Healthy & natural food colouring: கடைகளில் விற்கப்படும் செயற்கை ஃபுட் கலர்களுக்குப் பதிலாக, நம்ம வீட்டிலேயே சாதாரணமா கிடைக்கிற பொருட்களை வச்சு இயற்கையான ஜெல் ஃபுட் கலர் செய்யலாம். இனி எது செஞ்சாலும் நமக்குத் தேவையான கலரை பயமில்லாம சேர்த்துக்கலாம்.
நடுத்தர அளவுள்ள பீட்ரூட் மூணு எடுத்து தோல் சீவி, சின்னச் சின்னத் துண்டுகளா வெட்டிக்கணும். அதை மிக்ஸில போட்டு கொஞ்சம் தண்ணி ஊத்தி நல்லா நைசா அரைச்சு, வடிகட்டி சாறு எடுத்துக்கணும். அந்தச் சாறை ஒரு பேன்ல ஊத்தி, கொஞ்சம் சர்க்கரை சேர்த்து மிதமான தீயில கிண்டிக்கிட்டே இருக்கணும். ஜெல் பதத்துக்கு வந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிடலாம்.
25
கேரட் கலர்
கேரட்டையும் தோல் சீவி, சின்னத் துண்டுகளா நறுக்கி கொஞ்சம் தண்ணி சேர்த்து மிக்ஸில நல்லா அரைச்சு வடிகட்டிக்கணும். இதுலயும் கொஞ்சம் சர்க்கரை சேர்த்து அடுப்புல வச்சு, கேரட்ல இருக்குற பீட்டா-கரோட்டின் நல்லா வெளிய வர்ற மாதிரி மிதமான தீயில வேக வைக்கணும். இதுவும் ஜெல் பதத்துக்கு வந்ததும் இறக்கிடலாம்.
35
மஞ்சள் கலர் & ஆரஞ்சு கலர்
ரெண்டு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எடுத்து, கொஞ்சம் தண்ணி ஊத்தி கரைச்சுக்கணும். இதையும் ஒரு பேன்ல ஊத்தி, கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நல்லா கொதிக்க விடணும். மஞ்சளோட பச்சை வாசனை போய், கெட்டியான ஜெல் பதத்துக்கு வந்ததும் அடுப்பை ஆஃப் பண்ணிடலாம். தனியா ஆரஞ்சு கலர் செய்யணும்னு இல்லாம, மஞ்சள் கலரோட கொஞ்சமா பீட்ரூட் கலரை சேர்த்தாலே சூப்பரான ஆரஞ்சு கலர் கிடைச்சுடும்.
இந்த ஜெல் கலர்களை அப்படியே கொஞ்சமா எடுத்து சமையல்ல சேர்த்தாலே நல்ல கலர் கிடைக்கும். பீட்ரூட் ஜெல் நல்ல சிவப்பு கலரையும், மஞ்சள் ஜெல் நல்ல மஞ்சள் கலரையும் கொடுக்கும். செஞ்சு வச்ச ஜெல் கலர்களை ஆற வச்சு, ஒரு காற்று புகாத டப்பால போட்டு ஃப்ரிட்ஜ்ல வச்சுக்கலாம். எடுக்கும்போது ஈரமில்லாத சுத்தமான ஸ்பூன் வச்சு எடுத்தா நிறைய நாள் கெட்டுப்போகாம இருக்கும்.
55
பாதுகாப்பு மற்றும் நன்மை
வெளிய வாங்குற கலர்ல கெமிக்கல் இருக்கும்னு யோசிக்கிறவங்களுக்கு இது ரொம்ப நல்ல தீர்வு. பீட்ரூட், கேரட், மஞ்சள்னு உடம்புக்கு நல்லது செய்ற பொருட்களை வச்சு செய்றதால குழந்தைகளுக்கும் தயங்காம கொடுக்கலாம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர்/ உடல்நலப் பயிற்சியாளரை அணுகவும்.