
ஒரு பெண்ணை எப்படி கவர்வது? இதுதான் இளைஞர்கள் மத்தியில் இருக்கும் பொதுவான கேள்வி. பெண்களை மகிழ்விப்பதற்கும் அவர்களின் இதயங்களை வெல்வதற்கும் ஆண்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். பெண்களை கவர பல ஆண்கள் பல்வேறு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை பின்பற்றுகிறார்கள், ஆனால் அவை அரிதாகவே வெற்றி பெறுகின்றன. எனவே பெண்களை ஈர்க்க ஆண்களுக்கு என்னென்ன குணங்கள் இருக்க வேண்டும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பெண்கள் முதலில் எந்த ஆணிடமும் நகைச்சுவை உணர்வை எதிர்பார்க்கிறார்.. அதனால்தான் பெண்ணிடம் பேசும்போது சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்யுங்கள். அதற்காக நீங்கள் எப்போதுமே காமெடியாக பேசக்கூடாது. எனவே நீங்கள் தீவிரமான விஷயங்களுக்கும் லேசான விஷயங்களுக்கும் இடையில் சமநிலையை வைத்திருக்க வேண்டும். சீரியஸ் மற்றும் காமெடி இந்த இரண்டு விஷயங்களுக்கிடையில் நீங்கள் சமநிலையை ஏற்படுத்தினால், பெண்கள் உங்களுடன் பேச அதிக ஆர்வம் காட்டுவார்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஒரு ஆண் பேஷன் கிங்காக இருக்க வேண்டும் என்று பெண் விரும்புவதில்லை.. ஆனால் அந்த ஆண் எதை அணிந்தாலும் தன்னம்பிக்கையோடும் ஸ்டைலோடும் அணிய வேண்டும் என்று அவள் கண்டிப்பாக விரும்புகிறாள். மிகவும் கண்ணியமான தோற்றத்தில் இருக்கும் ஆண்களை, பெண்களை அதிகம் விரும்புகிறார்கள். உங்கள் தோற்றம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒரு பெண் உங்கள் சுகாதாரத்தையும் கவனிக்கிறார். எனவே உங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக முடி, தாடி மற்றும் நகங்களை சுத்தமாக வைத்திருங்கள். உங்களிடமிருந்து வியர்வை வாசனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். லேசான வாசனை திரவியத்தை பயன்படுத்துங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் மதிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். எந்தவொரு பெண்ணும் தனது துணையிடம் இந்த குணத்தை கண்டிப்பாக பார்க்கிறாள், ஒரு ஆண், பெண்ணுக்கு எவ்வளவு மரியாதை கொடுக்கிறான் என்பது மிகவும் முக்கியம். எனவே பெண்ணைக் கவர, அவளுக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும். பெண்களை மதிக்கும் ஆண்களை பெண்கள் பெரும்பாலும் விரும்புவதற்கு இதுவே காரணம். அத்தகைய ஆன்கள் ஒரு பெண்ணின் இதயத்தில் எளிதாகவே இடம் பிடிக்க முடியும்
நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் பார்க்கிறீர்களோ, அந்த அளவுக்கு அந்தப் பெண்ணை உங்களால் ஈர்க்க முடியும். ஒவ்வொரு பெண்ணும் தன்னம்பிக்கையுள்ள ஆண்களை விரும்புகிறார்கள். தன்னம்பிக்கை இருந்தால், எந்த ஒரு வேலையையும் செய்ய நீங்கள் எப்போதும் முன்னோடியாக இருந்தால், இந்த விஷயம் பெண்ணை உங்கள் பக்கம் ஈர்க்கும். உங்கள் நம்பிக்கையை வைத்து உங்கள் முடிவெடுக்கும் சக்தியையும் பெண்கள் தீர்மானிக்கிறார்கள். உங்கள் முடிவெடுப்பதையும் நம்பிக்கையையும் ஒரு பெண் கவனித்தால், அவள் நிச்சயமாக உங்களை விரும்புவாள்.
பெண்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் தீவிரமாக இருக்கும் ஆண்களை அதிகம் விரும்புகிறார்கள். கவனக்குறைவும் சோம்பேறித்தனமும் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. ஒரு பெண் உங்கள் சம்பளம் மற்றும் அந்தஸ்து பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என்பதும் உண்மைதான், உங்கள் தொழிலில் உங்கள் தீவிரம், எந்த வேலையிலும் தீவிரம் மற்றும் முதிர்ச்சி ஆகியவற்றை அவள் கவனிக்கிறாள் என்பதை ஆண்கள் மறக்க கூடாது.
உங்கள் துணை உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார் என்பதற்கான அறிகுறிகள் இதோ.. தம்பதிகளே நோட் பண்ணுங்க..
பெண்கள் மிகவும் சென்சிட்டிவானவர்.. எளிதில் உணர்ச்சிவசப்படுவார்ககள். எனவே, ஒரு பெண் உங்களுடன் பேசும்போது, அவளுடைய பிரச்சனையைச் சொன்னால், அவள் சொல்வதை கவனமாகக் கேளுங்கள். அதிகம் பேசும் ஆண்களை விட, தாங்கள் சொல்வதை கேட்கும் ஆண்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.