தம்பதிகள் ஜோடியா ஆபாச படங்கள் பார்த்தால்.. அவங்களோட அந்தரங்கத்தில் இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கு!

First Published | May 13, 2023, 3:53 PM IST

ஆபாச படங்களை ஜோடியாக இணைந்து பார்க்கும் தம்பதிகளுக்குள் சில ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

தங்களுடைய எதார்த்த வாழ்க்கையின் அனுபவிக்க முடியாத பாலியல் இன்பங்களையும், விருப்பங்களையும் தீர்க்க சிலர் ஆபாச படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதில் ஆண், பெண் என்ற பாலின பேதம் இல்லை. ஆனால் தம்பதிகளாக பெரும்பாலானோர் ஆபாச படங்களை பார்ப்பதில்லை. தம்பதிகள் இணைந்து ஆபாச படங்களை பார்க்கும் போது பல்வேறு நன்மைகள் ஏற்படும். அவர்களுக்கிடையே இருக்கும் பாலியல் சிக்கல்களுக்கு தீர்வுகள் கூட கிடைக்கும். 

தம்பதிகள் இணைந்து ஆபாச படங்களை பார்க்கும்போது, அவர்களுடைய விருப்பங்களை வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள வாய்ப்பு அமையும். ஒருவருக்கொருவர் பாலியல் விருப்பங்களையும் பகிர்ந்து அதை முயற்சித்துப் பார்க்க முடியும். 


 உடலுறவில் ஒரே மாதிரியாக செய்பவர்களுக்கு வெவ்வேறு பொசிஷன்கள், ஐடியாக்கள் தெரிந்து கொள்ள ஆபாச படங்கள் உதவும். அதிலும் துணையோடு பார்க்கும்போது பாலுணர்வு தூண்டப்பட்டு மேலும் நெருக்கம் உண்டாகும். 

தம்பதிகள் படுக்கையறையில் ஆபாசப் படங்களை இணைந்து பார்த்தால் தனிமையில் மகிழ்ச்சி காண முடியும். ஆனால் ஆபாச படங்களை போல அப்படியே உடலுறவு கொள்ள முயலாதீர்கள். அது ஒரு எண்டர்டெய்ன்மெண்ட் மட்டுமே. அது வழிகாட்டி அல்ல. உங்களுக்குள் ஆர்வம் தூண்டப்பட ஆபாச படங்களை ஒரு கருவியாக வைத்து கொள்ளுங்கள். 

ஆபாச படங்களில் இருப்பது வியாபார நோக்கம் கொண்ட உடலுறவு காட்சிகள். அதில் காதலுக்கோ கரிசனத்திற்கோ இடமில்லை. ஆனால் நீங்கள் உங்கள் துணையுடன் அன்புடனும் காதலுடனும் நெருங்க வேண்டும். ஆபாச படங்களை கடந்து பாலுறவில் பல்வேறு நுணுக்கங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக கற்று கொள்ளுங்கள். 

இதையும் படிங்க: பெண்களின் செக்ஸ் ஆசைகள் இப்படியுமா இருக்கு? அதுவும் கணவன் கண் முன்னால் அப்படி செய்யணும்.. விபரீத கற்பனைகள்!

Latest Videos

click me!