BTS fans Healthy Korean Recipe: கொரியன் நாடகங்களில் பிரபலமான ஷிராட்டாக்கி ரைஸ் பிபிம்பாப் ஒரு ஆரோக்கியமான உணவாகும். குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட அரிசி, சிக்கன் மற்றும் காய்கறிகளை கோஜுஜாங் சாஸுடன் சேர்த்து இது தயாரிக்கப்படுகிறது.
கொரியன் நாடகங்களில் மிகவும் பிரபலமான ஷிராட்டாக்கி ரைஸ் பிபிம்பாப் ரெசிபி இதுவாகும். வழக்கமான வெள்ளை அரிசிக்குப் பதிலாக, மிகக் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட ஷிராட்டாக்கி ஷார்ட் கிரைன் ரைஸ் பயன்படுத்தி, குறைந்த எண்ணெயில் அதிக புரதச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாக இதனைத் தயாரிக்கலாம்.
26
அரிசி தயார் செய்தல்
இந்தக் கொரியன் உணவில் வழக்கமான வெள்ளை அரிசிக்குப் பதிலாகக் குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட, ஜவ்வரிசி போன்ற தோற்றமளிக்கும் 'ஷிராட்டாக்கி ஷார்ட் கிரெய்ன் ரைஸ்' பயன்படுத்தப்படுகிறது. இதைத் தண்ணீரில் நன்கு கழுவிவிட்டு, கொதிக்கும் நீரில் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் போதும்; ஒருவேளை இந்த அரிசி கிடைக்கவில்லை என்றால் சாதாரண வெள்ளை அரிசியையும் பயன்படுத்தலாம்.
36
சிறப்பு கொரியன் சாஸ் தயாரிப்பு
பிபிம்பாப் உணவிற்கு தனித்துவமான சுவையைத் தருவது அதன் சாஸ் ஆகும். ஒரு கிண்ணத்தில் கொரியன் பெர்மென்டட் சில்லி பேஸ்டான கோஜுஜாங், சோயா சாஸ், உப்பு, நல்லெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, எள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளுடன் உப்பு, மிளகுத்தூள், சோயா சாஸ், எலுமிச்சை சாறு மற்றும் சோள மாவு (கான்ஃபிளார்) சேர்த்து நன்றாகப் பிசறி ஊறவைக்கவும். பின்னர் வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிப் பூண்டு மற்றும் ஊறவைத்த சிக்கனைச் சேர்த்து 3 நிமிடங்கள் வேகவைத்து, தயார் செய்து வைத்துள்ள கோஜுஜாங் சாஸை ஊற்றி நன்கு கிளறி இறக்கவும்.
56
காய்கறிகள் மற்றும் கீரை தயார் செய்தல்
கீரையைச் சுடுநீரில் லேசாக வேகவைத்து எடுத்து, அதனுடன் சிறிது எண்ணெய், பூண்டு, சோயா சாஸ், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதே முறையில் காளான், கேரட் மற்றும் சுக்கினி போன்ற உங்களுக்குப் பிடித்த காய்கறிகளையும் குறைந்த எண்ணெயில் தனித்தனியாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
66
பிபிம்பாப் பரிமாறும் முறை
ஒரு அகலமான பௌலில் முதலில் வேகவைத்த ஷிராட்டாக்கி சாதத்தை வைத்து, அதன் மேல் வதக்கிய காய்கறிகள், கீரை மற்றும் சாஸ் கலந்த சிக்கன் துண்டுகளை வரிசையாக அடுக்கவும். இறுதியாக, புரதச்சத்தை மேலும் அதிகரிக்க ஒரு முட்டையைப் பொரித்து அதன் மேல் வைத்து, மீதமுள்ள சாஸுடன் நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.