உங்கள் துணையிடம் இதையெல்லாம் எதிர்பார்க்காதீங்க.. உங்கள் உறவுக்கே பெரும் சிக்கலாகிவிடும்..

First Published | Oct 4, 2023, 6:38 PM IST

எந்தவொரு உறவிலும், ஆரோக்கியமான மற்றும் நிலையான பிணைப்பைப் பராமரிக்க ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

How to Build Relationship

எதிர்பார்ப்பு இல்லாமல் எந்தவொரு உறவும் இருக்காது. உறவுகளை பொறுத்தவரை, எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் வெற்றி அல்லது தோல்விக்கு முக்கிய காரணியாக மாறுகின்றன.. எதிர்பார்ப்புகள், பூர்த்தி செய்யப்படாவிட்டால், அவை வலுவான பிணைப்புகளைக் கூட அழித்துவிடும்.. நமது எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது நமது துணை அதிகமாகவும் அழுத்தமாகவும் உணரலாம். இதன் விளைவாக, இந்த  எதிர்பார்ப்புகள் உறவில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

எந்தவொரு உறவிலும், ஆரோக்கியமான மற்றும் நிலையான பிணைப்பைப் பராமரிக்க ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்வது அவசியம். அந்த எதிர்பார்ப்புகள் யதார்த்தத்துடன் முரண்படும் போது அடிக்கடி சிக்கல் எழுகிறது, இது ஒரு முரண்பாட்டை உருவாக்குகிறது, அது இறுதியில் விரக்தி மற்றும் மனக்கசப்புக்கு வழிவகுக்கும். இந்த சூழ்நிலையைத் தவிர்க்க, ஒரு உறவில் எதிர்பார்ப்புகளின் ஏற்றத்தாழ்வைக் குறிக்கும் சிவுப்பு கொடிகள் பற்றி எச்சரிக்கையாக இருப்பது முக்கியம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Tap to resize

ஒருவரால் இன்னொருவரை எப்போதும் சந்தோஷப்படுத்த முடியாது. இது சாத்தியமே இல்லாத ஒன்று. எனவே, உங்கள் துணை எப்போதும் உங்களை மகிழ்ச்சியடையச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும். அதற்குப் பதிலாக, உங்களுக்குள் மகிழ்ச்சியைக் கண்டறிவதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் துணை உங்களை மகிழ்விக்கும் நேரங்களுக்கு நன்றியுடன் இருங்கள். யாருமே இங்கு ரொம்ப பெர்ஃபக்டானவர்கள் இல்லை. எனவே, உங்கள் துணை உங்களை கோபப்படுத்தவோ அல்லது வருத்தப்படவோ செய்யமாட்டார் என்று எதிர்பார்ப்பது தவறு.

அந்த எதிர்மறை உணர்ச்சிகள் எழும்போது அவற்றை எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். கோபத்தில் விஷயங்களைச் சொல்வதைத் தவிர்த்து, உங்கள் துணையின் பார்வையில் விஷயங்களைப் பார்க்க முயற்சிக்கவும். நினைவில் கொள்ளுங்கள், சண்டையிடுவது எப்போதும் ஒரு மோசமான விஷயம் அல்ல; அது மோதலைத் தீர்க்கவும், பிணைப்பை நெருக்கமாக வைத்திருக்கவும் உதவும்.

தபு முதல் நயன்தாரா வரை.. ஏற்கனவே திருமணமான ஆண்களுடன் ரகசிய உறவு வைத்திருந்த நடிகைகள்..
 

உங்கள் துணையுடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது ஆரோக்கியமானது. நீங்கள் இருவரும் உங்களை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும் என்பதையும், நீங்கள் ஒருவரை ஒருவர் நம்பவும் உதவுகிறது. மாற்றம் என்பது வாழ்க்கையின் இயல்பான பகுதியாகும். எனவே, உங்கள் துணை ஒருபோதும் மாறமாட்டார் என்று எதிர்பார்ப்பது உங்களை ஏமாற்றத்தை அளிக்கும்.. மாறாக, மக்கள் மாறுவது என்பது இயல்பாந்து என்பதையும், அந்த வகையில் உங்கள் துணையும் மாறக்கூடும் என்பதையும் ஏற்றுக்கொள்ள முயற்சிக்கவும்.

எந்த உறவும் எப்போதும் சுமூகமாக இருக்காது. ஏற்ற தாழ்வுகள் இருக்கும். உங்கள் உறவில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூட்டாது என்று நீங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறீர்கள் என்றால், நீங்கள் ஏமாற்றமடைவீர்கள். நல்ல நேரங்கள் இருக்கும் மற்றும் கெட்ட நேரங்கள் இருக்கும் ஆனால் நீங்கள் ஒன்றாக பிரச்சனைகள் எதிர்கொண்டால், உங்கள் உறவு நன்றாக இருக்கும். உங்கள் உறவின் நல்ல அம்சங்களில் கவனம் செலுத்துங்கள். மேலும் கடினமான காலங்களில் ஒன்றாக வேலை செய்ய முயற்சிக்கவும்.

நாம் அனைவரும் தவறு செய்கிறோம், உங்கள் துணையும் மனிதர் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அவர்கள் ஏதாவது தவறு செய்யும் போது அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும். உறவுகளில் மக்கள் கொண்டிருக்கும் மிகவும் பொதுவான மற்றும் தீங்கு விளைவிக்கும் எதிர்பார்ப்புகளில் ஒன்று, தங்களின் துணை எப்போதும் தங்களுடன் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

ஒரு கட்டத்தில் பெண்களுக்கு ஏன் ஆண்களை பிடிக்காமல் போகிறது? இதெல்லாம் தான் காரணங்கள்..
 

உங்களுக்குத் தேவைப்படும்போதெல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது ஆரோக்கியமற்றது மற்றும் நம்பத்தகாதது. ஒவ்வொருவருக்கும் அவர்களின் உறவுக்கு வெளியே கடமைகள் உள்ளன, எனவே உங்கள் துணையின் நேரத்தையும் இடத்தையும் மதிக்க வேண்டியது அவசியம். இருப்பினும், இந்த வேறுபாடுகள் முழுமையாக பேசி தீர்க்கப்படாவிட்டால், அவை விரைவில் உறவில் பதற்றம் மற்றும் மோதலின் ஆதாரமாக மாறும். உண்மையில், பெரும்பாலும் இந்த எதிர்பார்க்காத எதிர்பார்ப்புகளே இறுதியில் வலுவான பிணைப்பை மோசமாக பாதிக்கும்..

ஆரோக்கியமான உறவுகளை வளர்ப்பதற்கும் தேவையற்ற ஏமாற்றம் மற்றும் மோதல்களைத் தவிர்ப்பதற்கும், எதிர்பார்ப்புகளை எவ்வாறு புத்திசாலித்தனமாக நிர்வகிப்பது என்பதைக் கற்றுக்கொள்வது முக்கியம்.  நச்சுத்தன்மை மற்றும் அவநம்பிக்கைக்கு வழிவகுக்கும் முரண்பட்ட எதிர்பார்ப்புகளை விட பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டப்பட்ட ஆரோக்கியமான உறவுகளை ஒருவர் பராமரிக்க முடியும்.

Latest Videos

click me!