Lunar eclipse: சந்திர கிரகணத்தில் செக்ஸ் வைத்தால் இப்படி தான் நடக்குமாம்! உஷாரா இருந்துக்கங்க!

First Published | May 5, 2023, 1:44 PM IST

சந்திர கிரகணம் 2023: இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு (மே.5) தெரியும். 

கடந்த மாதம் 20 ஆம் தேதி உலகின் பல பகுதிகளில் சூரிய கிரகணம் காணப்பட்டது. இதுவே 2023 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம். தற்போது இந்த ஆண்டின் முதல் சந்திரகிரகணம் மே 5ஆம் தேதியான இன்று நிகழவுள்ளது. இந்த கிரகணத்தின் போது சில விஷயங்களை தவிர்க்க சொல்கிறார்கள். இதற்கு அறிவியல் சான்றுகள் ஏதும் இல்லை. சந்திர கிரகணம் பற்றிய சில கட்டுக்கதைகள், உண்மைகளை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம். 

பூமி சந்திரனை விட அளவில் மிகப் பெரியது. எனவே அதன் நிழலும் மிகப் பெரியது. இதன் காரணமாக, சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணங்கள் உலகின் பெரும்பாலான பகுதிகளில் அதிகம் தெரியும். இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் இன்று இரவு 8:44 மணிக்கு தொடங்கி இரவு 10:52 மணிக்கு உச்சத்தை அடைகிறது. இது மே 6ஆம் தேதி மதியம் 1:01 மணியளவில் முடிவடைகிறது.  

கட்டுக்கதை 1: கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டும். சந்திர கிரகணம் கருவில் இருக்கும் குழந்தையின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று பலர் நம்புகிறார்கள். அதனால் கர்ப்பிணிகள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருக்க வேண்டும். 

உண்மை: இதெல்லாம் வெறும் யூகங்கள். சந்திர கிரகணம் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கெட்ட விளைவை ஏற்படுத்தும் என்று இதுவரை எந்த ஆராய்ச்சியும் உறுதி செய்யவில்லை. 


கட்டுக்கதை 2: கிரகணத்தின் போது தூங்கினால் பார்வை இழப்பு ஏற்படும். கிரகணத்தின் போது வெளிப்படும் கதிர்வீச்சு பார்வையை பாதிக்கும் என நம்பப்பட்டு வருகிறது. சந்திரனை நேரடியாக கண்களால் பார்ப்பது ஆபத்தானது. இந்த நேரத்தில் தூங்கினால் கண் பார்வை பறிபோகும் என்பதும் ஒருவித நம்பிக்கை. 

உண்மை: சந்திரனின் கதிர்கள் நம் கண்களுக்கு எந்த தீங்கும் விளைவிப்பதில்லை. ஆயுர்வேதத்தில் சந்திர குளியல் பரிந்துரைக்கிறது. சந்திரகிரகணத்தின் போது தூங்கும் நபர் கண் பார்வை இழந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.  

கட்டுக்கதை 3: சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் காயங்கள் நிரந்தரமானவை. கிரகணத்தின் போது முட்கரண்டி, கத்தி போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த நேரத்தில் காயங்கள் ஒருபோதும் ஆறாது. 

உண்மை: விபத்து யாருக்கும் எந்த நேரத்திலும் நிகழலாம். எப்போதும் கவனமாக இருங்கள். காயம் ஆறுவதற்கும் கிரகணத்திற்கும் தொடர்பில்லை. உடல் காயங்கள் குணமடைவது செல்கள், அவற்றின் குணமடையும் திறனைப் பொறுத்தது. 

கட்டுக்கதை 4: கிரகணத்தின் போது சாப்பிடுவது வயிற்று வலியை உண்டாக்கும். கிரகணத்தின் போது சில வகையான கதிர்வீச்சு வெளிப்படுகிறது. அவை நம் உணவைக் கெடுக்கின்றன. இதனால் உணவு விஷமாகி வயிற்றுவலி, அஜீரணம் ஆகிய பிரச்சனைகள் ஏற்படும். 

உண்மை: உணவு கெட்டுப் போவது முற்றிலும் பாக்டீரியாவைச் சார்ந்தது. இந்த பாக்டீரியாக்கள் வெப்பநிலை அதிகரிக்கும் போது உணவைக் கெடுக்கும். இதை அதிகம் சாப்பிட்டால், கிரகணம் இல்லாத நேரத்திலும் வயிற்று எரிச்சல், வாயுத் தொல்லைகள் ஏற்படும். எனவே உணவை அளவாக உண்ணுங்கள். மேலும் நேரத்திற்கு சாப்பிடவும். உண்பதற்கும் உறங்குவதற்கும் இடையில் இரண்டு மணி நேர இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள்.  

கட்டுக்கதை 5: சந்திர கிரகணம் முடிந்த உடனேயே குளிக்க வேண்டும். கிரகணம் முடிந்த உடனே குளிப்பது தீமைகளை குறைக்க உதவுகிறது.

உண்மை: கிரகணத்திற்கும் குளிப்பதற்கும் சாப்பிடுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கிரகணம் என்பது முற்றிலும் வான நிகழ்வு. 

இதையும் படிங்க: கடுமையான மூட்டு வலி! என்னென்ன பழங்களை சாப்பிட்டால் பறந்து போகும் தெரியுமா?

கட்டுக்கதை 6: கிரகணத்தின் போது தூங்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ ​​கூடாது. சந்திர கிரகணத்தின் போது தூங்க வேண்டாம். இது மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உடலுறவில் ஈடுபடுவது ஆண்மைக்குறைவுக்கு வழிவகுக்கிறது.

உண்மை: இதில் ஒரு துளியும் உண்மை இல்லை. ஆனால் 90 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் அதை நம்புகிறார்கள். சிலர் காலையில் கூட தூங்க மாட்டார்கள். இதனால் தூக்கக் கலக்கம் ஏற்படுவதை தவிர வேறு எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த நேரத்தில் நீங்கள் உடலுறவில் ஈடுபடலாம். உங்கள் துணையுடன் காதல் கொள்வது எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாது. உண்மையான கிரகணத்திற்கும் உடலுறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் ஒரு முறையாவது இப்படி கண்டிப்பா பண்ணிடுங்க!

Latest Videos

click me!