திருமணமான பெண்கள் இப்படி செய்தால்... அவர் மோசமான கணவரா தான் இருப்பார்!

First Published | Apr 5, 2023, 3:44 PM IST

திருமணத்திற்குப் பின்னர் பெண்கள் பொறுத்து கொள்ளக் கூடாத சில விஷயங்கள்... திருமணமான பெண்களுக்கு கட்டாயம் தெரிய வேண்டியவை முழுவிவரம்...உள்ளே!!

வாழ்க்கையில் பல விஷயங்கள் மாறினாலும், பெண்களை பொறுத்து போக சொல்வது மட்டும் இன்னும் மாறவில்லை. திருமணம் மாதிரியான பந்தத்தில் எப்போதும் பெண்கள் பொறுத்து கொள்ள வேண்டும் என்ற சூத்திரம் இப்போதும் சொல்லி கொடுக்கப்படுகிறது. திருமண உறவை காப்பாற்ற பெண்களும் எல்லா விஷயங்களிலும் சமரசம் செய்துகொள்கிறார்கள். ஆனால் எந்த விஷயத்தில் சமரசம் இல்லாமல் பெண்கள் தங்களுக்காக யோசிக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம். 

சுயமரியாதை!

எந்த உறவிலும் எப்பொழுதும் சமரசம் செய்து கொள்வது நல்லதல்ல. உங்களுக்கு திருமணமானாலும், ஆகாவிட்டாலும் எந்தப் பெண்ணும் ஒருபோதும் தன் சுயமரியாதையில் சமரசம் செய்து கொள்ளக் கூடாது. உதாரணமாக, தன் மனைவி வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கவில்லை என்றால் அவளிடம் எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாம் என நினைக்கும் சில ஆண்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்களுடைய சுயமரியாதையை விட்டு கொடுக்கக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கூட மனைவியை கேலி செய்வது முறையான செயல் அல்ல. இது மனைவியின் சுயமரியாதையை சிதைக்கிறது. இது குறித்து கணவரிடம் தெரிவித்து விட வேண்டும். ஒருவர் தன் மனைவியின் சுயமரியாதையை புரிந்து கொண்டு நடந்து கொள்ளும் போது தான் அந்த திருமணம் வெற்றியடையும் என்பதை ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும். 

Tap to resize

குடும்ப வன்முறை! 

உங்கள் துணை ஒவ்வொரு சின்ன விஷயத்திலும் கோபப்பட்டாலோ அல்லது அவர்/அவள் உங்களை உடல்ரீதியாகவும், உணர்ச்சிரீதியாகவும் காயப்படுத்தினாலும் அதை பொறுத்து கொள்ள கூடாது. உங்களுடைய கணவர் உங்களை அடிக்கும்போதும், அவமானப்படுத்தும் போதும் அதை பொறுத்து போனால் உங்கள் கணவருடைய மோசமான செயல்பாடுகளை நீங்கள் ஊக்குவிக்கிறீர்கள் என்று அர்த்தம். இப்படி மோசமானவரை உங்கள் கணவராக வைத்து கொள்வீர்களா? முடியாது தானே. அதனால் உங்கள் கணவர் தவறு செய்தால் கண்டிக்க வேண்டும். அதற்கு மாறாக பொறுத்து போனால் அவர் எப்போதும் மோசமான கணவராக தான் இருப்பார். 

எல்லா விஷயங்களையும் சகித்து கொண்டு, குடும்ப வன்முறையை அனுபவித்த பெண்கள் மனநலம் மோசமாக பாதிக்கப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் திருமணத்திற்கு பிறகு தங்களுடைய மனநலன் குறித்து அக்கறை கொள்வதில்லை. ஆனால் இது மாதிரியான அலட்சியப்போக்கு உங்களுடைய குடும்ப நலனிலும் எதிரொலிக்கும். குழந்தைகள் வளர்ப்பை கூட சிக்கலாக்கிவிடும். 

இதையும் படிங்க: உடலுறவை ரசிக்காத பெண்களிடம்... இந்த 5 விஷயங்களை செய்தால்... பாலுணர்வு பாய்ந்தோடும்..!

குடும்ப அழுத்தம்! 

ஒரு குடும்பம் என்பது கணவன், மனைவி இருவருடைய பொறுப்பிலும் தான் இயங்குகிறது. எல்லா பொறுப்புகளையும் கணவரோ அல்லது எல்லா பொறுப்புகளையும் மனைவியோ எடுத்துக் கொள்வது ஒருவருக்கு மட்டுமே அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். அதனால் வீட்டு விஷயங்களில் இருவரும் கலந்தாலோசித்து சரிசமமாக பொறுப்பெடுத்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் பெண்கள் விட்டுக் கொடுக்கக் கூடாது. 

திருமணமான பெண்ணுக்கும், ஆணுக்கும் சந்தோஷமாக இருக்க முழு உரிமை உள்ளது. எந்த தியாகத்திலும் நீண்ட கால மகிழ்ச்சியை உருவாக்க முடியாது. சரியான காரணங்களுக்காக மட்டுமே சமரசம் செய்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: Toxic People: இந்த 3 வகை மனிதர்களை கிட்ட சேர்க்காதீங்க! இவங்க நீங்க நல்லாவே இருக்கக் கூடாதுனு நினைக்குறவங்க!!

Latest Videos

click me!