ஆண்களே ப்ளீஸ் நோட்.. உங்கள் காதலியிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் இவைதான்..

First Published | Sep 26, 2023, 4:01 PM IST

உங்கள் துணையுடன் மோதல்களைத் தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் சுமூகமான காதல் உறவு திடீரென்று ஏன் மோசமடைந்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லை எனில், கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், நீங்கள் பேசிய வார்த்தைகள் அதற்கு காரணமாக இருக்கலாம். நமக்கு தெரியாமலே, உறவில் நிறைய தவறான புரிதலை உருவாக்கும் விஷயங்களைப் பேசுகிறோம். உங்கள் துணையுடன் மோதல்களைத் தவிர்க்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் முன்னாள் காதலியைப் பேசாதீங்க : நீங்கள் உங்கள் காதலியுடன் உறவில் இருக்கிறீர்கள், ஆனால் உங்கள் கடந்தகால காதலியைப் பற்றி இன்னும் பேசினால், இது உங்கள் துணையின் மனதில் அவநம்பிக்கையை உருவாக்குகிறது. நீங்கள் அவளை ஏமாற்றும் வாய்ப்பிற்கும் வழிவகுக்கிறது. உங்களுக்கு முதல் காதலி தான் முக்கியம் என்ற எண்ணத்தை உருவாக்கலாம்.

உங்க துணையிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் பயப்படாதீங்க.. தம்பதிகளே கண்டிப்பா இதை படிங்க..
 

Tap to resize

தரமான நேரம் : உங்கள் காதலியுடன் சிறப்பான நேரம் ஒதுக்குவது மிகவும் முக்கியம். உங்கள் காதலியின் இலக்குகளைப் பற்றி பேசுங்கள், ஒன்றாக திரைப்படங்களைப் பாருங்கள். உங்கள் காதலியுடன் நீங்கள் இருப்பது தான் இந்த உறவில் உங்களுக்கு முக்கியமானது என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

பாசம் காட்ட தயங்க வேண்டாம் : பொது இடங்களில் கைகளைப் பிடிக்கக்கூடாது என்று அவர்களிடம் சொல்லாதீர்கள். அனைவரின் முன்னிலையிலும் உங்கள் உறவை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயாராக இல்லை என்பதை இது குறிக்கிறது. இது உங்கள் காதலியின் மனதில் நிறைய சந்தேகங்களை உருவாக்குகிறது. நீங்கள் அவளை நேசிப்பீர்களானால், அவளுக்கு உரிய மரியாதை கொடுத்து அரவணைத்துக் கொள்ளுங்கள். சமூகத்தின் காரணமாக அவளிடம் பாசத்தைக் காட்டத் தயங்காதீர்கள்.

இந்த மாற்றங்களை செய்தால்.. செக்ஸ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.. ஆண்களே கட்டாயம் படிங்க..
 

முன்னுரிமை கொடுங்கள் : உங்கள் காதலிக்கு முன்னுரிமை இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள், அது உங்களைப் பற்றி அதிகம் பேசுகிறது. நீங்கள் உங்கள் காதலியுடன் சாதாரண உறவில் இருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை இது தருகிறது. நீங்கள் உறுதியான உறவில் இருக்கிறீர்கள் என்பதைக் காட்ட வேண்டும்.

Latest Videos

click me!