வாழைப்பழம் சாப்பிடுவது போல் எளிதாக வாழைக்காய் சாப்பிட முடியாது. ஆனால் வாழைக்காயிலும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது செய்யும் சத்துக்கள் நிறைய உள்ளன. வாழைக்காயில் உள்ள அத்தியாவசிய தாதுக்கள், சத்துக்கள் நமக்கு நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளைத் தருகின்றன. இதை சாப்பிட்டால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்று இப்போது பார்ப்போம்.
வாழைக்காயில் உள்ள சத்துக்கள்
வாழைக்காயில் கார்போஹைட்ரேட்டுகள், கோலின், நார்ச்சத்து, ஃபோலேட், கொழுப்பு, மெக்னீசியம், இரும்பு, மாங்கனீஸ், பாந்தோதெனிக் அமிலம், நியாசின், பாஸ்பரஸ், புரோட்டீன், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், சோடியம், தயாமின், சர்க்கரை, வைட்டமின் சி, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன.