ஒன்பது மனைவிகள்... இப்போ முதல் குழந்தையை பெற போகும் மனைவி யார் என்ற போட்டி! புத்திசாலி கணவனின் அதிரடி முடிவு

First Published | Apr 6, 2023, 11:05 AM IST

Arthur Urso: ஒன்பது பேரைத் திருமணம் செய்து கொண்ட ஒருவர், தன் முதல் குழந்தையை யாருடன் பெற்று கொள்வது என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக ஒருதார முறை இருந்து வருகிறது. ஆனால் சில நாடுகளில் விருப்பம் உள்ளவர்கள் பலரை மணந்து கொள்கின்றனர். வீட்டில் 1 மனைவி இருந்தாலே, சமாளிக்க முடியாமல் திணருவதாக ஆண்கள் புலம்பி வரும் நிலையில், பிரேசில் சாவ் பாலோவைச் சேர்ந்த ஆர்தர் உர்சோ (37) (Arthur Urso) என்பவர் 9 மனைவிகளுடன் மஜாவாக வாழ்ந்து வந்தார். அவர்களில் 3 பேரை அண்மையில் விவாகரத்து செய்தார். இப்போது அவருக்கு 21 முதல் 51 வயது வரையிலும் என 6 மனைவிகள் உள்ளனர். 

ஆர்தரிடம் இருந்து 3 பேர் விவாகரத்து பெற்று கொண்டதால், தற்போது லுவானா கசாகி (27), எமெல்லி சோசா (21), வால்குரியா சாண்டோஸ் (24), ஒலிண்டா மரியா (51), டாமியானா (23), அமண்டா அல்புகெர்கி (28) ஆகிய 6 மனைவிகள் உள்ளனர். இவர்களுடன் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவருக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளது. 


ஆறு மனைவிகளில் யாருடன் முதல் குழந்தை பெற்று கொள்வது என்பது தான் அந்த கவலை. 6 பேருடனும் குழந்தை வேண்டும், ஆனால் முதல் குழந்தையை யாரிடம் பெற்றுக்கொள்வது என்று ஆர்தர் இப்போது கவலைப்படுகிறார். யார் மனதும் புண்படாமல் குழந்தை பெற்று கொள்வதை பற்றி யோசித்த அவருக்கு, வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவது சரியென்று படவே அதை மனைவிகளிடம் சொல்லியிருக்கிறார். அவருடைய மனைவிகள்... 

தனக்கு ஆறு மனைவிகளுடனும் குழந்தை பெற்று கொள்ள விருப்பம் இருந்தபோதும், எந்த மனைவியை முதலில் கர்ப்பமாக்குவது என்பது தான் குழப்பமே! என்று புலம்பியிருக்கிறார், ஆர்தர். இதையடுத்து கணவனின் மனம் நோகாமல் இருக்க, வாடகைத்தாய் ஐடியாவை மனைவிகள் ஒருமனதாக ஏற்று கொண்டனர்.

இதையும் படிங்க: கல்லறையில் இளம்பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்த மருத்துவர்! காதலிப்பதாக சொல்லி 7 ஆண்டுகளாக.. அவர் செய்த காரியம்!

இப்போது நம்பகமான வாடைகைத்தாயை தேடிக் கொண்டிருக்கிறார்களாம். இதுமட்டுமில்லை, எதிர்காலத்தில் குழந்தைகளைத் தத்தெடுப்பதற்கும் கூட இத்தம்பதிகள் தயாராக இருப்பதாக ஆர்தர் தெரிவிக்கிறார். ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் 1 குழந்தை வேண்டும் என்பதே தன் கனவு என ஆர்தர் வெளிப்படையாக கூறிவருகிறார். இந்த வாடகை தாய் ஏற்பாட்டுக்காக 41 ஆயிரம் டாலர்ஸ் செலவிட போகிறார்களாம். இது இந்திய மதிப்பில் 33 லட்சத்து 58 ஆயிரத்து 617 ஆகும். 

இதைப் போலவே, தாய்லாந்தில் டாட்டூ கலைஞர் ஓங் டாம் சோரேட் என்பவர் 8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் செய்தி அண்மையில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இவருடைய வீட்டில் ஒரு அறையில் 2 பேர் வீதம் 8 மனைவிகளும் 4 படுக்கையறைகளில் தூங்குகிறார்கள். கணவரோடு ஒவ்வொரு நாளும் ஒருவர் படுக்கையை பகிர்ந்து கொள்வார்களாம். சரியான புரிதலில் இருப்பதால் ஒருவருக்கொருவர் எந்த பிரச்சனையும் இதுவரை இல்லை என ஓங் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: கூட்டுக் குடும்பத்துல தாம்பத்தியம் கஷ்டம் தான்! ஆனா இந்த 4 வழி இருக்கு.. ஓப்பனா சொந்த அனுபவத்தை பகிரும் பெண்!

Latest Videos

click me!