உங்கள் துணை உங்களை ஏமாற்றிவிடக்கூடும் என்று கவலைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவரா? ஆம் எனில், இந்த பதிவு உங்களுக்கு தான். நீங்கள் ஆரோக்கியமான மற்றும் நம்பகமான உறவில் இருந்தால், உங்கள் துணை உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டார்கள் என்பதைக் குறிக்கும் சில அறிகுறிகள் உள்ளன.
26
ஏமாற்றும் துணை தனது உணர்வுகள் அல்லது செயல்களில் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருக்க மாட்டார். உங்கள் துணை தங்களின் நாள் எப்படி இருந்தது என்று தொடங்கி அவர்களின் எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் வரை அனைத்தையும் உங்களுடன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பகிர்ந்து கொண்டா, அவர்கள் உங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த அறிகுறியாகும். அவர்களுக்கு ஏதாவது தொந்தரவு இருந்தால் உங்களுக்குத் தெரிவிப்பார்கள். அவர்களின் விருப்பங்களையும் தேவைகளையும் தயக்கமின்றி தெரிவிப்பார்கள். இந்த வகையான நேர்மை எந்தவொரு உறவுக்கும் இன்றியமையாதது மற்றும் இது தம்பதிகளிடையே நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
உங்கள் துணை உங்களுக்கும் உங்கள் உறவுக்கும் ஆரோக்கியமான மரியாதையைக் கொண்டிருக்க வேண்டும். உங்கள் துணை எப்போதும் உங்கள் கருத்துக்கள் மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பவராக இருந்தால், அவர்கள் உங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கான அறிகுறியாகும். ஒரு மரியாதைக்குரிய துணை, உங்கள் கருத்துக்களைக் கருத்தில் கொண்டு உறவில் உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதை உறுதி செய்வார். அவர்கள் உங்கள் நேரம், ஆற்றல் மற்றும் உணர்வுகளுக்கு மரியாதை காட்டுவார்கள்.
46
Relationship stages
ஏமாற்றும் ஒரு துணை பொதுவாக உங்களுடன் குறைவான நேரமே செலவிடுவார். ஏனெனில் அவர்கள் வேறொருவர் மீது கவனம் செலுத்துவதில் மிகவும் பிஸியாக இருப்பார்கள். உங்களுடன் தரமான நேரத்தை செலவிடுவதில் உங்கள் துணை ஆர்வம் காட்டினால், அது நேரிலோ அல்லது தொலைபேசியிலோ, அவர்கள் உங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கான அறிகுறியாகும். உங்கள் மீது உண்மையாக அக்கறை கொண்ட ஒரு துணை, தங்களின் பிஸியான கால அட்டவணை அல்லது வாழ்க்கை அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் உங்களுக்காக நேரம் ஒதுக்குவார். உங்களுடன் நேரத்தை செலவிடும் போது தங்களின் செயல்கள் அவர்களின் வார்த்தைகளுடன் ஒத்துப் போவதையும் அவர்கள் உறுதி செய்வார்கள்.
56
இறுதியாக, உங்கள் துணை எப்போதும் உங்கள் உணர்வுகளுக்கு முதலிடம் கொடுத்தால், அவர்கள் உங்களை ஏமாற்ற மாட்டார்கள் என்பதற்கான அறிகுறியாக இது இருக்கலாம். உங்களைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்ட ஒரு துணை உங்களை உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ காயப்படுத்தக்கூடிய அல்லது தீங்கு விளைவிக்கும் எதையும் செய்ய மாட்டார். அவர்கள் எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் உணர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்பார்கள் மற்றும் உறவில் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் உங்கள் இருவருக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் என்பதை உறுதிப்படுத்துவார்கள்.
யாராவது உங்களை ஏமாற்றுவார்களா இல்லையா என்று சொல்வது கடினமாக இருக்கலாம், ஆனால் உங்கள் துணை மேற்கூறிய செயல்களை செய்தால், அவர்கள் ஒருபோதும் உங்களுக்கு துரோகம் செய்யமாட்டார்கள் என்பதையும், ஏமாற்றமாட்டார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம்