Temple style puliyodharai: கோயில் புளியோதரை போல மணமும் சுவையும் வீட்டிலேயே பெறுவது எப்படி? தேவையான பொருட்கள், புளிக்காய்ச்சல், புளியோதரை பொடி மற்றும் செய்முறையை எளிய முறையில் தெரிந்துகொள்ளுங்கள்.
கோயில் புளியோதரைக்காகவே கோயிலுக்கு போகலாமே.. அந்த அளவுக்கு கோயிலில் வழங்கப்படும் புளியோதரையின் மணமும், புளிப்பு-காரம் கலந்த சுவையும் தனித்துவமானது. வீட்டில் எவ்வளவு முயற்சி செய்தாலும், கோயில் புளியோதரையில் வரும் அந்த ஸ்பெஷல் மணம் மட்டும் வரவில்லையே என்று பலரும் நினைப்பார்கள்.
ஆனால், சில முக்கியமான பொருட்களையும், சரியான பக்குவத்தையும் கடைப்பிடித்தால் வீட்டிலேயே கோயில் புளியோதரை மணம் வீசும் வகையில் சுவையான புளியோதரை செய்யலாம். அந்த சுவைக்குப் பின்னால் இருக்கும் முக்கியமான டிப்ஸ் என்ன, புளிக்காய்ச்சலை எப்படி தயாரிக்க வேண்டும், எந்தப் பொருட்களை சரியான அளவில் சேர்க்க வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம்.
26
கோயில் புளியோதரை மணத்தில் புளியோதரை செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
சாதத்திற்கு,
பச்சரிசி - 2 கப்
தண்ணீர் - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன்
புளிக்காய்ச்சலுக்கு
புளி - ஒரு பெரிய எலுமிச்சை அளவு
நல்லெண்ணெய் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 1\2 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 4 முதல் 5
பச்சை மிளகாய் - 1 அல்லது 2
கறிவேப்பிலை - 1 கொத்து
பெருங்காயம் - 1\4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1\4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளியோதரை பொடிக்கு
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6
கடலைப் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1\2 டீஸ்பூன்
எள் - 1 டீஸ்பூன்
மிளகு - 1\2 டீஸ்பூன்
சீரகம் - 1\2 டீஸ்பூன்
36
செய்முறை
அரிசியை நன்றாகக் கழுவி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேகவைக்கவும். சாதம் குழையாமல் இருப்பது மிகவும் முக்கியம். வேகவைத்த சாதத்தை ஒரு பெரிய தட்டில் பரப்பி, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி ஆறவிடுங்கள்.
புளியை வெந்நீரில் ஊறவைத்து நன்றாகக் கரைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த புளிக்கரைசலை அடுப்பில் வைத்து சிறிது நேரம் கொதிக்கவிட வேண்டும்.
அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடுங்கள். குழம்பு போல கொஞ்சம் கெட்டியாகத் தொடங்கியதும் அடுப்பை அணைக்கலாம்