அண்மையில் மணமேடைக்கு செல்லும் முன் மாப்பிள்ளை தன் அம்மாவிடம் தாய்ப்பால் குடித்ததாக ஒரு செய்தி வைரலானது. தாய்ப்பால் ஊட்டுவது ஒரு தாய்க்கும் பிள்ளைக்கும் இருக்கும் உறவையும், குழந்தையின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் வரப்பிரசாதம். குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம். ஆனால் மகனுக்கும் பேத்திக்கும் இங்கிலாந்து பெண் தாய்ப்பால் கொடுப்பதாக சொல்வது கேட்போரை ஒரு கணம் குழப்பத்தில் ஆழ்த்துகிறது.
வயதானவர்கள் பேரக்குழந்தைகளுடன் விளையாட விரும்புவார்கள். அவர்களை தூக்கி கொஞ்சுவார்கள். ஆனால் இங்கு ஒருவர் பேத்திக்கும், தன் மகனுக்கும் ஒரே நேரத்தில் தாய்ப்பால் ஊட்டியதாக கூறுகிறார். இந்தப் பெண்ணின் மகன், அவருடைய பேத்தியை விடவும் வயதில் இளையவரும் கூட. ஐ.ஏ.எஸ் தேர்வு கேள்வி போல குழப்பமா இருக்கா? இந்தக் கதையை முழுமையாக படியுங்கள்.
இங்கிலாந்து பெண் ஒருவர் தன்னுடைய மகனை பெற்றெடுத்தபோது தான், அவருடைய மகளும் ஒரு குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இங்கிலாந்தின் டான்காஸ்டரைச் சேர்ந்த ஜேன் (Jane McNeese (47) என்பவருக்கு 9 வயது மகனும், லாரா (Laura (27) என்ற மகளும் உள்ளனர். ஜேன் தன்னுடைய 18 வயதில் லாராவை பெற்றெடுத்துள்ளார்.
லாராவும் சிறுவயதில் கர்ப்பமானார். லாரா தன்னுடைய 15 வயதில் கர்ப்பமாகி, ஈவியை பெற்றெடுத்தார். ஈவி என்ற அந்த குழந்தைக்கு இப்போது 11 வயதாகுகிறது. அதன் பிறகு தான் ஜேன், அவரது மகள் லாரா ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. பென் என்ற ஆண் குழந்தையை ஜேன் பெற்றெடுத்தார், லாராவுக்கு பெல்லா என்ற பெண் குழந்தை பிறந்தது. பென் மற்றும் பெல்லாவுக்கு இப்போது ஏழு வயது ஆகிறது.
ஜேனும், அவரது மகளும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருந்ததால் சிலர் வியந்துள்ளனர். நிறைய பேர் அதை அவர்களிடமே பேசியுள்ளனர். இதைக் குறித்து தான் மகிழ்ந்ததாக ஜேன் கூறுகிறார். தன் மகனையும், பேத்தியையும் பாலூட்டி சீராட்டி வளர்த்துள்ளார். அனைவர் வாழ்க்கையிலும் இப்படி நடக்காது என்று பூரிக்கிறார். உண்மைதான் அல்லவா! ஒரே நேரத்தில் பாட்டியாகவும், தாயாகவும் இருப்பதால், பேரக்குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடிவதில்லை என்கிறார் ஜேன்.