தாம்பத்திய உறவு சிறப்பாக அமைய சில வழிமுறைகள் இதோ...!

First Published | Apr 26, 2023, 1:29 PM IST

கணவன்-மனைவி மகிழ்ச்சியாக இருக்க, முதலில் அவர்களின் தாம்பத்திய வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒன்றாக வாழ்வார்கள். எனவே தாம்பத்திய உறவை சிறந்த முறையில் அனுபவிக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்...
 

பாலின இணக்கமான தம்பதிகள் தங்கள் பாலியல் வாழ்க்கையில் சில  பாலின முயற்சிகளை செய்கிறார்கள்.  பாலுறவு இணக்கமான தம்பதிகள் நிறைவான மற்றும் மகிழ்ச்சியான தாம்பத்திய வாழ்க்கையைப் பெற பலவிதமான வழிகளை பின்பற்றுகிறார்கள். அப்படிப்பட்ட சில விஷயங்களைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.. 

வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது:

ஒரு சுமூகமான தாம்பத்திய வாழ்க்கைக்கு தம்பதிகள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயங்களில் வெளிப்படையாகப் பேசுவதும் ஒன்றாகும். பாலுறவு இணக்கமான தம்பதிகள் தங்கள் ஆசைகள், கற்பனைகள் மற்றும் பாலியல் நிலைகள் பற்றி தங்கள் துணையிடம் பேச பயப்பட மாட்டார்கள். அவர்களின் பாலியல் ஆசைகளைப் பற்றி விவாதிக்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். இதுவும் தாம்பத்திய உறவில் முக்கியமான விஷயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஒருவருக்கொருவர் வார்த்தைகளை கவனமாகக் கேளுங்கள்

Tap to resize

புதிய முயற்சியில் ஈடுபடவும்:

தம்பதிகள் இருவரும் புதிய விஷயங்களை கைக்கொண்டால் அவர்களது பாலியல் வாழ்க்கையில் இன்பம் இருக்கும். மேலும் பாலியல் வாழ்க்கையை உற்சாகமாக வைத்திருக்க புதிய நிலைகள், செக்ஸ் பொம்மைகள் பயன்படுத்தலாம். குறிப்பாக உங்களுக்கு வசதியாக இருப்பதை மட்டுமே முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களது தாம்பத்திய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

பாலியல் இன்பத்திற்கு முன்னுரிமை அளிக்கவும்: 

தம்பதிகள் எப்போதும் ஒருவருக்கொருவர் நன்றாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் ஒருவருக்கொருவரின் தேவைகள் மற்றும் விருப்பங்களை பற்றி கவலைப்பட வேண்டும். பாலியல் இன்பத்தை அடைய இருவரும் ஒன்றாக முயற்ச்சிக்க வேண்டும்.
குறிப்பாக உடலுறவில் ஒருவரையொருவர் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வெவ்வேறு வழிகளில் முயற்சி செய்வது நல்லது.

பாலியல் மதிப்புகள் வேண்டும்:

பாலியல் இணக்கமான தம்பதிகள் ஒரே மாதிரியான பாலியல் மதிப்புகள் மற்றும் நம்பிக்கைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். மேலும், ஒரே மாதிரியான பாலியல் ஆசைகள் உள்ளதா? என்பதை அறிய வேண்டும். குறிப்பாக ஒருவருக்கொருவர் தங்களது ஆசைகளை பகிர்ந்து கொள்வது மிகவும் அவசியம். எங்காவது பிரச்சனை என்றால் முதலில் அதனை தீர்ப்பது நல்லது.

இதையும் படிங்க: யம்மாடியோவ்! கொட்டி கிடக்கும் அழகு.. 7 ஆயிரம் ஆண் நண்பர்கள்! இந்த அழகியின் இன்னொரு பக்கம் தெரியுமா?

வலுவான உணர்ச்சி ரீதியான தொடர்பைக் கொண்டிருக்கவும்:

தாம்பத்திய உறவில் இருக்கும் தம்பதிகள் அனைவரும் உணர்ச்சி ரீதியான தொடர்பை வலுவாக கொண்டிருக்க வேண்டும்.இதனால் ஒருவருக்கொருவர் வலுவாகவும் நெருக்கமாகவும் இருக்க முடியும். மேலும் இருவருக்குள் நம்பிக்கை வரும். இந்த உணர்ச்சிப் பிணைப்பை வலுப்படுத்த அணைத்து முத்தங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Latest Videos

click me!