முதலிரவில் தம்பதிகள் ஏன் பால் குடிக்கிறார்கள் தெரியுமா? யாருக்கும் தெரியாத சுவாரசியமான பின்னணி!!

First Published | Jun 16, 2023, 3:37 PM IST

முதலிரவில் இந்திய தம்பதிகள் பால் குடிப்பதற்கான காரணம் தெரிந்தால் உங்களுக்கு நிச்சயமாக வியப்பு வரும். 

இந்திய கலாச்சாரத்தில் பல்வேறு மரபுகள் பின்பற்றப்படுகின்றன. அதிலும் மத ரீதியான சடங்குகள் இந்தியாவின் கலாச்சாரத்தின் முதுகெலும்பாக அமைகின்றன. அதிலொன்று தான் திருமணத்தன்று நிகழும் முதலிரவில் குங்குமப்பூ, பாதாம் கலந்த பால் குடிப்பதும். சிலர் இதை வெறும் மதரீதியான சடங்காக கருதினாலும், இந்த நடைமுறைக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் உள்ளது.

புதிதாக திருமணமான இந்து தம்பதிகளுக்கு பொதுவாக முதலிரவு அன்று குங்குமப்பூ மற்றும் பாதாம் கலந்த பால் கொடுப்பது வழக்கம். இதற்கான உண்மையான காரணத்தை நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? சிலர் இதனுடைய உண்மையான அர்த்தத்தை அறிந்திருந்தாலும், பலர் விவரம் தெரியாமல் எல்லோரும் செய்ய சொல்கிறார்களே என்று செய்கிறார்கள். காம சூத்ராவில் குங்குமப்பூவை பாலுடன் கலந்து குடிப்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. முதல்முதலாக உறவைத் தொடங்குவதற்கான இனிமையை குங்குமப்பூ பால் தரும் என்று நம்பப்படுகிறது. 

Tap to resize

முதலிரவில் பால் கொடுப்பதன் உண்மை பின்னணி: 

காம சூத்ரா என்பது காமம், காதல், உறவு எல்லாவற்றையும் புரிந்து கொள்ள உதவும் நூல் ஆகும். இந்த நூல் பாலியல் செயல்பாட்டின் போது சகிப்புத்தன்மைக்காக பால் பயன்படுத்த வேண்டும் என சொல்லப்படுகிறது. கருஞ்சீரகச் சாறு, தேன், சர்க்கரை, மஞ்சள் மற்றும் மிளகு ஆகியவற்றை பாலில் சேர்த்து குடிப்பதன் மூலம் தம்பதியரின் முதலிரவு சுவாரசியமாக மாறும். பண்டைய இந்திய நூல்களின்படி, புதுமணத் தம்பதிகளுக்கு அவர்களின் முதலிரவில் குங்குமப்பூ மற்றும் பாதாம் கலந்த பால் கொடுப்பது அவர்களின் உடலில் புரதச்சத்தை அதிகரிக்கத்தான். இதன் மூலம் அவர்களின் ஆற்றல் அதிகரிக்கும். திருமண நாளில் அவர்கள் பகல் முழுவதும் களைப்பாக இருந்திருப்பார்கள். ஆகவே இரவில் அவர்களின் ஆற்றலைப் பலமடங்கு பெருக்க பால் கொடுக்கிறார்கள். 

இதனால் அவர்களுடைய பாலுணர்வு அதிகமாகும். ​முதலிரவில் பால் குடிப்பது உடலுறவுக்கான நமது விருப்பத்தைத் தூண்டுகிறது. ஆண்களுக்கு விரைவான உயிர்ச்சக்தியை கொடுக்கும். குங்குமப்பூவும் பாலுணர்வைக் கொண்டுள்ளது. அதை பாலுடன் கலப்பது ஆற்றலை அதிகரிக்கிறது. முதலிரவில் பால் குடித்தால் புதுமணத் தம்பதிகளின் பதற்றம் குறையும். மகிழ்ச்சி ஹார்மோனான செரோடோனின் சுரப்பு அதிகமாகி மனநிலையை மேம்படுத்தும். மனச்சோர்வைக் குறைக்க உதவும் ஆக்ஸிஜனேற்ற திறன்களும் குங்குமப்பூ பாலில் உள்ளன. 

சில பழங்கால குறிப்புகளின்படி, முதலிரவில் பால் அருந்துவது உடலுறவில் ஈடுபடுவதற்கு ஆற்றலை அளிக்கும் என நம்பப்படுகிறது. இது போன்ற காரணங்களுக்காக தான் முதலிரவில் பால் குடிப்பது பழக்கமாக மாறியது. இதை பின்பற்றினால் முதலிரவில் மனம் மற்றும் உடல் சோர்வில்லாமல் இயங்கலாம். 

இதையும் படிங்க: முட்டை சாப்பிட்டால் செக்ஸ் மீது ஆசை அதிகரிக்குமா?

Latest Videos

click me!