இந்த மாற்றங்களை செய்தால்.. செக்ஸ் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்.. ஆண்களே கட்டாயம் படிங்க..

First Published | Sep 25, 2023, 5:09 PM IST

பாலியல் ஆர்வம் அல்லது செயல்பாடு குறைவாக இருப்பதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பரிந்துரைக்கப்பட்டாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

பாலியல் ஆசைகள் மற்றும் ஆர்வங்கள் தனிநபர்களிடையே வேறுபடலாம். சிலர் தங்கள் துணையுடன் சிறப்பான பாலியல் உறவில் இருந்தாலும் சிலர் தங்கள் துணையுடன் நெருக்கமான, உறவை வளர்ப்பதில் சிரமத்தை அனுபவிக்கலாம். சில ஆண்களுக்கு, பாலியல் வாழ்க்கையில் ஆர்வம், ஈடுபாடு இருக்கலாம். ஏனவே தங்கள் துணையுடன் உடலுறவு கொள்வதில் தயக்கம் காட்டலாம். மன அழுத்தம், சோர்வு மற்றும் வயது ஆகியவை காரணமாக் நடுத்தர வயது ஆண்களுக்கே பாலியல் வாழ்க்கையில் சிக்கல் ஏற்படுகிறது. இதற்கு மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பரிந்துரைக்கப்பட்டாலும், சில வாழ்க்கை முறை மாற்றங்கள் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.

Sex Related Injuries

ஆரோக்கிய உணவு : பாலுணர்வை உண்டாக்கும் மற்றும் துத்தநாகம் நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். குறிப்பாக அத்திப்பழங்கள், வாழைப்பழங்கள், சாக்லேட்டுகள் மற்றும் வெண்ணெய் போன்ற சில உணவுகள் பாலுணர்வைக் குறைக்கும் உணவாகக் கருதப்படுகின்றன. மாறாக, அனாஃப்ரோடிசியாக்ஸ் என்பது லிபிடோவைக் குறைக்கக்கூடிய பொருட்கள். இந்த வகையின் கீழ் வரும் உணவுகளில் வறுத்த உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட பானங்கள் அல்லது இனிப்பு வகைகளை தவிர்ப்பது நல்லது. கோழிக்கறி, நட்ஸ், பழங்கள் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது பாலுணர்வை மேம்படுத்துவதற்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் உதவும்.

Tap to resize

போதுமான தூக்கம் : பாலியல் செயல்பாடுகள் அல்லது பாலியல் ஆர்வத்திற்கு சரியான தூக்கம் அவசியம். தற்காலிக தூக்க பிரச்சனைகள் மன அழுத்தத்தால் ஏற்படலாம் என்றாலும், நாள்பட்ட தூக்க பிரச்சனைகள் இந்த உடல்நலக் கவலைகளுக்கு பங்களிக்கலாம். தூக்கத்தில் சிரமம் தொடர்ந்தால் சிகிச்சை பெறுவது நல்லது. சிகிச்சை விருப்பங்களில் தூக்க சிகிச்சைகள் அல்லது சரியான நோயறிதல் மற்றும் மருந்துகளின் பரிந்துரைப்புக்காக மருத்துவரை அணுகுவது ஆகியவை அடங்கும்.

உடல் ஆரோக்கியம் : உடல் தகுதி, பாலியல் செயல்பாடு மற்றும் சுய-கருத்து ஆகியவற்றுக்கு இடையே உள்ள தொடர்பு உடலுறவுக்குக் முக்கியம். உடல் பருமன் மற்றும் செயலற்ற தன்மை பல நபர்களுக்கு பாலியல் செயலிழப்புக்கு வழிவகுக்கும். இருப்பினும், சிறிய உடற்பயிற்சி கூட பாலியல் செயல்திறனில் குறிப்பிடத்தக்க நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உடலுறவு குறித்த ஆண்களின் அணுகுமுறை அவர்களின் உடல் உருவத்தால் பாதிக்கப்படுகிறது என்பதை சமீபத்திய ஆய்வு வெளிப்படுத்தியது. தன்னை தானே குறைவாக மதிப்பிடுவது, அவர்களின் பாலியல் வாழ்க்கையை பாதிக்கலாம். எனவே வழக்கமான உடற்பயிற்சி, உங்கள் மீதான சுய எண்னத்தை மாற்றுவது ஆகியவை உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும்.

துணையுடன் பேசுங்கள் : மன அழுத்தம், உடல்நலம் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை பாலியல் ஆசை குறைவாக இருப்பதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. அதே போல் நீங்கள் நீண்ட காலமாக ஒன்றாக இருந்த பிறகு உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையிலான பாலியல் ஆசை குறைந்துவிட்டதாக உணருவது பொதுவானது. அதைப் பற்றி உங்கள் துணையிடம் பேசுங்கள், தேவைப்பட்டால் ஜோடி சிகிச்சைகளை எடுத்துக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் உறவில் ஆர்வத்தை மீண்டும் தூண்டுவதற்கான புதிய வழிகளை முயற்சிக்கவும்.

Latest Videos

click me!