உடலுறவு கொண்ட பிறகு உங்கள் துணை தூங்குவது இயல்பானதா? இந்த சோர்வு 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்குமா? அவர்களை தெம்பூட்ட என்ன செய்ய வேண்டும்? இன்னும் பல பெண்கள் இந்த கேள்விகளுக்கு பதில்களைத் தேடுகிறார்கள். செக்ஸுக்கு பின் தூங்குவது அசாதாரணமா? ஒருபோதும் அப்படி இல்லை. செக்ஸுக்கு பின் தோன்றும் சோர்வு, மனித உடல் அதுவரை செய்த முயற்சியின் எதிர்வினையாகும். அதாவது படுக்கையில் பயங்கரமாக இயங்கியதன் விளைவு.
பெரும்பாலான சமயங்களில், செக்ஸ் வைத்த பிறகு ஆண் தன் துணையை அரவணைக்காமல், பேசாமல், வெறுமனே திரும்பி படுத்து கொள்கிறான். அப்படி உறங்கினால், அந்த பெண் தன்னிச்சையாக முடிவெடுப்பது இயற்கையானது. அதாவது தன் கணவன் திருப்தியடையவில்லை என நினைத்து கொள்கிறாள். ஆனால் அது தவறான நம்பிக்கை. உடலுறவுக்குப் பின் ஆண்கள் தூங்குவதற்கான சில காரணங்கள் இதோ....
இரவில் செக்ஸ், குறிப்பாக மனித உடல் ஏற்கனவே சோர்வாக இருக்கும் போது, செக்ஸ் வைத்தால் சிலருக்கு உடனே தூக்கம் வரும். உண்மையான உடலுறவு மிகவும் கெஞ்சி 'கோரிக்கையாக' 'கட்டாயமாக' இருக்க வேண்டியதில்லை. உடலுறவு அதன் இயல்பிலேயே மிகவும் நிதானமானது என்பதை நியாபகம் வைத்து கொள்ளுங்கள்.
ஆண்களுக்கு உச்சக்கட்டத்தின் போது விந்து வெளியேறுகிறது. அப்போது விடுவிக்கப்படும் ஹார்மோன்கள் சோம்பல் நிலையைத் தூண்டி விடுகின்றன. அதனால் அந்த சமயம் வரும் தூக்க உணர்வு வழக்கமானதை விட மிகவும் தீவிரமாக வெளிப்படுகிறது. அப்போது உடலின் பதற்றம் நல்லதாக இருந்தாலும் கவனிக்கத்தக்கது.
தூக்கத்தின் நிலையை கொஞ்சம் பாசிடிவ் ஆக எடுத்தோம் என்றால், நீங்கள் உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டீர்கள் என்பதை தான் அது நிரூபிக்கிறது. சில நேரங்களில் செக்ஸ் வைக்கும்போதும், அதற்குப் பிறகும் ரொம்ப நேரம் சோர்வாகவே காணப்படும் ஆண்களுக்கு மருத்துவ பிரச்சனைகள் இருக்கலாம். இதை கவனிக்க வேண்டும். மருத்துவரை அணுகுங்கள்.
உடலுறவுக்கு பின் தூங்க விரும்பாவிட்டால் உங்கள் துணையுடன் படுக்கைக்குச் செல்லும் முன் காபி பருகுங்கள். இது ஒரு நீண்ட கால தீர்வு என கூற முடியாது. இது ஒரு பயனுள்ள சிற்றின்ப தூண்டுதல். சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் காஃபின் உங்களுக்கு உதவலாம்.
இதையும் படிங்க: செக்ஸ் வாழ்க்கையில் இதை செய்யாவிட்டால், விவாகரத்து கூட ஆகலாம்.. உங்கள் துணை என்ன எதிர்பார்க்கிறார் தெரியுமா?