கல்லறையில் இளம்பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்த மருத்துவர்! காதலிப்பதாக சொல்லி 7 ஆண்டுகளாக.. அவர் செய்த காரியம்!

First Published | Apr 5, 2023, 1:34 PM IST

கல்லறையில் இருந்து காதலியின் இறந்த உடலை எடுத்து அமெரிக்க மருத்துவர் செய்த காரியம், அவரது காதலின் ஆழத்தை நமக்கு சொல்கிறது. 

காதல் வலிகளுடன் கூடிய அழகான உணர்வு. சில காதல் கதைகள் விசித்திரமானவை. காதலுக்காக எதையும் செய்ய துணியும் மனிதர்களை குறித்து நாம் கேள்விபட்டிருப்போம். ஆனால் இங்கு ஒருவர் விசித்திரமாக கல்லறையிலிருந்து காதலியின் சடலத்தை வெளியே எடுத்துள்ளார். அவர் ஏன் அப்படி செய்தார் என்பதற்கு சுவாரசியமான பின்னணி உள்ளது. 

அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த டாக்டர் கார்ல் டான்ஸ்லர் (Carl Tanzler), கல்லறையில் இருந்த சடலத்தை காதலித்துள்ளார். அதனுடன் 7 ஆண்டுகள் வாழந்திருக்கிறார். ஏன் அப்படி செய்ய வேண்டும்? பைத்தியமா அவர்! என உங்களுக்கு தோன்றலாம். டாக்டர் கார்ல் டான்ஸ்லர், கல்லறையில் இருந்து யாருக்கும் தெரியாமல் அந்த இளம்பெண்ணின் சடலத்தை எடுத்து அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என நினைத்தாராம். வித்தியாசமான சில சோதனைகளை அந்த சடலத்தில் செய்து பார்த்திருக்கிறார். எப்படியாவது அதற்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதை கார்ல் விடாப்பிடியாக முயன்றுள்ளார். எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. 


இந்த சோதனைகளோடு அவர் நிறுத்தவில்லை, அந்த இளம்பெண்ணின் சடலத்திற்கு ஒரு கண்ணாடி அணிவித்து, முகத்திற்கு ஒரு மாஸ்க்கும் அணிந்து அந்த உடலை பாதுகாத்துள்ளார். அவரை ஒரு மணப்பெண் போலவே கருதியுள்ளார். இறந்த இளம்பெண்ணின் குடும்பத்தினர் இதுபற்றி அறிந்து போலீசில் புகார் செய்யும் வரை அவர் சடலத்துடன் மனப்பூர்வமாக வாழ்ந்து வந்தார். 

காதல் !!

டாக்டர் கார்ல், 21 வயதான எலெனாவை புளோரிடாவின் கீ வெஸ்டில் உள்ள மருத்துவமனையில் நோயாளியாக சந்தித்தார். மருத்துவராக இருந்தாலும், கார்லுக்கு எலெனா மீது ஈர்ப்பு இருந்துள்ளது. ஆனால் சில நாள்களில் அவள் இறந்துவிட்டாள். அவள் இறந்த பிறகும் அவள் மீதான் அன்பு கொஞ்சமும் குறையாததால் டாக்டர் கார்ல் மனமுடைந்து போனார். எப்படியாவது அவளை உயிருடன் கொண்டுவர அவளுடைய கல்லறையை தோண்டி சடலத்தை வெளியே எடுத்துள்ளார். பல சோதனைகளை முயன்று பார்த்துள்ளார். சில தகவல்களின்படி, அவர் அந்த சடலத்துடன் 7 ஆண்டுகள் உடலுறவும் கொண்டுள்ளார். கடைசியில் அவளைக் காப்பாற்றும் முயற்சியில் தோல்வியடைந்தார். தற்போது அவரை போலீஸார் கைது செய்தனர்.  

போலீசார் விசாரணையில், அந்த இளம்பெண் மரியா எல்லா மிலாகோ டி ஹோயோஸ் என்று அடையாளம் காணப்பட்டது. டாக்டர் கார்ல் செய்த வேலையால், அந்த இளம்பெண்ணின் சடலம் உருமாறி காண்போரை திகிலடைய வைத்துள்ளது. நீதிமன்றத்தில் டாக்டர் கார்ல் எலிபாவின் சடலத்தை உயிர்ப்பிக்கவே அவ்வாறு செய்ததாகவும், அவரது உடலை சிதைப்பது அவர் நோக்கம் இல்லை என்றும் வாதாரப்பட்டது. சட்டத்தில் டாக்டர் கார்லை தண்டிக்கும் வாய்ப்புகள் இல்லாததால் அவர் மீது வழக்குத் தொடரப்படவில்லை. 

Latest Videos

click me!