திருமணத்திற்குப் பிறகு நம் துணையிடம் I Love You சொல்ல மறந்து விடுகின்றனர். ஆம். துணை மீதான பாசம், அன்பு, காதல் மெதுவாகக் குறைகிறது, இது விவாகரத்துக்கான முக்கிய காரணமாகும். ஜர்னல் ஆஃப் செக்ஸ் & மேரிட்டல் தெரபியில் 2020 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வின்படி, 2,371 விவாகரத்து பெற்றவர்களின் கணக்கெடுப்பில், கிட்டத்தட்ட பாதி பேர் காதல் மற்றும் நெருக்கம் இல்லாததைக் குற்றம் சாட்டியுள்ளனர். உணர்வு பூர்வமாக ஆதரவு இல்லாமல் இருப்பது விவாகரத்துக்கான சரியான காரணம்.