பாராட்டுக்களுக்காக பெண்கள் இப்படியும் செய்வாங்களா? ஆண்களை ஈர்க்கும் போது தான் அப்படி! ஒரு பெண்ணின் வாக்குமூலம்

First Published | Apr 15, 2023, 6:02 PM IST

ஒவ்வொரு காதலும் ஒரு அனுபவம். சிறு பிரிவுகள் தான் உறவின் ஆழத்தை நம் கண் முன் நிறுத்துகிறது. இங்கு கிளை விட்டு கிளை தாவுவது போல, அடுத்தடுத்து காதல் செய்த ஒருவரின் அனுபவத்தை உங்களுக்கு சொல்கிறோம். 

சிலரால் எந்த உறவிலும் தீவிரமாக தன்னை இணைத்து கொள்ள முடியாது. அவர்களின் தேவையெல்லாம் அந்தந்த நேரத்து மயக்கம். குறுகிய கால இன்பம் மட்டுமே! சண்டையோ கருத்து மோதலோ வந்தால் டாட்டா காட்டி விடுவார்கள். ஒருவகையில் அந்த பிரிவை ஏற்று கொண்டு நகர்வது நமக்கு நல்லது என்றாலும், அவருடன் உறவில் இருந்த காலத்தில், நம்முடைய அன்பு, நேரம், காதல் எல்லாமே அவருக்கு கொடுத்திருக்கிறோமே! அதற்கு என்ன பதில்? இங்கு அந்த மாதிரி உறவை விரைவில் முறித்து கொள்ளும் ஒருவரின் அனுபவம் கொடுக்கப்பட்டுள்ளது. 

"உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஒருவருடன் உறவில் இருப்பது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. ஒருவரிடம் மட்டுமே என்னை அர்பணிக்க வேண்டும் என்ற எண்ணம் என்னை பயமுறுத்துகிறது. ஏனென்றால் அதில் நான் உறுதியாக இருக்க முடியுமா? என்ற அச்சமும், குழப்பமும் எனக்கு இருக்கிறது. எல்லா உறவிலும் இறுதியில், பழி என் மீது தான் விழுகிறது. இப்படியே மற்றவர்கள் என்னை நோக்கி கை காட்டி குற்றஞ்சாட்டுவதை நான் அடியோடு வெறுக்கிறேன்.


நான் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறேன். அதில் சிலர் திருமணமானவர்கள், சிலர் வேறொரு உறவில் இருந்தனர். ஒவ்வொருமுறை ஆண்களிடமிருந்து நான் பெறும் கவனத்தை நான் உள்ளூர ரசிக்கிறேன். அது என்னை திருப்தியடைய செய்கிறது. ஒவ்வொரு நாளும் என்னை அழகாக பராமரிக்க ரொம்பவும் மெனக்கெடுவேன். நான் சந்தித்த வரை பெரும்பாலான ஆண்கள் விசுவாசமாக இருப்பதில்லை. அதனால் என் மனசாட்சியும் உறுத்தாது. சிலர் வேறொரு பெண்ணுடன் இருக்கும்போதும், என்னைப் பார்க்கும் அளவுக்கு வெட்கமின்றி இருந்தார்கள். அவர்களுடைய கண்கள் என்னை துளைத்தெடுக்கும். அதை ஒரு உரையாடலைத் தொடங்குவதற்கான வாய்ப்பாக எடுத்துக்கொள்வேன். அதன் பிறகு உரையாடல், மீண்டும் மீண்டும் சந்திப்பு அப்படியே அது வேறுமாதிரி ஆகிவிடும். 

ஆண்கள் தங்களுடன் ஒரு பெண் இருந்தாலும் கூட, என்னைப் பார்க்காமல் அவர்களால் இருக்க முடியாது. இது எனக்கு நம்பிக்கையையும், ஒரு மாதிரி நல்ல உணர்வையும் கொடுக்கிறது. அந்த உணர்வு - நான் மிகவும் அழகாக இருக்கிறேன் - என்பது தான். உண்மையில் திருமணமான ஆண்கள் கூட என்னுடன் இருக்க எல்லாவற்றையும் பணயம் வைக்கிறார்கள். இந்த உணர்வு மிகவும் போதையானது. நான் குழந்தையாக இருந்தபோது இப்படி யாரும் என்னை பாராட்டவில்லை. என் இளம்வயதில் பாராட்டுக்களுக்கு ஏங்கினேன். என் கல்லூரி படிப்பு காலத்தில் அதன் தேவை அதிகமானது. ஒவ்வொருவரும் என்னை நோக்கி ஈர்க்கப்படுவதைப் காண்பது எனக்கு வேடிக்கையாக இருந்தது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால் வேறொருவருடன் இருந்த ஆண்களை என்னால் ஈர்க்க முடிந்தபோது, அது உச்சக்கட்ட போதையாக மாறியது. 

இதையும் படிங்க: செக்ஸில் முழு திருப்தி அடையவில்லையா? அப்போ உங்க துணை இப்படி தான் நடந்துப்பாங்க!

இப்படி ஒருவரை என்னை நோக்கி ஈர்த்த பின்பு அந்த உறவு நச்சுத்தன்மை வாய்ந்ததாகவோ (toxic) அல்லது கையாள முடியாத அளவுக்கு மோசமாக மாறும் முன்பு, அந்த நபருடன் உறவை முறித்துவிடுவேன். உறவில் இருந்தால் நான் எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பது போல் இருக்கிறது. இப்போது வரை 5 முதல் 6 பேருடன் டேட்டிங் சென்றுள்ளேன் இந்த எண்ணிக்கை தொடரலாம்! ஆண்களை என்னை நோக்கி ஈர்ப்பதை நான் ரசிக்கிறேன்" என தன் கதையை அவர் முடிக்கிறார்.

உண்மையில், பாராட்டுக்காகவும், கவன ஈர்ப்புக்காகவும் ஒருவருடன் இருப்பவரால் அந்த த்ரில் முடிந்ததும் அந்த உறவை தொடரமுடிவதில்லை. தாங்கள் காதலிக்கப்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள் அவ்வளவு தான். இந்த மாதிரி காதல் வலையில் சிக்கி கொள்ளாதீர்கள். அதிலும் உங்களுடன் உறவில் இருக்கும்போது மற்றொருவரை நோக்கி ஈர்க்கப்பட்டு ஏமாற்றும் நபர்களிடம் கவனமாக இருக்க வேண்டும். டைம்பாஸ்!

இதையும் படிங்க: தொடர்ந்து ஏமாற்றும் கணவர் மீண்டும் மனம்மாறி வந்தால், அப்ப மனைவி என்ன செய்ய வேண்டும்? நிபுணரின் பதில்!!

Latest Videos

click me!