பெரும்பாலானோர் முட்டையை விரும்பி உண்பார்கள். ஏனென்றால் அதில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது. பசியை கட்டுக்குள் வைக்கும். முட்டையில் வைட்டமின் பி6, வைட்டமின் பி5 ஆகியவை நிறைந்துள்ளது. இவை தான் பாலுணர்வை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் ஹார்மோன் அளவை சமப்படுத்த உதவுகிறது.
முட்டை பாலியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால் இதற்கு நேரடி ஆதாரம் இல்லை. இருப்பினும் தினமும் முட்டை உண்பது பல உடல்நல பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கிறது. முட்டை எப்படி உடலுறவு ஆசையை தூண்டுகிறது என இப்போது பார்க்கலாம்.
முட்டை வைட்டமின்கள், தாதுக்களின் பொக்கிஷம். இந்த ஊட்டச்சத்துக்கள் ஹார்மோன்களின் உற்பத்தி மற்றும் சமநிலைக்கு உதவுகின்றன. அவை பாலியல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்குத் தேவையான புரதத்தின் முக்கிய ஆதாரமாக முட்டை உள்ளது. முட்டை உங்களின் ஆற்றல் அளவையும் அதிகரிக்கும். ஆண்களுக்கு இருக்கும் முன்கூட்டிய விந்துதள்ளுதல் மற்றும் விறைப்புத்தன்மையின் அபாயத்தைக் குறைக்கும்.
முட்டையில் வைட்டமின் பி5 (பாந்தோதெனிக் அமிலம்), வைட்டமின் பி6 (பைரிடாக்சின்) நிறைந்துள்ளது. இவை இரண்டும் பாலியல் ஹார்மோன்களின் உற்பத்திக்கு உதவுகின்றன. இந்த வைட்டமின்கள் ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்த உதவுகின்றன. இது பாலுணர்வையும் அதிகரிக்கிறது.