பெண்கள் உடலுறவுக்கு மறுக்க காரணங்கள் இத்தனையா? இதுக்கெல்லாமா வேண்டாம்னு சொல்றாங்க!

First Published | May 14, 2023, 1:30 PM IST

உடலுறவு வைத்து கொள்ள வேண்டாம் என்று பெண்கள் மறுப்பு தெரிவிப்பதற்கான காரணங்களை இங்கு காணலாம். 

உடலுறவு வைத்துக் கொள்ளும்போது கணவன் மனைவி இருவரும் மனதளவிலும், உடலளவிலும் மகிழ்ச்சியை உணர்ந்தால் தான் அந்த உறவு உறுதியாக இருக்கும். அவசர அவசரமாக முன்விளையாட்டுகள் ஏதும் செய்யாமல் நேரடியாக உடலுறவுக்கு செல்லும் ஆண்களுடன் உறவு கொள்ள பெண்கள் விரும்புவதில்லை. இது அனைவரும் அறிந்ததே. ஆனால் இது தவிர எதற்காக பெண்கள் மறுப்பு தெரிவிப்பார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

மனதளவிலும், உடலளவிலும் உடலுறவுக்கு தயாராகும் வகையில் ஈர்ப்பை ஏற்படுத்தும் ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள். மகிழ்ச்சியான தாம்பத்தியத்திற்கு பெண்களின் உடல் உறுப்புகளின் மீது ஆண்களுடைய ஸ்பரிசம் தீண்ட வேண்டும். பெண்களுடைய கிளைட்டோரியஸ் தூண்டப்பட விரும்புவார்கள், அந்த இன்பத்தை கொடுக்கும் ஆண்கள் அவர்களின் மனதில் இடம்பிடிக்கிறார்கள். 

Tap to resize

உடலுறவின்போது வாசனையுள்ள ஆண்களையே பெண்கள் விரும்புகிறார்கள். புகைபிடிக்கும், மது அருந்தும் ஆண்கள் அருகே செல்லும்போது பெண்களுக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது. அந்த வாசனையை பத்தில் ஒருவர் தான் விரும்புகின்றனர். சில பெண்கள் ஆண்களின் இந்த துர்நாற்றத்தை சகித்துக் கொள்கிறார்கள். பிற பெண்கள் இதனால் உடலுறவு கொள்வதையே தவிர்க்கிறார்கள். 

பெண்கள் சில பொசிஷன்களை விரும்புவதில்லை. விரும்பாத விஷயங்களை கட்டாயப்படுத்தி ஆண் தன்னுடைய இன்பத்தை மட்டும் பெறும்போது பெண்கள் உடலுறவை மறுக்கலாம். சில ஆண்கள் மன அழுத்தம் ஏற்படும் போது உடலுறவு கொள்ள ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் பெண்களைப் பொருத்தவரை எந்த மன அழுத்தமும் இல்லாத சமயங்களில் தான் உடலுறவில் ஈடுபட ஆர்வம் காட்டுவார்கள். இந்த சூழலில் பெண்களின் மனநிலையை தெரிந்து கொண்டு உடலுறவுக்கு முயற்சி செய்வது நல்லது. 

மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி மனதளவில் காயப்படுத்தி விட்டு சிறு மன்னிப்பு கூட கூறாமல் இயல்பாக உடலுறவு முயற்சி செய்யும்போது பெண்களுக்கு கணவர் மீது வெறுப்பு ஏற்படுகிறது. இதனால் உடலுறவுக்கு மறுப்பு சொல்ல தொடங்கிவிடுவார்கள். காதலும், அன்பும், பரிவும் இல்லாத ஆண்களை பெண்களுக்கு பிடிப்பதில்லை. நாள்தோறும் ஏதேனும் ஆசை வார்த்தைகளை கூறுவது, ஆதரவாக இருப்பது போன்ற செயல்களை செய்யும் கணவர்களை மனைவி அதிகமாக விரும்புகிறாள். அவ்வப்போது முத்தமிட்டு கட்டியணைப்பதும் தாம்பத்தியத்தை மகிழ்ச்சியாக மாற்றும். 

Latest Videos

click me!