ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் மற்றும் தனியா ஆகியவற்றைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் மாற்றிக் கொள்ளவும். அதே எண்ணெயில் நறுக்கிய வெங்காயம், பூண்டு, சிறிய துண்டு புளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வெங்காயம் நன்கு வதங்கும் வரை கிளறி, ஆறவிடவும்.
அதே வாணலியில் விதை நீக்கிய பாகற்காய் துண்டுகளைச் சேர்த்து, அவை நன்கு மென்மையாகும் வரை எண்ணெயில் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.