ரத்த பசி கொண்ட அகோரி பூஜை..மனைவியை கட்டிப்போட்டு மாதவிடாய் ரத்தத்தை உறிஞ்சி..வெக்கமில்லாம கணவன் செய்த ஈன செயல்

First Published | Mar 13, 2023, 6:49 PM IST

மாதவிடாய் ரத்தத்தில் செய்யும் அகோரி பூஜையும்.. அதன் பின்னணியும் முழுவிவரத்தை இந்த பதிவில் காணலாம்.

அலுவலகம், சொந்த வீடு அல்லது மாமியார் வீட்டில் என எங்கு சென்றாலும் பெண்கள் வன்முறையை எதிர்கொள்கின்றனர். ஆன்மீக சடங்குகளும், மாந்திரிக சடங்குகளும் கூட பெண்களை சுற்றியே தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆணாதிக்க சமூகத்தின் வேரில் பிறந்த சில பிற்போக்கான சடங்குகள் இன்றும் வழக்கத்தில் உள்ளன.

இந்த நிலையில் அண்மையில் நடந்த சம்பவங்கள் கொடுமையிலும் கொடுமையாய் அமைந்துள்ளன. மாதவிடாய் ரத்தத்தில் அகோரி பூஜை, மனித எலும்புகளை பொடியாக்கி பெண்ணை தின்ன சொன்ன கொடூரம் போன்ற நெஞ்சை உலுக்கும் சம்பவங்களை இங்கு காணலாம்.  

Latest Videos


மகாராஷ்டிராவில் உள்ள பீட் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் ஒரு மாமியாரின் கோரமுகத்தை நமக்கு காட்டுகிறது. அண்மையில் ஒரு பெண் இது குறித்து புகார் அளித்தார். அந்த புகாரில், தனது கணவரும் மாமியார் தன்னை துன்புறுத்தியதாக கூறியுள்ளார். 'அகோரி பூஜை' சடங்குக்காக அவரை கட்டிப்போட்டு அவரின் மாதவிடாய் இரத்தத்தை எடுத்துக் கொண்டதாகவும் அவர் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமில்லை, அந்த மாதவிடாய் நாள்களின் போது மூன்று தினங்கள் பட்டினி கிடந்ததாகவும், ஒவ்வொரு மாதமும் இதைப் போலவே கட்டி வைத்து தன் மாதவிடாய் ரத்தத்தை சேகரித்து அகோரி பூஜை செய்யும் நபருக்கு ரூ.50 ஆயிரத்திற்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்துள்ளார். தற்போது புனேவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிற்குத் திரும்பிய பிறகு அந்தப் பெண் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லை.. இன்னொரு பூஜையை குறித்தும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

Aghori Yaga

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்னொரு பெண் தனது கணவர் மற்றும் மாமியார் மீது அளித்த புகார் அந்த மாநிலத்தை உலுக்கியது. கடந்த ஜனவரியில் குழந்தை பாக்கியம் கிடைக்க ஒரு உள்ளூர் மாந்திரிகன் சொன்னதன் பேரில், மாமியாரும் கணவரும் தூள் செய்யப்பட்ட மனித எலும்புகளை சாப்பிடும்படி அந்த பெண்ணை கட்டாயப்படுத்தியதாக புகார் அளித்துள்ளார். 

இதையும் படிங்க: தினமும் அரை ஸ்பூன் மஞ்சள் சாப்பிட்டு பாருங்க.. உங்கள் உடலில் அற்புதம் நடப்பது உறுதி..!

முன்னதாக அவர் அளித்த புகாரில் வரதட்ணை கொடுமை என்றும் கூறியுள்ளார். இரண்டாவது தொடுத்த வழக்கில், அமாவாசை இரவு அன்று வீட்டில் செய்யும் மூடநம்பிக்கை நடவடிக்கைகளில் பங்கேற்கும்படி மாமியார் கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. தன்னை வலுக்கட்டாயமாக சுடுகாட்டிற்கு அழைத்துச் சென்று, பொடி செய்யப்பட்ட மனித எலும்புகளை உண்ண சொல்லும் சடங்குகளில் பங்கேற்க வைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.  

கொடூரமான இந்த பூஜைகள் ஒருபுறம் மக்களின் மூடநம்பிக்கையும், அறியாமையும் காட்டினாலும்.. இன்னொரு புறம் பெண்களே பெண்களுக்கு எதிராக நிற்பதையும் காட்டுகிறது. மாமியார்கள் மனைவிகளை வதைகின்றனர். அதற்கு கணவன்களே துணைபோகின்றனர். 

இதையும் படிங்க: மாமியார் தாய்ப்பால் கொடுக்குறாங்க, எந்த வீட்டுல இப்படி நடக்கும்?சம்பவத்தை நேரில் பார்த்த மருமகள் செய்த காரியம்

click me!