செக்ஸுவல் 'மசாஜ்' செய்யும் மாயாஜாலம்.. அப்படின்னா என்ன தெரியுமா? மஜாவா இருக்க 3 டிப்ஸ்..!

First Published | Mar 28, 2023, 2:28 PM IST

அவ்வப்போது காமம் இல்லாத இல்லறம், கொஞ்சம் கசப்பை வாழ்க்கையில் தூவி விடும்.. அதனால் துணையை மகிழ்ச்சியாக வைத்திருப்பதில் கவனமாக இருக்க வேண்டும். மசாஜ் செய்து இல்லறத்தில் மஜாவாக இருப்பதை குறித்து இங்கு தெரிந்து கொள்ளுங்கள். 

செக்ஸுவல் மசாஜ் (sexual massage) என்பது ஒரு வகையான சிற்றின்ப தொடுதல். இது தம்பதிகளை நெருக்கமாக்குகிறது. இந்த வகையான தொடுதல், விலகியிருக்கும் தம்பதிகளுக்கு இடையே நிறைய நெருக்கத்தை மீண்டும் கொண்டு வரும். பாலியல் மசாஜ்கள் (sexual massage) உடலுறவு இன்பத்தை அதிகரிக்க ஒருவரின் உடலை தூண்டி விடுகிறது. இதனால் அந்த நேரத்தில் முழுமூச்சாக செயல்பட முடியும். உடலுறவுக்கு முன் தம்பதிகள் ஒருவருக்கொருவர் மசாஜ் செய்து உடலை தழுவி கொள்வதால் ஏற்படும் நன்மைகளை இங்கு காணலாம். 

Image: Getty Images

தம்பதிகள் செக்ஸுவல் மசாஜ் செய்வதால் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் இருப்பார்கள். இது உடலில் இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது. ரத்தம் ஓட்டம் சீராக இருந்தால் சிறந்த உடலுறவு வைத்து கொள்ள முடியும். மசாஜ் சோர்வான உடலை கூட முறுக்கேற வைத்துவிடும். நீங்கள் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களோ, அவ்வளவு சிறப்பாக உடலுறவு கொள்ள முடியும். அது மட்டுமில்லாமல் துணைக்கு நீங்கள் மசாஜ் செய்யும் போது எந்த இடத்தில் அவர்கள் அதிகம் உணர்ச்சிகளை வெளிக்காட்டுகிறார்கள் என்பதை அறியலாம். 


செக்ஸுவல் மசாஜ் என்பது தாந்தரீகம் முறை மசாஜ், யோனி/லிங்க மசாஜ் (அந்தரங்க உறுப்புகளில் மசாஜ்) போன்ற பல வகைகளில் உள்ளது. உங்கள் துணையோ, நீங்களோ பாலியல் மசாஜ் செய்யும்போது மன அழுத்தம் குறையும். பதட்டம் குறைந்து உடலும், மனமும் ஓய்வெடுக்கும். பகலில் ஓடியாடி உழைத்து சோர்வுற்ற நாளுக்கு பின்னர், பாலியல் மசாஜ் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறந்த விஷயமாக இருக்கும். 

பாலியல் மசாஜ் செய்வதற்கு துணைக்கும் உங்களுக்கும் அதிக நம்பிக்கை, தொடர்பு தேவை. ஆழ்ந்த சிற்றின்ப மசாஜ் செய்வதால் உங்களுடைய ஆசைகள், தேவைகளை தொடர்பு கொள்ளும் திறனை வளர்த்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் துணைக்கும் உங்களுக்கும் அதிக நெருக்கம் மற்றும் ஆழமான புரிதல் வரும். 

செக்ஸ் விஷயங்கள் நாட்டம் இல்லாமல் இருப்பவர்கள், பாலியல் செயலிழப்பை அனுபவிக்கும் நபர்களுக்கு இந்த மசாஜ் நல்ல பலனை தரும். மசாஜ் செய்வது பிறப்புறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். ஆண்களுக்கு விறைப்பு செயல்பாட்டை மேம்படுத்தும். உச்சக்கட்டத்தை அடைய உடல் தயாராகும். 

ஒரு முறை பாலியல் மசாஜ் செய்தால் உடல் மற்றும் அதன் உணர்வுகளை நன்கு அறிய முடியும். இதனால் செக்ஸ் வாழ்க்கையில் நம்பிக்கையும், திருப்தியும் ஏற்படும். உங்கள் உடலுக்கு என்ன தேவை? உடலின் விருப்பம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். 

இதையும் படிங்க: செக்ஸ் உறவுக்கு முன்பு.. மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க... அப்புறம் சங்கடம் தான்!!

செக்ஸ் மசாஜ் செய்வதால் மனநிலையை நன்றாக வைத்திருக்கும் எண்டோர்பின்கள் அதிகம் சுரக்கும். இதனால் தசை பதற்றம், வலி குறையும். எண்டோர்பின்கள் நன்கு சுரந்தால் துணையுடன் மனம், உணர்வுரீதியாக ஒன்றி உறவாட முடியும். இந்த பலனை உங்கள் உடல் உணரலாம். உங்கள் உடலில் நல்ல மாற்றங்கள் வரும். நல்ல செக்ஸ் கிடைக்கும் நபர்கள் மகிழ்ச்சியான நபர்களாக இருப்பார்களாம். நலம் வாழுங்கள். 

இதையும் படிங்க: கணவன் மனைவிக்குள் இந்த 5 விஷயங்களை பேசுங்க..! அப்புறம் செக்ஸ் வாழ்க்கை வேற மாதிரி மாறிடும்.!

Latest Videos

click me!