Sunday special omelette chops: காரசாரமான நான் வெஜ் ரெசிபி; சிக்கன், மட்டன் எடுக்கலையா? அப்போ முட்டையில் இப்படி செய்யுங்க!

Published : Nov 29, 2026, 11:27 AM IST

Sunday special omelette chops: சிக்கன், மட்டன் இல்லாத ஞாயிற்றுக்கிழமைகளில் ஆம்லெட்டைச் சேர்த்து மிகக் குறைந்த நேரத்தில் சுவையான 'ஆம்லெட் சாப்ஸ்' செய்வது எப்படி என்று பார்ப்போம்.

PREV
15
ஆம்லெட் சாப்ஸ்

ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவப் பிரியர்களின் வீடுகளில் சிக்கன், மட்டன் அல்லது மீன் என மணக்க மணக்க சமையல் களைகட்டும். ஆனால், சில நேரங்களில் இறைச்சி வாங்க முடியாத சூழல் ஏற்படலாம் அல்லது சமைப்பதற்கு அதிக நேரம் இல்லாமல் போகலாம். அப்படிப்பட்ட நேரங்களில், வீட்டில் இருக்கும் முட்டையை வைத்தே மட்டன் சாப்ஸ் சுவைக்கு ஈடுகொடுக்கும் வகையில் ஒரு அட்டகாசமான காரசாரமான ரெசிபியைத் தயார் செய்ய முடியும்.

அதுதான் சுவையான 'ஆம்லெட் சாப்ஸ்'. மிளகு, சீரகம், சோம்பு ஆகியவற்றின் நறுமணத்துடன் வதக்கி அரைத்த மசாலா தொக்கில், மிருதுவான ஆம்லெட்டைச் சேர்த்து கொதிக்க வைத்துச் செய்யப்படும் இந்த உணவு, சுடச்சுட சாதத்துடன் பிசைந்து சாப்பிட வேற லெவல் சுவையில் இருக்கும். சப்பாத்தி, தோசைக்கும் இது மிகச்சிறந்த சைட் டிஷ்ஷாகும். குறைந்த நேரத்தில் நாவிற்கு ருசியான ஒரு அசைவ விருந்து படைக்க நினைப்பவர்களுக்கு இந்த ரெசிபி ஒரு வரப்பிரசாதம்.

25
தேவையான பொருட்கள்

முட்டை - 6

பெரிய வெங்காயம் - 2

பெரிய தக்காளி - 2

இஞ்சி மற்றும் பூண்டு

மிளகு - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

சோம்பு - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி தழை - சிறிதளவு

எண்ணெய்

உப்பு

35
படி 1: மசாலா விழுது தயாரித்தல்

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் மிளகு, சீரகம் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு வறுக்கவும். இவை பொரிந்ததும், இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தொடர்ந்து நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் மற்றும் இரண்டு பெரிய தக்காளியைச் சேர்த்து, அவை நன்கு குழைய வதங்கும் வரை கிளறவும். பின்னர் இதில் மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து அடுப்பை அணைக்கவும். இந்தக் கலவை நன்கு ஆறியதும், மிக்ஸி ஜாரில் போட்டுத் தண்ணீர் சேர்க்காமல் அல்லது மிகக் குறைவாகச் சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

45
படி 2: மிருதுவான ஆம்லெட் தயார் செய்தல்

ஒரு அகலமான பாத்திரத்தில் ஆறு முட்டைகளை உடைத்து ஊற்றி, தேவையான அளவு உப்பு மட்டும் சேர்த்து நுரை பொங்க நன்கு அடித்துக் கொள்ளவும். தோசைக்கல்லைச் சூடாக்கி எண்ணெய் தடவி, அடித்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றவும். அதன் மேல் சிறிதளவு மிளகுத்தூளைத் தூவி விடவும். ஆம்லெட் ஓரங்கள் வெந்து வரும்போது, கரண்டியால் ஓரங்களை ஒன்றாகச் சேர்த்து மடித்துத் தடிமனாகவும், குண்டாகவும் வரும்படி வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

55
படி 3: ஆம்லெட் சாப்ஸ் தயாரித்தல்

இப்போது மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும். தாளித்ததும் நாம் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வெங்காயம்-தக்காளி மசாலா விழுதை இதில் சேர்க்கவும். மசாலா கெட்டியாக இருந்தால் அரை கப் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கடாயை மூடி போட்டு, மசாலாவில் இருந்து எண்ணெய் நன்கு பிரிந்து தொக்கு பதத்திற்கு வரும் வரை மிதமான தீயில் சமைக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும், தயார் செய்து வைத்துள்ள ஆம்லெட்டை மசாலாவுடன் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், காரசாரமான ஞாயிறு ஸ்பெஷல் ஆம்லெட் சாப்ஸ் தயார்.

Read more Photos on
click me!

Recommended Stories