Sunday special karisoru recipe: சண்டே ஸ்பெஷல் ரெசிபி... மதுரை ஃபேமஸ் கறிச்சோறு இப்படி ட்ரை பண்ணுங்க!

Published : Nov 22, 2026, 10:36 AM IST

Sunday special karisoru recipe: மதுரை என்றாலே காரசாரமான அசைவ உணவுகளுக்குப் பெயர் போன ஊர். அந்த வகையில் மதுரையின் ஃபேமஸ் ஆனா கறிச்சோறு பார்ப்பதற்கு பிரியாணி போல ஆனால் உதிரி உதிரியாக இல்லாமல், சற்று குழைவான பதத்தில் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

PREV
15
தேவையான பொருட்கள்

சிக்கன்

பாசுமதி அரிசி

பாசிப்பருப்பு

கெட்டியான தேங்காய்ப்பால்

ரீஃபைண்ட் ஆயில்

பட்டை

கிராம்பு

ஏலக்காய்

அன்னாசிப்பூ

பிரியாணி இலை

பெரிய வெங்காயம்

சின்ன வெங்காயம்

தக்காளி

இஞ்சி பூண்டு விழுது

கொத்தமல்லித் தழை

புதினா இலைகள்

மஞ்சள் தூள்

மிளகாய் தூள்

மல்லித் தூள்

தயிர்

உப்பு

நெய்

25
படி 1

முதலில் அடுப்பில் குக்கரை வைத்து, தேவையான அளவு எண்ணெய் ஊற்றிச் சூடாக்கவும். எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, ஏலக்காய், அன்னாசிப்பூ, பட்டை, கிராம்பு ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். இதில் வெங்காயத்தை அதிக நேரம் வதக்கத் தேவையில்லை. வெங்காயத்துடன் நறுக்கிய தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்க்கவும்.

35
படி 2

அதனுடன் நறுக்கிய கொத்தமல்லித் தழை மற்றும் சிறிதளவு புதினா இலைகளைப் போட்டு ஒன்றாகக் கலக்கவும். தனித்தனியாக வதக்காமல் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்தே வேகவைக்கலாம். சுத்தம் செய்து வைத்துள்ள எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகளை குக்கரில் போட்டு லேசாகப் பிரட்டி விடவும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்த்து நன்கு கிளறவும். மிளகாய் தூளை விட மல்லித் தூள் சற்று கூடுதலாக இருப்பது காரத்தைச் சமநிலைப்படுத்தி நல்ல மணத்தைத் தரும்.

45
படி 3

ஊறவைத்த பாசிப்பருப்பு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, சிக்கனுடன் சேர்த்து குறைந்தது 5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். பருப்பு நன்கு வதங்கினால்தான் தண்ணீர் ஊற்றி வேகவைக்கும்போது சீக்கிரம் குழைந்து வரும். அதன்பின் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்துக் கிளறவும். கால் கப் கெட்டியான தேங்காய்ப்பாலை ஊற்றி, அதனுடன் 1 கப் அரிசிக்கு 1 ½ முதல் 1 ¾ கப் என்ற கணக்கில் தண்ணீர் சேர்க்கவும். சோறு சற்று குழைவாக இருக்க வேண்டும் என்பதால் வழக்கமான பிரியாணியை விடத் தண்ணீர் சற்று கூடுதலாக வைக்க வேண்டும். தண்ணீர் கொதிக்கும்போது உப்பு, காரம் சரிபார்த்துக்கொள்ளவும்.

55
படி 4

தண்ணீர் கொதித்ததும், ஊறவைத்த பாசுமதி அரிசியை போட்டு லேசாகக் கிளறவும். மேலே சிறிதளவு கொத்தமல்லித் தழை தூவி குக்கரை மூடவும். தீயை அதிகமாக வைத்து 3 விசில் வரும் வரை வேகவைத்து அடுப்பை அணைக்கவும். குக்கரில் பிரஷர் அடங்கியதும் மூடியைத் திறந்து, மேலே 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றவும். கரண்டியால் சாதத்தை அடியிலிருந்து எடுத்து, அரிசி மற்றும் பருப்பு நன்கு சேரும்படி மெதுவாக மசித்து கிளறி விடவும். சுடச்சுட இந்த மதுரை கறி சோற்றுடன் நிறைய வெங்காயம் போட்ட தயிர் பச்சடி சேர்த்து, ஸ்பூன் பயன்படுத்தாமல் கையால் பிசைந்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories