உங்களுடைய துணை உங்களை ஏமாற்றுகிறார் என்றால் பல விஷயங்களை ரகசியமாக வைத்திருக்க முயற்சி செய்வார்கள். உங்களிடம் வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். செல்போன் பயன்படுத்தும்போது கூட வெளிப்படையாக இருக்கமாட்டார்கள். ஆரம்ப காலத்தில் வெளிப்படையாக இருந்தாலும், ஏமாற்றத் தொடங்கிய பின் மாறிவிடுவார்கள். அடிக்கடி செல்போனை சைலன்ட் மோடுக்கு மாற்றி விடுவார்கள். பாஸ்வேர்ட்டை மாற்றுவது, இரவில் செல்போனில் அதிக கவனம் செலுத்துவது என உங்களுக்கு கவனம் கொடுக்கமாட்டார்கள்.
இப்படி உங்களுக்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்த தொடங்கினாலே அவர்கள் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். பொதுவாக ஒவ்வொருவரும் தனியுரிமையை விரும்புவது இயல்பானது தான். ஆனால் உங்களுடைய துணை திடீரென இது மாதிரி நடந்து கொண்டால் அது சாதாரணமான விஷயம் கிடையாது. துணையின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றம் அவர்கள் உங்களிடமிருந்து ஏதேனும் விஷயத்தை மறைப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.