கூட்டுக் குடும்பத்துல தாம்பத்தியம் கஷ்டம் தான்! ஆனா இந்த 4 வழி இருக்கு.. ஓப்பனா சொந்த அனுபவத்தை பகிரும் பெண்!

First Published | Apr 5, 2023, 7:40 PM IST

கூட்டு குடும்பத்தில் வாழும் தம்பதிகள் அன்யோயமாக இருப்பதும், தாம்பத்தியம் கொள்வதும் சற்று சிரமமாக இருக்கும். இந்த சமயத்தில் தம்பதிகள் எப்படி அதை கையாளுவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

கூட்டுக்குடும்பம் பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தனியுரிமை (privacy), உடலுறவு போன்ற விஷயங்கள் வரும் போது சற்று சிக்கலாக மாறிவிடும். கூட்டுக்குடும்ப அமைப்பில் தம்பதியினர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ள தனிமையில் பேசுவது கூட சிரமமாக இருக்கும். இந்த மாதிரி சமயங்களில் கூட தன் கணவனுடன் எப்படி நெருக்கமானார் என்பதை ஒரு பெண் பகிர்ந்துகொண்டுள்ளார். அவரின் அனுபவம் உங்களுக்கும் உதவலாம். 

"எங்களுடைய குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருப்பதால் மாலை நேரங்களில் குடும்பத்துடன் அமர்ந்து கதை பேசுவோம். இரவில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது போன்ற எல்லா விஷயங்களும் பொதுவில் இருந்தன. என் கணவருக்கும் எனக்கும் எந்த நெருக்கமும் இல்லாமல் போய்விட்டது. நாங்கள் அந்தரங்கமாக பேசிக்கொள்ள கூட நேரம் கிடைக்கவில்லை. ஒருவேளை பேசினாலும் குடும்ப விவகாரம் தான். அதில் காதலும் இல்லை துளி காமமும் இல்லை. என் கணவரின் அருகாமையை ரொம்ப மிஸ் பண்ணினேன். 

Tap to resize

வறண்டு போன காதல், காம தருணங்களை புத்துணர்வாக்க ஏதேனும் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். எனக்கு என் குடும்பம் முக்கியம். அதே போல என் கணவரின் அரவணைப்பும் வேண்டுமே! கூட்டுக்குடும்பத்தில் நமக்கென தனிப்பட்ட நேரத்தை ஒதுக்குவது கொஞ்சம் கடினம். ஆனால் அதற்காக நான் ஒரு திட்டமிட்டேன் என் மாமியார் மைத்துனர்கள் ஒன்றாக திரைப்படத்திற்கு செல்ல ஏற்பாடு செய்தேன். நல்ல திரைப்படங்களுக்கு டிக்கெட், அவர்களுக்காக உணவகங்களில் முன்பதிவு என எல்லாம் செய்து கொடுத்து அவர்களை வெளியில் அனுப்பி வைத்தேன். இந்த உபசரிப்புகளை அவர்களும் விரும்பினர். இந்த சமயத்தை நாங்கள் பயன்படுத்தி கொண்டோம். 

வீட்டில் எல்லோரையும் வெளியே அனுப்பிய பிறகு, நானும் என் கணவரும் ஒன்றாக நேரம் செலவிடுவோம். உடலையும் உள்ளத்தையும் தழுவி மோனநிலையில் லயித்து இருப்போம். ஆனால் எப்போதும் அவர்களை சினிமாவிற்கு அனுப்பி வைக்க முடியவில்லை. அதனால் நானும் என் கணவரும் வீட்டில் உடற்பயிற்சி செய்வது போல பாவனைகளை உருவாக்கினோம். இருவரும் ஒர்க் அவுட் ஆடைகளை அணிந்து கொண்டு, அறையில் சத்தமாக உடற்பயிற்சி இசையை ஒலிக்கவிட்டு ஒன்றாக நேரம் செலவிட்டோம். இந்த ஐடியா நன்கு வேலை செய்தது. எல்லாம் உடற்பயிற்சி தானே! 

ஏதாவது போலியான பயணங்களை வீட்டில் சொல்லிவிட்டு அங்கிருந்து நழுவி ஹோட்டல் அறையில் எங்களுக்கு பிடித்தமாதிரி உறவு கொள்வோம். அவ்வப்போது இந்த திட்டங்களை செய்து எங்கள் நெருக்கத்தை அதிகரித்தோம். 

இதையும் படிங்க: கல்லறையில் இளம்பெண்ணின் பிணத்தை தோண்டி எடுத்த மருத்துவர்! காதலிப்பதாக சொல்லி 7 ஆண்டுகளாக.. அவர் செய்த காரியம்!

 கூட்டுக் குடும்பத்தில் உடலுறவு கொள்ள குளியலறை ஒரு சிறந்த வழியாகும். ஆனால் அங்கு எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். நாங்கள் ஒருமுறை முயற்சி செய்தோம். ஆனால் அங்கு வழுக்கி விழுந்து மற்ற பிரச்சனைகளுக்கு வாய்ப்பு இருப்பதால் தவிர்த்து கொண்டோம். இப்படி ஏதேனும் திட்டமிட்டு கூட்டு குடும்பத்தில் என் கணவரோடு ஒன்றாக இருக்கிறேன்"என அந்த பெண் தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். உங்களுக்கு தேவைப்பட்டால் இந்த திட்டங்களை முயன்று மகிழ்ந்திருங்கள். 

இதையும் படிங்க: திருமணமான பெண்கள் இப்படி செய்தால்... அவர் மோசமான கணவரா தான் இருப்பார்!

Latest Videos

click me!