viral colour idli: 5 நிமிசத்துல டின்னர்: அதுவும் குழந்தைகளுக்கு பிடிச்ச கலரில் - இப்படி ட்ரை பண்ணுங்க!

Published : Nov 23, 2026, 06:54 PM IST

viral colour idli: சாதாரண இட்லி மாவை பிரித்து, இயற்கை நிறங்களை சேர்த்து கலர் கலர் ஹெல்தி இட்லி செய்யலாம். இதை குழந்தைகள் பார்த்ததும் ஆர்வத்துடன் சாப்பிடுவார்கள்.

PREV
14
குழந்தைகளுக்கு பிடித்த கலர் இட்லி

இரவு உணவு நேரத்தில் குழந்தைகளுக்கு ஏதாவது வித்தியாசமாகவும், சத்தாகவும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களுக்கு, இயற்கையான வண்ணங்களில் தயாரிக்கப்படும் இந்த வண்ணமயமான இட்லி ஒரு சிறந்த தேர்வாகும். செயற்கையான உணவு வண்ணங்களுக்குப் பதிலாக, நம் வீட்டிலேயே எளிதில் கிடைக்கும் காய்கறிகள், கீரைகள், பூக்கள் மற்றும் சமையல் பொருட்களைக் கொண்டு ஆரோக்கியமான முறையில் இந்த இட்லிகளைத் தயாரிக்கலாம்.

24
இயற்கை வண்ணங்களுக்கான பொருட்கள்

பச்சை நிறம்: பசுமையான கீரை அல்லது கொத்தமல்லித் தழையை மிக்ஸியில் அரைத்து எடுக்கப்பட்ட சாறு.

நீலம் / ஊதா நிறம்: சங்குப்பூ இதழ்களை அரைத்து அல்லது சாறு எடுத்து இட்லி மாவுடன் கலக்கலாம்.

இளஞ்சிவப்பு / சிவப்பு நிறம்: பீட்ரூட் துண்டுகளை மிக்ஸியில் நன்கு அரைத்து மாவில் சேர்க்கலாம்.

ஆரஞ்சு நிறம்: துருவிய கேரட்டை நன்கு அரைத்து மாவில் கலக்கலாம்.

மஞ்சள் நிறம்: சிறிதளவு மஞ்சள் தூளை இட்லி மாவில் கலந்து மஞ்சள் நிறத்தைக் கொடுக்கலாம்.

சிவப்பு / ஆரஞ்சு-சிவப்பு சாயல்: நறுக்கிய தக்காளியை மிக்ஸியில் அரைத்து, இட்லி மாவுடன் நன்கு கலந்து எடுக்கலாம்.

பிரவுன் / சாக்லேட் நிறம்: சாக்லேட் பவுடரை இட்லி மாவுடன் நன்கு கலந்து குழந்தைகளுக்குப் பிடித்த சாக்லேட் சுவை மற்றும் நிறத்தில் உருவாக்கலாம்.

34
படி 1

கொத்தமல்லி, சங்குப்பூ, பீட்ரூட், கேரட் மற்றும் தக்காளி ஆகியவற்றைத் தனித்தனியாக மிக்ஸியில் அரைத்துத் தயார் செய்து கொள்ளவும். ஏற்கனவே வைத்திருக்கும் இட்லி மாவைச் சிறிய கிண்ணங்களில் தனித்தனியாகப் பிரித்து ஊற்றவும். ஒவ்வொரு கிண்ணத்திலும் மேற்கூறிய இயற்கை வண்ணச் சாறுகள், மஞ்சள் தூள் அல்லது சாக்லேட் பவுடர் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். இட்லி தட்டில் மாவை ஊற்றி, இட்லி பாத்திரத்தில் வைத்து மூடி ஆவியில் வேக வைக்கவும். வெந்தவுடன் வண்ணமயமான இட்லிகளை எடுத்து தட்டில் அடுக்கி, குழந்தைகளுக்குப் பிடித்த சட்னி அல்லது சாம்பாருடன் சூடாகப் பரிமாறலாம்.

44
இந்த இட்லியின் சிறப்புகள்

கடைகளில் விற்கும் செயற்கை வண்ணங்களைத் தவிர்த்து, இயற்கையான காய்கறிகள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்குப் பாதுகாப்பானது. பல வண்ணங்களில் இட்லிகளைப் பார்க்கும்போது குழந்தைகளுக்கு ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் தரும்; அதேசமயம் கீரை, கேரட், பீட்ரூட், தக்காளி போன்றவற்றின் சத்துக்களும் அவர்களுக்குக் கிடைக்கும். இட்லி மாவு தயாராக இருந்தால், காய்கறிகளை அரைத்து மாவில் கலந்து வேக வைப்பது மிகவும் எளிது.

Read more Photos on
click me!

Recommended Stories