Love-ல Breakup ஆகிடுச்சா..? சூனியமாக தெரியும் வாழ்க்கையை அற்புதமாக மாற்ற சில டிப்ஸ்!!

First Published | Feb 2, 2024, 8:27 PM IST

வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் வருவது இயல்பு தான். நீங்கள் காதல் உறவில் ஏமாற்றம் அடைந்தால், பீதி அடைவதற்குப் பதிலாக, அதிலிருந்து எப்படி முன்னேறுவது என்பதை பற்றி சிந்தியுங்கள்.

காதல் என்பது எல்லோருக்கும் வரும் ஒரு பொதுவான உணர்வு. காதலிக்கு நாட்களில் துணையுடன் இருக்கும்போது, வாழ்க்கை ரொம்பவே அழகாக இருப்பதாக நம் கண்களுக்கு தெரியும். ஆனால் காதல் முறிந்துவிட்டால், அதே வாழ்க்கை சூனியமாக தெரியும். மேலும் அச்சமயத்தில், வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்து விட்டோம் என்ற உணர்வு ஏற்படும். இதனால் மன உளைச்சல் ஏற்படும். இது நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர, இதிலிருந்து வெளி வருவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல.

ஆனால், நாம் வாழும் வாழ்க்கை ஒருமுறை மட்டுமே, அதை இழந்து விடக்கூடாது என்பதை நீங்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, அந்தப் பிரிவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கையை எப்படி அற்புதமாக மாற்றுவது என்பதை குறித்து உங்களுக்கான சில குறிப்புகள் இங்கே உள்ளன. அவை..
 

Tap to resize

தோல்வி தான் வெற்றியின் முதல் படி: பல வருடங்களாக உங்கள் காதல் துணையுடன் நீங்கள் நிறைய நேரம் செலவழித்திருக்கலாம். ஆனால் உறவில் முறிவு ஏற்பட்டால், அதை உங்கள் தோல்வியாக கருத வேண்டாம். ஏனெனில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தோல்விதான் வெற்றியின் முதல் படியாகும். முதலில், நீங்கள் உங்கள் பிரிவை ஏற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். இந்த பிரிவைக் குறித்த குற்ற உணர்வை கூட உங்களுக்குள் கொண்டு வராதீர்கள். அப்போதுதான் நீங்கள் வாழ்க்கையில் முன்னேற முடியும்.

இதையும் படிங்க: உடைந்து போன உறவை எப்படி மீண்டும் மீட்டெடுப்பது? சில எளிய டிப்ஸ் இதோ..

உங்களை ஒருபோதும் பலவீனமாக கருதாதீர்கள்: பிரிந்ததற்கு என்ன காரணங்கள் இருந்தாலும், அதற்கு உங்களை நீங்களே குற்றம் சாட்டுவதை நிறுத்துங்கள். இந்த பிரிவு நீங்கள் பலவீனமாக இருப்பதையும், உறவைக் கையாள முடியாமல் இருப்பதையும் உங்களுக்கு உணர்த்தும். இதனால் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். எனவே, அந்த உறவில் நீங்கள் சந்தித்த கசப்பான நினைவுகளை மறந்துவிட்டு முன்னேறுவதே புத்திசாலித்தனம், அப்போதுதான் வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் வாழ முடியும்.

இதையும் படிங்க:  உங்கள் துனை உங்களை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதற்கான அறிகுறிகள் இவை தான்..

உங்களை சுற்றி இருக்கும் இடத்தை மாற்றுங்கள்: நீங்கள் எப்போதும் அந்த நபரைப் பற்றியே நினைத்துக் கொண்டே இருந்தால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை நரகமாக்கிக் கொண்டே இருக்கிறீர்கள் என்று அர்த்தம். எனவே, உங்கள் கவனத்தை திசைதிருப்ப முதலில், உங்கள் சூழலை மாற்றுங்கள். எனவே அதற்காக, உங்களுக்கு பிடித்தமான இடங்களுக்குப் பயணம் செல்லலாம். இது உங்கள் மனதில் நேர்மறையைக் கொண்டுவரும். மேலும் வாழ்க்கை சரியான திசையில் நகர்வதை நீங்கள் உணருவீர்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Latest Videos

click me!