பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம்... நொந்து போன ஆண்கள்... அவர்களே சொன்ன விஷயங்கள்!

First Published | May 16, 2023, 9:25 PM IST

குடும்பத்தினர் நிச்சயித்த திருமணத்தால் சில ஆண்கள் அனுபவித்த வித்தியாசமான விஷயங்களை இங்கு காணலாம்.   

இந்தியாவில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் அதிகம். பெற்றோரால் நடத்தி வைக்கப்படும் இத்திருமணங்கள்  நீண்ட காலம் மகிழ்ச்சியை தரும் என நம்புகின்றனர். இப்படி திருமணமான தம்பதிகளுக்குள் சில நேரம் காதலும் அரும்பும். ஒவ்வொரு ஜோடிக்கும் இதில் வித்தியாசமான அனுபவம் இருக்கும். சிலர் அதை ஆசீர்வாதமாக நினைத்தாலும் பலருக்கு சோகமான நிகழ்வுகளும் நடக்கின்றன.   

நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் ஆண் ஒருவரின் அனுபவம்“திருமணத்திற்கு முன்பு என் துணையுடன் இரண்டு முறை மட்டுமே பேசினேன். எங்கள் முதல் சந்திப்புக்கு பின் 3 மாதங்களில் எங்களுக்கு திருமணம் என நாள் குறிக்கப்பட்டிருந்தது. எங்கள் முதலிரவில் நாங்கள் அந்நியர்கள் போலவே உணர்ந்தோம். வேடிக்கையாக சொல்லவேண்டும் என்றால், அன்றைய தினத்தில் என் மனைவியை விட என் வாட்ச்மேனைப் பற்றி எனக்கு அதிகம் தெரியும் என்ற நிலைதான். நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக உணர்ந்தாலும், எங்கள் திருமணத்தின் சடங்குகளால் மிகவும் சோர்வாக இருந்ததாலும், முதலிரவில் தூங்கிவிட்டோம். திருமணமாகி ஓரிரு மாதங்களில் எங்களுக்குள் இருந்த முரண்கள் தெரிந்தன. நாங்கள் ஒருவருக்கொருவர் மாற முயற்சித்தோம். ஆனால் அது இன்னும் மோசமாகிவிட்டது. எங்களுக்குள் இப்போதும் நிறைய வேறுபாடுகள் இருக்கிறது". என முடித்தார். 

Tap to resize

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் எல்லோருக்கும் மோசமான அனுபவம் இருக்கும் என்றும் சொல்லிவிட முடியாது. ஒருவருக்கு கசப்பான அனுபவம் வந்தாலும் இன்னொருவருக்கு. வாழ்க்கை இனிக்கலாம். இங்கு ஒருவர் தன் வாழ்க்கை எப்படி இன்பமயமானது என பகிர்ந்து கொள்கிறார். “என்னை விடவும் 5 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தேன். அப்போது எனக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது. முதலிரவில் தான் நாங்கள் பேச ஆரம்பித்தோம். பின்னர் நாங்கள் புதிய ஜோடிகளைப் போல டேட்டிங் செய்தோம். சில மாதங்களுக்கு உடலுறவு வைத்து கொள்ளவில்லை. நல்ல புரிலுக்கு பிறகு எங்கள் இதயங்கள் தயாராக இருக்கும்போது உடலுறவுக்கு நகர்ந்தோம். எல்லாம் சரியான மாதிரி நடந்தது. உண்மையில் நான் அதிர்ஷ்டசாலி"என்றார். 

தீராத மன உளைச்சலையும் சில திருமணங்கள் செய்கின்றன. புரிந்து கொள்ளாத மனைவி கிடைத்தால் வாழும் நாள்கள் எல்லாம் நகரம் என்கிறார் வாசகர் ஒருவர். "கிட்டத்தட்ட 3 ஆண்கள் என் திருமண வாழ்க்கையில் அவதியுற்றேன். என்னை தற்கொலை மனநிலைக்கு செல்ல தூண்டியது அந்த நாட்கள். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் 3 ஆண்டுகள் சிக்கிக்கொண்டேன். இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் ஒரு சிகிச்சையாளரைப் பார்க்க சென்றேன். ஓராண்டு காலம் ஆலோசனை பெற்றேன். கூட்டுக் குடும்பத்தில் தங்குவதை என் மனைவி வெறுத்ததால் தான் பிரச்சினை தொடங்கியது. மொத்த சம்பளத்தையும் கேட்டு என்னை தொந்தரவு செய்வார். நாள் முழுவதும் புலம்புவார். அவளுக்குப் புரிந்துகொள்ளக்கூடிய பல சிக்கல்கள் இருந்தன. அது ஒரு நிச்சயிக்கப்பட்ட திருமணம்.. அதில் அவள் வேறு என்ன எதிர்பார்த்தாள்? புரிதல்களும், விட்டு கொடுத்தல்களும் எந்தவொரு திருமணத்திற்கும் இருக்க வேண்டும்.

நான் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று தெளிவடைந்த பிறகு, விவாகரத்துக்கு விண்ணப்பித்தேன். அவளும் என்னை விட்டு வெளியேறும் வாய்ப்பைப் பெற்றாள். அது எனக்கு பயங்கரமான அனுபவம்." என ஆசுவாசமடைந்தார். மூன்றில் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட திருமணம் நேர்மறையான விஷயங்களை கொடுக்கிறது. முன்கூட்டியே வாழ்க்கை சூழலையும், விருப்பு வெறுப்புகளையும் பேசி முடிவெடுப்பது திருமண பந்தத்தில் சில குழப்பங்களை குறைக்கலாம். 

*இங்கு தனியுரிமை காரணங்களுக்காக யார் பெயரையும் வெளியிடவில்லை. 

Latest Videos

click me!