செக்ஸ் போர் அடிக்கிறதா? புதுசா ஆரம்பிக்க இந்த விஷயங்களை பாலோ பண்ணுங்கோ..!

First Published | Mar 4, 2023, 7:02 PM IST

தாம்பத்தியத்தில் கொஞ்சம் புதுமை இருந்தால் தான் உறவு சுவாரசியமாக இருக்கும்.  

தம்பதிகள் செக்ஸ் உறவில் ஆர்வம் கூட சில விஷயங்களை அவ்வப்போது முயல வேண்டும். அதில் ஒருவரையொருவர் அறிமுகம் இல்லாத புதியவர்கள் போல காட்டிக் கொண்டு உறவை தொடங்குவது சுவாரஸ்யமாக இருக்கும். எங்கோ ஒரு வெளியிடத்தில் அதாவது ஷாப்பிங் மால், ஏதேனும் உணவகத்தில் நீங்கள் சந்திப்பது போல கற்பனை செய்து அந்த அந்நிய கதாபாத்திரமாக மாறி பின் உறவு கொள்ளலாம். 

உடலுறவில் ரோல்பிளே என்பது நல்ல விளையாட்டு. எப்போதும் கணவன் மனைவியாக இல்லாமல் கொஞ்சம் விளையாட்டாக வெவ்வேறு தோற்றத்தில், ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி, ஒருவரை ஒருவர் தெரியாதவர்கள் போல அறிமுகம் செய்து, பாலியல் உறவை இன்ரஸ்டிங் ஆக மாற்றுங்கள். இங்கு சில ரோல்பிளே ஐடியாக்களை உங்களுக்கு தருகிறோம் முயன்று பாருங்கள். 

Tap to resize

செக்ஸ் கற்பனை உலகில் கணவனும் மனைவியும் பேராசரியர், கல்லூரி மாணவர் உறவு தான் ரொம்ப விரும்பப்படும் 'கற்பனை' என சொல்லப்படுகிறது. இப்போதெல்லாம் ஆசிரியரை திருமணம் செய்வது நிறைய நடக்கின்றன. ஆசிரியர் / ஆசிரியை மேல் குட்டி கிரஷ் வருவது இயல்பானது தான். (*ஆனால் அதை தவறாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது) கணவன் மனைவி ஃபேண்டசி உலகுக்கு இந்த கற்பனை ஓ.கேவாக இருக்க வேண்டும். வீட்டில் உறவு கொள்ளும் முன் ஒருவரையொருவர் இப்படி நடித்து இம்ப்ரஸ் பண்ணி பாருங்கள். 

போர்னோ படங்களில் நிறை காட்சிகள் வரும். அதில் அறிமுகமில்லாதவர்களுடன் செக்ஸ் கொள்வது அதிகம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வீட்டில் ஏதேனும் பழுது வேலை பார்க்க வருபவர் மீது ஈர்ப்பு தோன்றுவது போல செக்ஸில் ஈடுபடுவது பிரபலமான ரோல்பிளே தெரியுமா? இந்த ரோல்பிளேயில் சட்டென ஒரு ஸ்பார்க் வரும். அது உங்களுடைய பாலியல் உறவை சிறக்க செய்யும். 

ரசிக மனப்பான்மையில் உறவு கொள்வதும் துடிப்பான நிகழ்வாக இருக்கும். பிரபல நடிகர், நடிகைகள், பாடகர்கள் ஆகியோர்கள் மீது ஒருவிதமான கற்பனை சித்திரம் எல்லோருக்கும் இருக்கும். அதை அப்படியே வீட்டில் ரோல் பிளேவாக செய்து செக்ஸில் பயன்படுத்தலாம். 

இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் இதை செய்யாவிட்டால், விவாகரத்து கூட ஆகலாம்.. உங்கள் துணை என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா?

மசாஜ் செய்பவர், கஸ்டமர் போல செய்தால் செக்ஸில் கூடுதல் இன்பம் கிடைக்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆயில் மசாஜ் பண்ணி கொள்வது செக்ஸுக்கு மட்டுமல்ல உடலையும் மனதையும் கூட நிம்மதியாக்கும். மசாஜ் செய்வதால் தலை முதல் கால் வரை இளகுவாகும். மகிழ்ச்சி ஹார்மோனான எண்டோர்பின் சுரக்கும். இதனால் உங்களுக்குள் நெருக்கம் ரொம்ப அதிகரிக்கும். 

பிடிஎஸ்எம் உறவுகள் தற்போது பிரபலமாகி வருகிறது. கிட்டத்தட்ட வலியில் சுகம் காணும் உறவு அது. செக்ஸில் ஒருவர் அதிகாரம் செய்வதாகவும், மற்றொருவர் அதற்கு அடங்கி அந்த வலியில் சுகம் காணுவதாகவும் இருப்பதுதான் அது. இதையும் முயற்சி செய்யலாம். 

இதையும் படிங்க: செக்ஸ் வைத்த பிறகு ஏன் முரட்டு தூக்கம் வருது.. ஒருவேளை இந்த காரணமா இருக்குமோ?

Latest Videos

click me!