ஒரே கட்டிலில் 6 மனைவிகள்... இதற்காகவே 20 அடி படுக்கை செய்த மன்மதன்!! எத்தனை லட்சம் செலவு தெரியுமா?

First Published | Apr 27, 2023, 11:30 AM IST

ஆர்தர் என்பவர் ஒரே கட்டிலில் 6 மனைவிகளுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஆசையால் 20 அடி படுக்கையை, பல லட்சம் செலவு செய்து தயார் செய்துள்ளார். 

இந்தியாவை தவிர மற்ற சில நாடுகளில் பலதார முறை அமலில் உள்ளது. அவ்வப்போது 2க்கும் மேற்பட்ட மனைவிகளுடன் வாழும் உலக செய்திகள் பிரபலமாகி கொண்டு தான் இருக்கிறது. அந்த வரிசையில் பிரேசில் சாவ் பாலோவைச் சேர்ந்த ஆர்தர் உர்சோ (37) (Arthur Urso) என்பவர் 6 மனைவிகளுடன் மஜாவாக வாழ்ந்து வருகிறார். இவர் மனைவிகளுக்கான படுக்கைக்கு லட்சக்கணக்கில் செலவு செய்து மிரட்டியுள்ளார். மனைவிகள்.அனைவருடனும் ஒரே நேரத்தில், ஒரே படுக்கையில் நேரம் செலவழிக்க, கிட்டத்தட்ட 80,000 பிரேசிலியன் பவுண்டுகள் (ரூ. 80 லட்சம்) செலவழித்து 20 அடி படுக்கையை தயார் செய்துள்ளார். 

இனிமேல் அவர் தனது ஆறு மனைவிகளுடன் ஒன்றாக தூங்க முடியும். ஆர்தருக்கு சில காலம் முன்பு வரை 9 மனைவிகள் இருந்தனர். அதில் நான்கு பேர் அவரை விவாகரத்து செய்தனர். அவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்பவரை மணந்தார். அதனால் இப்போது ஆர்தருக்கு 6 மனைவிகள் கொண்ட குடும்பம் உள்ளது. 


தன் மனைவிகளுடன் ஒன்றாக நேரம் செலவழிக்க ஏதுவாக ஆர்தர் வழி தேடி கொண்டிருக்கும்போது, அவர்களுடைய படுக்கை வெவ்வேறு அறைகளில் இருப்பது கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக 20 அடிக்கு 7 அடி என்ற கணக்கில் பிரம்மாண்ட படுக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளார். கிட்டத்தட்ட 15 மாதங்கள் மெனக்கெட்டு, 12 பேர் கொண்ட குழுவின் உதவியால் இந்த படுக்கையறையை உருவாக்கியுள்ளார்.
இது குறித்து ஆர்தர் கூறியதாவது:"நாங்கள் எப்போதும் சோபாவையும், இரட்டை படுக்கையையும் (double bed) பகிர்ந்து கொள்ள வேண்டியிருந்தது. என் மனைவிகளுக்கு வசதியான இடமளிக்க தரையில் கூட தூங்க வேண்டியிருந்தது. எங்களுக்காக படுக்கையை தயார் செய்வது அவசியம் என்று எனக்கு தோன்றியது"என்றார். 

ஆர்தருக்கு வால்குரியா சாண்டோஸ், டாமியானா, அமந்தா அல்புகெர்கி, ஒலிண்டா மரியா, லுவானா கசாகி மற்றும் எமெல்லி சோசா ஆகிய மனைவிகள் உள்ளனர். இவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக இன்னும் பதிவாகவில்லை. அவர்களுடைய நாட்டில் பலதார முறைக்கு அனுமதியில்லையாம். இந்த தம்பதிகளுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர்களுடைய காதல் வீடியோ, புகைப்படங்களும், அவ்வப்போது இவர்கள் வழங்கும் காதல் மற்றும் காமம் சார்ந்த அறிவுரைகளும் ரசிகர்களுக்கு பயனுள்ளதாக இருப்பதாக சொல்கிறார்கள். இந்த மாதிரியான பிளாட்பாரம் மூலம் மாதம் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார்கள். 

இதையும் படிங்க: யம்மாடியோவ்! கொட்டி கிடக்கும் அழகு.. 7 ஆயிரம் ஆண் நண்பர்கள்! இந்த அழகியின் இன்னொரு பக்கம் தெரியுமா?

ஆர்தர் தனது மனைவிகள் அனைவரையும் திருப்திப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதற்காக முன்பு பகிர்ந்தார். அதற்கு தீர்வாக, மனைவிகளுக்கு சமமான மகிழ்ச்சியை அளிக்க ஒரு கால அட்டவணையை உருவாக்கினார். ஆனாலும் அது பலனளிக்கவில்லை என்று அந்த யோசனையை அப்போதே கைவிட்டார்; இப்போது ஒரே படுக்கை திட்டத்தை கையில் எடுத்துள்ளார்.

ஒவ்வொரு மனைவியிடமிருந்தும் 1 குழந்தை வேண்டும் என்பதே தன் கனவு என ஆர்தர் வெளிப்படையாக கூறிவருகிறார். இந்த வாடகை தாய் ஏற்பாட்டுக்காக 41 ஆயிரம் டாலர்ஸ் செலவிட போகிறார்களாம். இது இந்திய மதிப்பில் 33 லட்சத்து 58 ஆயிரத்து 617 ஆகும். தனது மனைவிகளை எவ்வளவு விலை கொடுத்தும் மகிழ்விக்க விரும்புவதாக கூறுகிறார் ஆர்தர். 

இதையும் படிங்க: மகள் வயது பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இப்படியெல்லாம் நடக்குதாம்!!

Latest Videos

click me!