உடல் ரீதியான விருப்பமின்மை
எதிர் பாலினத்தவர் மீது உங்களுக்கு உடல் ரீதியான விருப்பமில்லை என்பது மூன்றாம் கட்ட அறிகுறியாகும். நீங்கள் ஒருவரால் ஈர்க்கப்படும்போது, அது உங்களுக்குள் உடலுறவுக்கான ஆசையை தூண்டுகிறது. அதன்மூலம் முத்தமிட்டுக் கொள்வது, கட்டியணைப்பது, உடலை தொடுவது போன்ற செயல்பாடுகளும் அடங்கும். இதுபோன்ற எந்தவிதமான உணர்வும் எதிர்பாலினத்தவர் மீது எழவில்லை என்றால், உங்களுடைய பாலியல் தேர்வு மாறுபட்டது என்று அர்த்தமாகிறது.
சமப்பால் மீதான ஈர்ப்பு
ஒரே பாலினத்துடன் நட்பை உருவாக்குவதற்கான நிலையான தூண்டுதலை நீங்கள் உணர்ந்தால், அதே பாலினத்தவருடன் நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். நீங்கள் அவர்களுடன் காதல் உறவைத் தொடர விரும்பலாம். இதன்மூலம் நீங்கள் ஓரினச்சேர்க்கையாளர் அல்லது சமப்பால் ஈர்ப்பு கொண்டவர் என்று அறியப்படுவீர்கள்.