'நான் எதுக்கு இத்தனை பேரை காதலிச்சேன்'..ஒரு பெண்ணின் ஒப்புதல் வாக்குமூலம்..

First Published | May 5, 2023, 4:52 PM IST

ஒருவர் ஏற்படுத்திய காயங்களுக்கு, யார் யாரையோ காயப்படுத்த துணிவது எப்படி நியாயமாகும்? 

சில உறவுகள் நம்முடன் ரொம்ப காலம் பயணிப்பதில்லை. சிலரை மரணம் கொண்டு செல்கிறது. அந்த வலியை கூட காலம் பழக்கிவிடுகிறது. ஆனால் திடீரென உறவில் இருந்து காணாமல் போனவர்களை என்ன செய்வது? எப்படி மறப்பது? அந்த வலி.. அந்த காலத்தை கடப்பது அவ்வளவு எளிதல்லவே! நேசம் பொய்யாகும்போது அதுவரை நம்பிய எல்லாமே பொய்யாகிவிடுகிறது. எல்லா நோயை விடவும் மனதை பீடிக்கும் நோய்க்கு வலி அதிகம். தன்னுடைய சிறுவயதில் நேர்ந்த ஒரு பிரிவால்.. தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் மாற்றிக் கொண்ட ஒரு பெண்ணின் கதை இது.. 

"என் சின்ன வயதிலே என் அம்மா என்னை விட்டு விலகிவிட்டார். நான் கைவிடப்பட்டேன். என் குழந்தைப் பருவம் தனிமையால் ஆனது. அது ஒரு நபருடன் நெருங்குவதை எனக்கு கடினமாக்கியது. ரொம்ப காலமாக இப்படி இருந்து பழகியும்விட்டேன். விட்டு போகிறவர்களை என்னதுக்கு நேசிச்சுகிட்டு! எனக்கு ஒரு உறவை தொடங்கவோ அதில் இணைந்திருக்கவோ விருப்பம் இருந்ததில்லை. ஒருவருடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணமே என்னை திணறடிக்கிறது. ஏன் ஒருவருக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும். எந்த வாக்குறுதிகளும், அழுத்தமும் இல்லாத உறவில் இருக்கவே நான் விரும்புகிறேன். 


என் வாழ்வில் ஆண்களுடன் பழகும் வாய்ப்பை வரும்போது அதை பயன்படுத்தி கொள்வேன். நான் அலட்டி கொள்ளாமல் பழகுவேன். ஆனால் என்னை புகழவும், என் பின்னால் ஆண்கள் வாலாட்டி வரவும் எப்போதும் ஆசைபடுகிறேன். அதுவே என் விருப்பம். என்னை ஒரு கிப்ட் மாதிரி ஜெயிக்க விரும்பும் மனிதர்களை ஈர்ப்பதில் பலமுறை நான் வென்றிருக்கிறேன். பின்னொரு நாளில் அவர்களை விட்டு விலகியும் விடுவேன். 

ஒரே ஒரு உறவில் இருப்பதிலும் எனக்கு எந்த ஈடுபாடும் இல்லை. என்னுடைய உடல், உணர்வுகள், மனம் ஆகிய தேவைகளை பூர்த்தி செய்ய பல உறவுகளில் இருப்பதையும் விரும்புகிறேன். திருமணமான ஆண்களுக்கு எப்போதும் என் மேல் விருப்பம் இருந்திருக்கிறது. அவர்கள் வெட்கமில்லாதவர்கள். வீட்டில் மனைவி இருக்கிறாள். அந்த துயரத்தை மறக்க என்னை தேடி வருவார்கள். திருமணமான ஆண்கள் என்னை கவர நினைக்கும்போது விலையுயர்ந்த காலனிகள், ஆடைகள், ஹேண்ட் பேக்குகள், நகைகள் போன்ற பல பரிசுகளால் என்னை திக்கு முக்காட செய்வார்கள். மனைவியுடன் சண்டை சச்சரவு என திணறும் ஆண்களுக்கு என்னை நிச்சயம் பிடிக்கும். அவர்களுடைய பாதுகாப்பான புகலிடமாக நான் இருக்கிறேன்.

என் வயதை விட அதிக வயதுள்ள ஆண்களுடன் நான் சுற்றுவதால் மக்கள் என்னை விமர்சிக்கின்றனர். அவர்களுடைய கண்கள் என் உறவுகளின் மீதும், உடல் மீதும் ஊறுவதை பார்த்து கொண்டு தான் இருக்கிறேன். இதனால் என் அப்பா என்னுடன் பேசுவதை விட்டுவிட்டார். என்னுடைய வாழ்க்கையை எனக்கு பிடித்தது போல இப்படியே நான் வாழ்வதால் எனக்கு நண்பர்களும் இல்லை. சின்ன வட்டத்தில் வாழ்கிறேன். நான் விரும்புவதைப் பெற முடியும் என்ற உணர்வு, என் விருப்பம்.. என்னுடைய விருப்பங்களால் நான் அதிகாரம் பெற்றதாக உணர்கிறேன்! 

இதையும் படிங்க: ஆண்களே! ப்ளீஸ் செக்ஸ் வாழ்க்கையில் இந்த 5 விஷயங்களை பண்ணாதீங்க!

இப்போது என்னுடன் உறவில் இருக்கும் மனிதர் மிகவும் காதல் கொண்டவர். அக்கறையுள்ளவர். அவர் என்னை ஒரு இளவரசி போல நடத்தும் போதெல்லாம் நான் கிளர்ச்சி அடைகிறேன். என் கண் அசைவில் எனக்கு என்ன வேண்டுமோ அதை பெற்று தருவார். நான் அவரை நேசிக்கிறேன் என்று நம்புகிறார். ஆனால் அவர் என்னை எவ்வளவு அழகாக நடத்தினாலும் அல்லது கவனித்துக் கொண்டாலும் நான் அவரை நேசிக்க மாட்டேன், ஒருபோதும் நேசிக்கமாட்டேன்.

என் இதயத்தைப் பாதுகாக்க விரும்புகிறேன். அதில் யாரும் இல்லாமல்.. அது யாருக்கும் சொந்தம் ஆகாமல் பாதுகாக்க விரும்புகிறேன். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் உயிருக்குயிராக ஒருவரை நேசித்து அவருடன் இருக்க வேண்டும் என்ற ஆசையும், எண்ணமும் எப்போதோ என்னைவிட்டு போய்விட்டது. இனி எந்த நேரத்திலும் அப்படி எண்ணம் வரப்போவது இல்லை. இதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வது நல்லது என்றே நினைக்கிறேன். நேசித்தவர்கள் நம்மை விட்டு செல்லும்போது, ​​​​அது மனதுக்குள் பேரழிவை ஏற்படுத்தும். என் அம்மா கொடுத்த மனவேதனையை மீண்டும் எதிர்கொள்ள நான் தயாராக இல்லை. என்னிடம் திராணியும் இல்லை. முற்றும்.

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி கண்டிப்பா பண்ணிடுங்க!

Latest Videos

click me!