுடன் இருக்க பெண்கள் விரும்பவில்லை. தீராத தனிமை, சிறைக்குள் அடைபட்ட உணர்வு பெண்களை கணவனை தவிர மற்றவர்களிடம் அன்பு, அக்கறையை தேட தூண்டுகிறது.
திருப்தியின்மை:
தன்னுடைய கணவரோ அல்லது காதலனோ திருப்தியான உடலுறவு வைத்தாலும், எப்போதும் கூடவே இருந்தாலும் கூட சில பெண்கள் தாங்கள் நினைத்தது போல அன்பை பெறவில்லை என்ற அதிருப்தியில் வேறொரு துணையிடம் திரும்புகிறார்கள். நேசிப்பதை போலவே அதை உணர்த்துவதும் இங்கு முக்கியம்.