மசாலா தோசை முதல் காஜு கத்லி வரை... ஸ்விகியில் மணிக்கு 97,545 ஆர்டர்கள்: இந்தியர்களின் ஃபேவரைட் மெனு இதுதான்!

Published : Nov 19, 2026, 05:02 PM IST

2026 தீபாவளிப் பண்டிகையில் ஸ்விகி (Swiggy) மணிக்கு 97,545 உணவு ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளது. காஜு கத்லி, மசாலா தோசை ஆதிக்கம் முதல் மும்பையில் பதிவான ரூ.1.34 லட்சம் டின்னர் பில் வரையிலான சுவாரஸ்யத் தகவல்கள் பற்றி பார்ப்போம்.

PREV
15
ஸ்விகியில் மணிக்கு 97,545 ஆர்டர்கள்... பட்டையைக் கிளப்பிய காஜு கத்லி

2026 தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் இந்தியர்கள் அதிகம் ஆர்டர் செய்த உணவுப் பட்டியலில் 'காஜு கத்லி' இனிப்பு முதலிடத்தைப் பிடித்துள்ளது. நவம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரையிலான மூன்று நாள் பண்டிகை வார இறுதியில், ஸ்விகி (Swiggy) நிறுவனம் மணிக்குச் சராசரியாக 97,545 உணவு ஆர்டர்களை டெலிவரி செய்துள்ளதாகத் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

25
மசாலா தோசை, பன்னீர் பட்டர் மசாலா, காஜு கத்லி ஆதிக்கம்

நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிலும் பாரம்பரியப் பண்டிகை உணவுகள் சமைக்கப்பட்டாலும், ஸ்விகியின் தீபாவளி தரவுகளின்படி மசாலா தோசை, காஜு கத்லி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா ஆகிய 3 உணவுகளே இந்தியா முழுவதும் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவுகளாக உருவெடுத்துள்ளன. இனிப்பு வகைகளைப் பொறுத்தவரை, தீபாவளிக் கொண்டாட்டத்தின் முடிசூடா மன்னனாக 'காஜு கத்லி' திகழ்ந்து உள்ளது. அதற்கு அடுத்தபடியாக மோதிலால் லட்டு (Motichoor Ladoo), ரசகுல்லா மற்றும் குலாப் ஜாமுன் ஆகிய இனிப்புகள் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன.

35
கடந்த ஆண்டை விட 10.7% ஆர்டர்கள் அதிகரிப்பு

பண்டிகைக் கால உணவுத் தேவை அதிகரித்ததன் காரணமாக, கடந்த ஆண்டு தீபாவளி காலத்தை ஒப்பிடும்போது இந்த ஆண்டு உணவு டெலிவரி ஆர்டர்கள் 10.7 சதவீதம் அதிகரித்துள்ளன. குறிப்பாக, நவம்பர் 6 முதல் 8-ஆம் தேதி வரையிலான மூன்று நாட்களில் சராசரியாக மணிக்கு 97,545 ஆர்டர்களை ஸ்விகி விநியோகித்துள்ளது. இதில் சில வாடிக்கையாளர்கள் செய்த பிரம்மாண்ட ஆர்டர்களும் கவனம் ஈர்த்துள்ளன. ஹைதராபாத்தில் ஒரு வாடிக்கையாளர் ரூ.41,895 மதிப்பிலான 57 பாக்கெட் விதவிதமான இனிப்புகளை ஆர்டர் செய்துள்ளார். மும்பையில் மற்றொரு வாடிக்கையாளர் தீபாவளி அன்று ரூ.41,772 செலவில் 7 இனிப்புப் பரிசுப் பெட்டிகளை (Sweet Hampers) ஆர்டர் செய்துள்ளார்.

45
ஹோட்டல்களில் குவிந்த குடும்பங்கள்

38.5% உயர்ந்த முன்பதிவு வீட்டுச் சமையலறைகளைத் தாண்டி, உணவகங்களுக்குச் சென்று குடும்பத்துடன் தீபாவளி விருந்து உண்பதும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 'ஸ்விகி டைன்அவுட்' (Swiggy Dineout) முன்பதிவுகள் 38.5% உயர்ந்துள்ளன. நவ.6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, டெல்லி & சென்னை ஆகிய பெருநகரங்கள் முன்பதிவில் முன்னிலை வகித்தன. வளர்ந்து வரும் சந்தைகளில் அகமதாபாத், ஜெய்ப்பூர் மற்றும் சண்டிகர் ஆகிய நகரங்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

55
ரூ.1.34 லட்சம் பில் மற்றும் மெகா குரூப் புக்கிங்

நவ.6-ம் தேதி மும்பையில் நடைபெற்ற பிரம்மாண்ட தீபாவளி விருந்து ஒன்றில், உணவு பில் மட்டும் ரூ.1,34,210 ஆகப் பதிவாகியுள்ளது. அதேபோல, குஜராத் மாநிலத்தில் குடும்பம் மற்றும் நண்பர்கள் குழுவாக உணவருந்தும் போக்கு அதிகமாகக் காணப்பட்டது; சூரத் மற்றும் அகமதாபாத் நகரங்களில் தலா 30 பேர் கொண்ட பெரிய குழுக்களுக்கான முன்பதிவுகள் நடைபெற்றதாக ஸ்விகி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories