Top 5 Detox Water: தண்ணீருக்கு டேஸ்ட் வேணுமா? டாப் 5 சூப்பர் டீடாக்ஸ் வாட்டர்!

Published : Oct 07, 2026, 02:37 PM IST

Detox Water: தண்ணீர் குடிக்க பிடிக்கவில்லையா? எலுமிச்சை, புதினா, ஆரஞ்சு, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள், மூலிகைகளைத் தண்ணீரில் ஊறவைத்து சுவையான டீடாக்ஸ் வாட்டராக குடிக்கலாம். தினசரி நீர் குடிக்கும் பழக்கத்தை எளிதாக்கும் வகைகள் இதோ.

PREV
16
டீடாக்ஸ் வாட்டர்

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியம். ஆனால், தண்ணீரே குடிக்க மாட்டீங்களா? சும்மா தண்ணீர் குடிக்க பிடிக்கலையா? அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு சூப்பர் ஐடியா. நறுக்கிய பழங்கள், காய்கறிகள், மூலிகைகள் ஆகியவற்றை தண்ணீரில் போட்டு ஊறவைத்து குடித்துப் பாருங்கள்.

புத்துணர்ச்சியான சுவையுடன் தண்ணீர் குடிப்பதையே ஒரு பழக்கமாக மாற்றிக்கொள்ளலாம். இதைத்தான் பொதுவாக டீடாக்ஸ் வாட்டர் (Detox Water) அல்லது இன்பியூஸ்ட் வாட்டர் (Infused Water) என்று அழைக்கிறார்கள்.

தண்ணீரில் எலுமிச்சை, வெள்ளரிக்காய், புதினா முதல் ஆரஞ்சு, ஆப்பிள், இஞ்சி வரை பல்வேறு பொருட்களைச் சேர்த்து வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். குறிப்பாக சர்க்கரை சேர்க்காத இன்ஃப்யூஸ்டு வாட்டர், சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்களுக்கு மாற்றாக இருக்கும்.

26
வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய டாப் 5 டீடாக்ஸ் வாட்டர்

எலுமிச்சை, பீட்ரூட், புதினா டீடாக்ஸ் வாட்டர்

சாதாரண தண்ணீர் குடிப்பது போரடிக்கிறதா? இனி தண்ணீரையே கொஞ்சம் சுவையாக மாற்றிப் பாருங்கள். மெல்லியதாக நறுக்கிய பீட்ரூட், சிடுசிடுப்பான எலுமிச்சைத் துண்டுகள், மணமணக்கும் புதினா இலைகள் இவை மூன்றையும் தண்ணீரில் சேர்த்தால் போதும். வண்ணமும், வாசனையும், புத்துணர்ச்சியான சுவையும் கொண்ட சூப்பர் டிரிங்க் தயார்.

பீட்ரூட் மற்றும் எலுமிச்சையை மெல்லிய வட்டத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். புதினா இலைகளை கைகளால் லேசாகக் கசக்கி, மூன்றையும் ஒரு பாட்டில் தண்ணீரில் சேர்க்கவும். இதை 1-2 மணி நேரம் வைத்து பின்னர் பருகலாம்.

எலுமிச்சை தரும் லேசான புளிப்பும், புதினாவின் புத்துணர்ச்சியான மணமும் தண்ணீருக்கு வித்தியாசமான சுவையைத் தரும். பீட்ரூட் சேர்வதால் தண்ணீருக்கு அழகான நிறமும் கிடைக்கும்.

குறிப்பாக சாதாரண தண்ணீர் குடிக்கப் பிடிக்காதவர்கள், அதிக சுவையூட்டிகள் அல்லது சர்க்கரை சேர்க்காமல் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள இது ஒரு சுவாரஸ்யமான வழியாக இருக்கலாம்.

36
டீடாக்ஸ் வாட்டர் - 2

வெள்ளரிக்காய் புதினா டீடாக்ஸ் வாட்டர்

குளிர்ச்சியான வெள்ளரிக்காய், மணமணக்கும் புதினா, இந்த இரண்டையும் தண்ணீரில் சேர்த்தால் போதும். சுவையான, புத்துணர்ச்சியான டீடாக்ஸ் வாட்டர் தயார்.

