செக்ஸில் முழு திருப்தி அடையவில்லையா? அப்போ உங்க துணை இப்படி தான் நடந்துப்பாங்க!

First Published | Apr 14, 2023, 6:58 PM IST

உங்கள் துணை உங்களுடன் உடலுறவில் இன்பம் காணாவிட்டால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை இங்கு காணலாம். 

உங்களுடைய துணை உங்களுடன் அந்த நேரத்தில் மகிழ்ச்சியாக இல்லாமல் இருந்தால் உடலுறவு கொள்ளாமல் இருப்பதற்கு சாக்கு போக்கு சொல்லி தப்பிப்பார்கள். இதற்கு நீங்கள் முழுதிருப்தியை அளிக்காமல் இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அதுமட்டும் காரணமாக இருந்துவிட முடியாது. உங்களை உடலுறவிலும், மற்ற விஷயங்களிலும் உங்கள் மனைவியோ/ கணவனோ ஒதுக்கி வைத்தால் அதற்கு என்னென்ன காரணங்கள் என்பதை இங்கு காணலாம். 

உங்கள் துணை செக்ஸ் வைக்கும் போது உச்சக்கட்டத்தை அனுபவிக்காமல் இருக்கலாம். அப்படியான சமயங்கள் முகபாவங்கள் அதை காட்டும். இது உடலுறவை நன்கு அனுபவிக்கவில்லை என்பதற்கான அறிகுறி. இதனால் அவர்கள் உடலுறவில் போலியான பாவனைகளை உருவாக்கி விரைவில் உறவை முடித்து கொள்வார்கள். அதாவது போலியான முனங்கல்கள் கொடுத்து உங்களை ஏமாற்றும் வாய்ப்புள்ளது. ஆய்வின்படி 70% பெண்கள் போலி முனங்கல் செய்துவிடுகின்றனராம். கணவனின் முரட்டுத்தனமான நடவடிக்கை, ரசனையில்லாத தொடுதல் அவர்களை இப்படி செய்ய சொல்கிறது என்கிறார்கள். 

Tap to resize

உடலுறவின் போது உற்சாகமாகவோ, தொடர்ந்து செய்ய ஈடுபாடு காட்டாமலோ உங்கள் துணை அலட்சியம் செய்தால் உங்களுடன் உணர்ச்சி ரீதியாக விலகி இருப்பது காரணமாக இருக்கலாம். உங்கள் மீது ஆர்வம் இல்லாமல் போக என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். உடலுறவில் புதுமை காட்டாமல் எப்போதும் போலவே நடந்து கொள்வதா? துணையின் விருப்பங்களை புரிந்து கொள்ளாமல் இருப்பதா? என்ன காரணம் என்பதை தெரிந்து சரி செய்ய வேண்டும். 

உங்கள் துணையின் ஆசைகள், விருப்பங்கள் அல்லது பாலியல் செயல்பாடு குறித்த கவலைகள் பற்றி வெளிப்படையாகத் தெரிவிக்காமல் இருக்கலாம். அதற்கான உரையாடலை தொடங்குங்கள். அவர்கள் செக்ஸ் பற்றிய தங்கள் உணர்வுகளைப் பற்றி விவாதிப்பதையோ அல்லது வெளிப்படுத்துவதையோ தவிர்க்கலாம். இது உடலுறவு திருப்தி இல்லாமல் நடக்க வாய்ப்புள்ளது. விரக்தியாகும் முன் உறவை பலப்படுத்துங்கள். 

இதையும் படிங்க; கணவரின் சந்தேக புத்தி.. மகளுக்கு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்த பெண்! வெளிவந்த உண்மை! ஹாஸ்பிட்டலில் செய்யப்பட்ட சதியா?

உடலுறவின் போது உடல் அசௌகரியம் அல்லது வலியின் அறிகுறிகளை உங்கள் துணை வெளிப்படுத்தலாம். அப்போது அவர்கள் அந்த உடலுறவு அனுபவத்தை ரசிக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் இருவரும் அசௌகரியத்தை சரி செய்ய முயலலாம் அல்லது மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம். 

செக்ஸ் என்றால் வெறும் உடல் செயல்பாடு அல்ல, அது உணர்வுபூர்வமானது. உறவு கொள்ளும் போது அல்லது அதற்கு பின்னர் உங்கள் துணையுடன் உணர்ச்சி ரீதியாக நெருங்காமல், ஒழுங்காக பேசாமல், அக்கறை காட்டாமல் தேமே என திரிந்தால், அவர் உங்களுடன் உணர்ச்சிரீதியான நெருக்கத்தை அனுபவிக்காமல் போய்விடுவார். இதனால் உங்களுக்குள் விரிசல் வரலாம். மூன்றாம் நபர் கூட வரலாம். அந்த விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: தொடர்ந்து ஏமாற்றும் கணவர் மீண்டும் மனம்மாறி வந்தால், அப்ப மனைவி என்ன செய்ய வேண்டும்? நிபுணரின் பதில்!!

Latest Videos

click me!