பெண்கள் ஏன் ப்ரபோஸ் பண்றதில்ல தெரியுமா?

First Published | Mar 29, 2023, 5:28 PM IST

பெண்கள் ஏன் ப்ரபோஸ் (propose) செய்வதில்லை என்ற கேள்விக்கு பெண்கள் சொன்ன காரணங்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன. 

பொதுவாக திரைப்படங்கள், நாவல்கள், பாடல்கள் முதற்கொண்டு எல்லாமே ஆண் முதலில் காதல் வயப்பட்டு ப்ரபோஸ் (propose) செய்வது போலவே இருக்கும். பெண்கள் ஆண்களுக்கு எஸ்/ நோ என்ற பதிலை சொல்வதை தான் காட்டுவார்கள். பல ஆண்டுகளாக தமிழ் சினிமா கதைகள் இப்படி தான் அமைந்துள்ளன. இந்த நேரத்தில் பெண்கள் ஏன் ஆண்களுக்கு ப்ரபோஸ் செய்வதில்லை என்ற கேள்வியை சமூக வலைதளத்தில் ஒருவர் கேட்டார். அப்போது பல பெண்கள் தாங்கள் ஏன் ப்ரோபோஸ் செய்யவில்லை என்ற காரணத்தை போட்டு உடைத்தனர். அதில் சில காரணங்கள் இதோ..

propose tips

நிராகரிப்பு 

மூன்றில் 1 பங்கு பெண்கள் தான் ப்ரோபோஸ் செய்ய ஆசைப்படுகின்றனர். பிறர் காதலை சொல்ல தயங்குகின்றனர். ஏனென்றால்... ப்ரபோஸ் செய்தால் தன்னை நிராகரித்து விடுவார்களோ என்ற பயம். தான் ப்ரபோஸ் செய்யும் பையன் தன்னை வேண்டாம் என மறுத்தால், மனம் நோகுமே என பெண்கள் பயப்படுகிறார்கள். பெண்களுக்கு தங்கள் சுய மதிப்பு குறையக் கூடாது. தங்களுடைய மதிப்பை விட்டு கொடுக்க அவர்கள் முன்வருவதில்லை. அதனால் ப்ரோபோஸ் செய்ய துணிவதில்லை. 


இளவரசி உணர்வு 

ஒரு ஆண், பெண்ணை தேடி வந்து ப்ரபோஸ் செய்வது அவளை ஒரு இளவரசி போல உணரச் செய்கிறது. அதுமட்டுமில்லாமல், ஆண்கள் தான் பெண்களை தேடி வருவார்கள் என்று காலங்காலமாக சொல்லி கொடுக்கப்படுகிறது. ஆகவே தங்களை தேடி ஆண்கள் வருவார்கள் என சில பெண்கள் காத்திருக்கிறார்கள். 

சமூக அச்சம் 

ஒரு ஆணுக்கு ப்ரபோஸ் செய்யும் பெண் தைரியமானவளாக கருதப்படுகிறாள். அப்படிப்பட்ட பெண்களுக்கு சமூகம் வேறு மாதிரியான பெயர்களை கொடுப்பதால், தாங்கள் அவமதிக்கப்படலாம் என்ற அச்சத்தால் சில பெண்கள் ப்ரபோஸ் செய்வதில்லை. தாங்கள் ஆண்களிடம் சென்று காதலை சொன்னால், தங்களை தவறாக பார்ப்பார்கள் என்ற பயத்தால்.. பெண்கள் காதலை சொல்வதில்லை. 

இதையும் படிங்க: செக்ஸுவல் 'மசாஜ்' செய்யும் மாயாஜாலம்.. அப்படின்னா என்ன தெரியுமா? மஜாவா இருக்க 3 டிப்ஸ்..!

தாங்கள் ப்ரபோஸ் செய்தால் அந்த பையன் தங்களை விட்டு விலகிவிடுவான் என்ற அச்சத்தாலும் சில பெண்கள் காதலை சொல்வதில்லையாம். விலகிவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ப்ரபோஸ் செய்ய விடுவதில்லை என்கிறார்கள். பல பெண்கள் தங்களுக்கு ஏற்ற சரியான துணையை கண்டுபிடிக்கவில்லை என காரணம் சொல்கிறார்கள். 

இதையும் படிங்க: கணவன் மனைவிக்குள் இந்த 5 விஷயங்களை பேசுங்க..! அப்புறம் செக்ஸ் வாழ்க்கை வேற மாதிரி மாறிடும்.!

Latest Videos

click me!