இன்றைய அவசர வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவுகளைத் தேடி நாம் பல இடங்களுக்குச் செல்கிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அன்றாட உணவிலேயே பல ஆரோக்கிய ரகசியங்களைப் புதைத்து வைத்திருந்தார்கள் தெரியுமா? அந்த வகையில், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பரியமாக விரும்பிச் சாப்பிட்ட ஒரு உணவுதான் வெந்தயக்களி.
வெந்தயத்தின் தனித்துவமான சுவை, கருப்பட்டி அல்லது வெல்லத்தின் இனிப்பு, நல்லெண்ணெயின் மணம் என அனைத்தும் சேர்ந்து நாவில் கரையும் சுவையான உணவாக இது இருக்கும். குறிப்பாகப் பெண்களின் ஆரோக்கியத்திற்காகவும், மாதவிடாய் காலத்தில் உடல் நலனைப் பேணவும் பாரம்பரியமாக வெந்தயக்களி செய்து கொடுக்கும் வழக்கம் பல குடும்பங்களில் இன்றும் தொடர்கிறது.
கடைகளில் கிடைக்கும் உணவுகளைத் தேடாமல், வீட்டிலேயே மிக எளிமையாக இந்தச் சத்தான பாரம்பரிய உணவைச் செய்து சாப்பிடலாம். அப்படியானால், சுவையான வெந்தயக்களி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம்.