வெள்ளரிக்காயை நன்றாகக் கழுவி வட்ட துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் புதினா இலைகளைச் சேர்த்து 1 லிட்டர் தண்ணீரில் போடவும். 2-3 மணி நேரம் ஊறவைத்தால், வெள்ளரிக்காய் மற்றும் புதினாவின் சுவை தண்ணீரில் நன்றாக இறங்கும்.

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், உணவின் மூலமும் உடலுக்கு திரவம் கிடைக்க உதவுகிறது. புதினா சேர்ப்பதால் தண்ணீருக்கு புத்துணர்ச்சியான மணமும் சுவையும் கிடைக்கும்.

46
டீடாக்ஸ் வாட்டர் - 3

ஆரஞ்சு, எலுமிச்சை, புதினா டீடாக்ஸ் வாட்டர்

அரை ஆரஞ்சு, அரை எலுமிச்சையை மெல்லிய துண்டுகளாக நறுக்கி 1 லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும். இதனுடன் புதினா இலைகளைச் சேர்த்து 1-2 மணி நேரம் ஊறவைத்தால் போதும். சிட்ரஸ் பழங்களின் இயற்கையான மணமும் சுவையும் தண்ணீருக்கு புத்துணர்ச்சியான டேஸ்டை கொடுக்கும்.

இனிப்பு பானங்களுக்கு பதிலாக, சர்க்கரை சேர்க்காமல் சுவையான தண்ணீர் குடிக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சூப்பர் சிம்பிள் ஆப்ஷன்.

56
டீடாக்ஸ் வாட்டர் - 4

ஆப்பிள் - இலவங்கப்பட்டை டீடாக்ஸ் வாட்டர்

தண்ணீரில் ஒரு ஆப்பிள் துண்டு, கொஞ்சம் இலவங்கப்பட்டை சுவை மட்டும் வேற லெவல். ஆப்பிளை மெல்லிய துண்டுகளாக நறுக்கி, ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டையுடன் 1 லிட்டர் தண்ணீரில் சேர்க்கவும். 2-3 மணி நேரம் ஊறவைத்தால் போதும்.

ஆப்பிளின் லேசான இனிப்புச் சுவையும், இலவங்கப்பட்டையின் மணமும் சேர்ந்து தண்ணீருக்கு வித்தியாசமான, இதமான சுவையைத் தரும்.

66
டீடாக்ஸ் வாட்டர் - 5

இஞ்சி எலுமிச்சை புதினா டீடாக்ஸ் வாட்டர்

காரமான சாப்பாட்டுக்குப் பிறகு ஜில்லுனு ஏதாவது குடிக்கணுமா? இந்த இஞ்சி, எலுமிச்சை, புதினா வாட்டரை ட்ரை பண்ணிப் பாருங்க.

2-3 மெல்லிய இஞ்சி துண்டுகள், அரை எலுமிச்சை, சிறிதளவு புதினாவை 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து 1-2 மணி நேரம் ஊறவைத்து குடிக்கலாம்.

இஞ்சியின் லேசான காரத்தன்மை, எலுமிச்சையின் புளிப்புச் சுவை, புதினாவின் புத்துணர்ச்சியான மணம் என மூன்றும் சேர்ந்து தண்ணீருக்கு அசத்தலான சுவையைத் தரும்.

இறுதியாக

முக்கியமாக, இந்த அனைத்து டீடாக்ஸ் வாட்டரிலும் நீங்கள் விருப்பப்பட்டால் சியா விதைகளை ஊறவைத்து சேர்த்துக் குடிக்கலாம். மேலும், தண்ணீரைக் குடித்து முடித்த பிறகு அதில் ஊறவைத்த வெள்ளரிக்காய், பழங்கள், புதினா போன்றவற்றை விருப்பப்பட்டால் சாப்பிடலாம்.

தண்ணீரே குடிக்க மாட்டேன் என்று நினைப்பவர்களா? இந்த டீடாக்ஸ் வாட்டரை ஒருமுறை ட்ரை பண்ணிப் பாருங்க. சுவையும் மணமும் இருப்பதால் தண்ணீர் குடிப்பது போரடிக்காமல் இருக்கும். நாள்தோறும் போதுமான அளவு தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை உருவாக்க இது ஒரு சிம்பிளான வழியாக இருக்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories